Sunday, November 20, 2016

பேச வேண்டும்!

'அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்!'

(காண். மத்தேயு 12:46-50)

நாளை அன்னை மரியாள் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இயேசுவைச் சந்திக்க அவரின் தாயும் சகோதரர்களும் வருகின்றனர்.

இயேசுவைச் சந்தித்து நிறைய நாள்கள் ஆகிவிருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் வந்திருக்க வேண்டும். தன் தாய் மற்றும் சகோதரர்களைச் சந்திக்க முடியாமல் இயேசுவுக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கிறது போலும்.

கதவருகில் வந்து நின்றவர்களையும் கவனிக்காமல் கடமையில் கருத்தாய் இருக்கிறார் இயேசு.

அங்கிருந்த ஒருவர் இயேசுவுக்கு வந்திருந்தவர்களை அறிமுகம் செய்கின்றார்.

வந்துதான் நிற்கின்றார்கள்.

ஆனால், அந்த ஒருவர் சொல்வதைக் கவனித்தீர்களா?

'உம்மோடு பேச வேண்டும் என வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்' என்கிறார்.

சில நேரங்களில் இந்த ஒருவர் நம் வாழ்விலும் வருகிறார்.

இவருக்கு நாம் நினைப்பதும் தெரியும்.

குட்டி மரியா கோவிலில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்நாளில் நாம் குட்டியாய் இருந்த நாள்களை எண்ணிப்பார்க்கலாமே!

குட்டி விரல், குட்டி கை, குட்டி கால், குட்டி உதடு, குட்டி காது, குட்டி மூக்கு - சான்ஸே இல்லை!

1 comment:

  1. அன்னை மரியாள் கோவிலில் ஒப்புக்கொடுக்கபட்டதைக் கொண்டாடும் விழா...''காணிக்கை மாதா' என்று கூட சொல்வார்கள்.தாய் மரியாள் இயேசுவை சந்திக்க வந்திருப்பதை அவரிடம் நினைவுபடுத்தும் ஒருவரைப் பற்றி ' யாரோ ஒருவர்' எனக் குறிப்பிடுகிறார் தந்தை.நம் வாழ்க்கையிலும் கூட முறிந்து போன நம் உறவுகளைப் புதுப்பிக்க,இன்னும் நாம் மறந்து போன கடமைகளைப் பற்றி நமக்கு நினைவு படுத்த எத்தனையோ ' யாரோ ஒருவர்கள்' வரத்தான் செய்கிறார்கள்.அவர்களுக்கு நாம் செவிமடுத்தால் எத்தனையோ பேர்களின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகளைத் வரைந்த ஓவியர்களாவோம்.நாம் குட்டியாய் இருந்த நாட்கள் மட்டுமல்ல...தந்தை குறிப்பிடும் அனைத்து குட்டிகளுமே நம் உதடுகளில் புன்னகை தவழச் செய்பவைதான். அழகான அந்த இறுதிவரிக்காகத் தந்தைக்கு ஒரு சல்யூட்! பிறக்கும் வாரம் அனைவருக்கும் இனிமையை அள்ளி வழங்கட்டும்!!!

    ReplyDelete