கொஞ்ச மாதங்களுக்கு முன் வந்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தில், 500 மற்றும் 1000 ரூபாயை ஒழித்துவிடுங்கள். கறுப்பு பணம் ஒழிந்துவிடும் என்ற உரையாடல் வரும்.
ஒருவேளை மோடி அந்த படத்தைப் பார்த்துத்தான் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டாரோ?
என்ன அறிவிப்பு?
இன்று நள்ளிரவு முதல் (இன்னும் 23 நிமிடங்கள் இருக்கின்றன) 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதாம்.
சென்றால்தான் அது செல்வம்.
நம்மை விட்டு அது செல்லாது என்றால் அது எது என்றுமே செல்லாததுதான்.
இப்போ என்ன செய்வது?
வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ள வழிகள் உண்டு.
ஆனால், நம் பணம் வங்கியில் அல்லது கணக்கில் போடப்பட்டு மீண்டும் புதிய நோட்டுக்களாக தரப்படும்.
அதிகமான, கள்ள நோட்டு புழக்கம், கணக்கில் வராத பணம் இவற்றிற்கான ஒரு செக் இது.
இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் அரசியல் மற்றும் மதம் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் அடக்கிவிடுகிறார் செஸ்டர்டன்.
இந்த இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது பணம்.
ஒன்று, பணம் வேண்டும் என்று சொல்லும்.
மற்றொன்று, பணம் வேண்டாம் என்று சொல்லும்.
இந்த இரண்டு எதிர்துருவ கருத்துக்கள் இருந்தால்தான் சமூகம் முன்னேறிச் செல்லும்.
மோடியின் இந்த முன்னெடுப்பு நிறைய நேர்முக, எதிர்மறை உணர்வுகளைத் தூண்டியுள்ளது.
என்ன நடக்கிறது?
கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.

தந்தையின் பதிவு இன்று எனக்கு மிகவும் பிடித்த "லாத்தரென்" தேவாலயம் பற்றி
ReplyDeleteஇருக்கும் என நினைத்தேன். ஏமாற்றம் தான். நேற்று இரவு ரூபாய் 500,1000 என அத்தனை பேர் வயிற்றிலும் புளியைக் கரைத்த ஒரு விஷயம் பற்றிப் பேசுகிறார். தேவையான விஷயமும் கூட.பணத்தைப் பதுக்கிவைத்திருக்கும் முதலைகளுக்காக வீசப்பட்ட வலையானாலும் கூட,இன்று அது பதம் பார்ப்பதென்னவோ பாமர மக்களைத்தான்.வங்கிக் கணக்கின்றி சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த சாமான்யர்கள் வாய்விட்டுப் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. இன்று வீட்டில் விசேஷம் நடத்துபவர்கள்,அவசரத்தேவையில் உள்ளோர்...அவ்வளவு ஏன் ஒரு காய்கறி வாங்க வேண்டுமென நினைப்பவர்கள் கூடக் கையைப்பிசைந்து நிற்கும் நிலை.கருப்புப் பணத்தை அடியோடு ஒழித்து நாட்டை சுபிட்சத்துக்கு இட்டுச் செல்லத்தான் இந்த முயற்சி என்கிறார்கள்.நாடு நல்லா இருக்க இன்று நான்கு பேர் கஷ்டப்பட்டால் தப்பில்லை என்கிறார்கள்.சமூகம் முன்னேறிச்செல்லத் தேவைப்படும் 'எதிர்துருவக்' கருத்துக்கள் பற்றித்தந்தையும் பேசுகிறார்.கொஞ்சம் யோசித்தால் அதுவும் 'சரி' என்றே தோன்றுகிறது.பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.எப்படியோ நம் நாட்டு மக்களுக்கு ஒரு 'விடிவு' காலம் ஏற்பட அதற்கான விலையை நாம் அனைவருமே கொடுக்க முன் வருவதுதான் ஒரு நல்ல குடிமகனுக்கு அழகு.அதைச் செய்வோம்....அதையும் இன்றே செய்வோம்.எந்தப் பணியில் ஈடுபட்டிருப்பினும்,நாட்டுநடப்பின் பக்கமும் தன் கவனத்தைத்திருப்பும் தந்தையின் 'அக்கறைக்கு' என் பாராட்டுக்கள்!!!
தந்தைக்கு வணக்கம்.அருமையானதொரு பதிவு கண்டிப்பாக பொறுத்தார் பூமி ஆழ்வார் ஏன் அது நாமாக கூட இருக்கலாம்.நன்றியும் கூட.
ReplyDelete