Saturday, November 19, 2016

கதவுகள் மூடி

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை நாளை நிறைவு செய்கிறோம்.

'தந்தையைப் போல இரக்கம் உள்ளவர்களாய்' என்று நாம் கொண்டாடிய இரக்கத்தின் யூபிலி ஆண்டு எனக்கு இரட்டிப்பான ஆசீரைத் தந்தது.

'இரக்கத்தின் தூதுவர்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரக்கத்தைப் பற்றி போதிக்கவும், சிறப்பு ஒப்புரவு வழிபாட்டை நடத்தவும், திருப்பீடத்தால் மட்டுமே மன்னிக்கப்படக்கூடிய பாவங்களை மன்னிக்கும் பொறுப்பு பெற்றதும் என்னை திருத்தந்தை அவர்களுக்கு நன்றி கூறத் தூண்டுகின்றன.

இறைவனின் இரக்கத்தை உணர்ந்தால் மட்டுமே, அவரின் கண்கள் என் கண்களைச் சந்தித்தால் மட்டுமே நான் எனக்குக் கீழிருப்பவர்களின் கண்களைச் சந்திக்கவும், இரக்கம் காட்டவும் முடியும்.

நான் இறைவனின் இரக்கத்தை நிறைய நேரங்களில் உணர்ந்திருக்கிறேன்.

அந்த வாய்ப்புக்களுக்காக அவருக்கு நன்றி கூறுகிறேன்.

நிறைய ஆலயங்களில் மறையுரை நிறைவேற்றவும், ஒப்புரவு வழங்கவும் வாய்ப்பு பெற்றேன்.

நான் சந்தித்த ஒவ்வொருவரும் எனக்கு இறைவனின் செய்தியைக் கொண்டுவந்தனர்.

வாழ்க்கை பெரியது என்று வாழக் கற்றுக்கொடுத்தனர்.

இரக்கத்தின் யூபிலி கதவுகள் பூட்டப்படும் இந்நாளில் நம் இதயத்தின் கதவுகள் திறக்கட்டும் என்பதே என் மன்றாட்டாக இருக்கிறது.

அனைவருக்கும் யூபிலி வாழ்த்துக்களும், செபங்களும்!

2 comments:

  1. வாசிப்பவர்களை பிரமிக்க வைக்க மட்டுமல்ல,பொறாமைப்படவும் வைக்கக்கூடியதொரு பதிவு." இறைவனின் இரக்கத்தை உணர்ந்தால் மட்டுமே,அவரின் கண்கள் என் கண்களைச் சந்தித்தால் மட்டுமே நான் எனக்குக் கீழிருப்பவரின் கண்களைச் சந்திக்கவும் இரக்கம் காட்டவும் முடியும்".அவரின் இரக்கத்தைப் பெற்றதால் மட்டுமல்ல...அதை உணரவும் செய்த காரணத்தாலேயே தந்தை இப்பதிவில் தனக்கு கிடைத்ததாக சொல்லும் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கிறார்.இத்தகைய அரிய பாக்கியங்களுக்குச் சொந்தக்காரர் நம்மில் ஒருவர்; நம் மண்ணின் மைந்தர் என்பது நமக்கெல்லாம் பெருமை.கண்டிப்பாகத் தந்தையே! இரக்கத்தின் கதவுகள் பூட்டப்படும் இந்நாளில்
    நம் இதயத்தின் கதவுகள் திறக்கட்டும் என்பது தங்கள் மன்றாட்டுமல்ல; எங்களுடையதும் கூடத்தான்.இத்தனை நாளாகத் தங்களைத் தன் தோளில் தூக்கிச்சுமந்த இறைவன் இனியும் தங்களுக்குத் தன் 'உடனிருப்பைத்' தொடருவாராக.தாங்கள் தங்களின் சொல்லாலும்,செயலாலும் அதிக மனங்களை இறைவன் பால் திருப்பக் கூடிய ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்பதே தங்களுக்காக நான் செய்யும் செபம்.இறைவன் தங்களுக்கு நல்ல உடல்,உள்ள சுகம் தந்து தங்களின் பணி சிறக்க உதவுவாராக! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous11/20/2016

    Yesu heart touching blog. Happy to hear from you great things.God bless us

    ReplyDelete