'என் கற்பாறையாகிய ஆண்டவர் போற்றி!'
(திபா 144)
இன்று எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழா.
நன்றித் திருப்பலி எங்கள் பாப்பிறை குருமாணவர் இல்ல ஆலயத்தில் நடந்தது.
சிரோ-மலபார் என்னும் ரீதியில் திருப்பலி இருந்தது.
அன்றுக்கும் இன்றுக்கும் ஒப்பிடும்போது மாணவர் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருக்கிறது.
மற்றபடி அன்றைவிட இன்று இல்லம் வளர்ந்திருக்கிறது.
பாப்பிறை ஆலயம் பனந்தோப்பு மாதிரியில் கட்டப்பட்டிருக்கும். இன்று அதற்கு வண்ணம் தீட்டி மெருகேற்றியிருக்கிறார்கள்.
'என் கைகளுக்கு போர்ப்பயிற்சி கொடுப்பவர் ஆண்டவரே' என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள்தாம் இன்று என் உதட்டில் இருந்தன.
அருள்பணி நிலைக்கான பயிற்சி மற்றும் தொட்டிலாக இருந்த இந்த இல்லத்தில் மீண்டும் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி.

ஒவ்வொரு முறையும் இந்தப் 'பாப்பிறை குருமாணவர் இல்லம்' பற்றிப் பேசும் போதும் தந்தையின் உள்ளத்தில் பெருக்கோடும் நன்றிப்பெருக்கைப் பார்க்க முடிகிறது." வளர்த்த கடாயே மார்பில் முட்டியது போல" எனும் சொலவடை பரிட்சயமாகிப் போய்விட்ட இந்நாட்களில் தந்தை இக்குருமாடத்தை தன் 'தாய்' ஸ்தானத்தில் வைத்துப்பார்ப்பது பெருமைக்குரிய விஷயம்.மாணவரின் எண்ணிக்கைக் குறைந்திடினும் இன்று இல்லம் வளர்ந்திருக்கிறது எனும் கூற்று குருமாணவர் பயிற்றுவிக்கப்படும் தரமும் உயர்ந்துள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது."என் கைகளுக்குப் போர் பயிற்சி கொடுப்பவர் ஆண்டவரே!" இது நம் எல்லோர் உதட்டிலும் உறைந்திருக்க வேண்டிய திருப்பாடல் தான்.தந்தையே! இன்று கல்லூரி விழாவைக் கொண்டாடும் தங்களுக்கும்,அங்கு பயிற்றுவிக்கும் மற்றும் பயிற்றுவிக்கப்படும் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். தொட்டிலில் சிறுவனாய் இருந்த தங்களை வளர்த்து விட்ட இந்தப் பாப்பிறை குருமடம், தங்களைப்போல இன்னும் பல சிறப்பான குருக்களை உருவாக்கிட வேண்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!!!
ReplyDelete