Monday, November 14, 2016

வெதுவெதுப்பாய்

'நீ குளிர்ச்சியாகவும் இல்லை. சூடாகவும் இல்லை.
குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்.
இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.'

இலவோதிக்கிய நகர் திருச்சபைக்கு எழுதும்போது தூய யோவான் மேற்காணும் வார்த்தைகளைச் சொல்கின்றார்.

தமிழில் 'ரெண்டுங்கெட்டான்' என்று சொல்வோம்.

இங்கிட்டும் சேராம, அங்கிட்டும் சேராம இருக்கும் ஒரு நிலை.

சாயங்காலம் 5 மணிக்கு மீட்டிங் என அறிவிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.

அப்படி வைத்தால் 4 மணிக்கு விளையாடவும் போக முடியாது. 6 மணிக்கு உட்கார்ந்து படிக்கவும் முடியாது. இப்படி 5 மணி ப்ரோக்ராம் மற்ற இரண்டு ப்ரோக்ராம்களை கெடுத்துவிடுகிறது.

வெதுவெதுப்பாய் இருப்பது என்பது யார்பக்கமும் சைட் எடுக்காமல் எல்லாருக்கும் நல்லவராக அல்லது நியூட்ரலாக இருக்க நினைப்பது.

சில நேரங்களில், 'நான் நியூட்ரல்' என சொல்லிக்கொள்வதுண்டு.

ஒரு எலியின் வாலை யானை தன் காலால் மிதித்துக் கொண்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த எலியிடம் போய், 'நான் நியூட்ரல்' என்றால், அதற்கு அந்தப் பதிலால் ஒரு பயனும் இல்லை.

நான் அதன் பக்கம் நின்று யானையின் காலை உயர்த்தி அதன் வாலை விடுவித்தால்தான் அதற்குப் பயன் உண்டு.

நாளைய நற்செய்தியில் நாம் காணும் சக்கேயுவும் வெதுவெதுப்பான தண்ணீராக இருக்கின்றார்.

ஆனால், இயேசுவை சந்தித்தவுடன் மாற்றம் பெறுகிறார்.
அவரின் இரக்கத்தால் பற்றி எரிந்து கொதிக்கின்றார்.

3 comments:

  1. விவிலியத்தில் வரும் ' ஒன்று சூடாக இரு அல்லது குளிர்ச்சியாக இரு.ஆனால் வெதுவெதுப்பாக மட்டும் இராதே' ...எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.ஏனெனில் நம்மில் பலர் அன்றாடம் சந்திப்பது இப்படிப்பட்ட வெதுவெதுப்பான இரண்டும் கெட்டான்களைத்தான்.இவர்கள் தாங்கள் நினைத்ததை செய்ய இயலாத,முதுகெலும்பில்லா மனிதர்கள்.எல்லோருக்கும் நல்லவர் போல் நடிப்பதை நியூட்ரல் என எப்படிச் சொல்ல முடியும்? சூடாகவோ,குளிராகவோ இருப்பவர்கள் நல்லது செய்திடினும் அடுத்தவரின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாவார்கள்.அதுதான் நல்லவராயிருப்பதற்கு ஒருவர் கொடுக்கும் விலை.ஆனாலும் ஆண்டவரின் பார்வை படுவதோ இந்த 'வெதுவெதுப்பானவர்கள்' மீதுதான்....ஒரு சக்கேயு போல. நல்லவனாயிருந்து சாதிக்க முடியாததை இப்படி வெதுவெதுப்பான சக்கேயுவாக இருந்து சாதிப்பது தான் புத்திசாலித்தனம் என்று தோன்றுகிறதல்லவா? ஆமாம் ...அப்பொழுதுதானே இறைவனின் இரக்கத்தால் நாமும் பற்றி எரிய முடியும்? நேற்றைய தினம் கொஞ்சம் குழப்பிவிட்டாலும் இன்று தெளிவான சில சிந்தனைகளைத் தந்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. GITA - New York

    Jesus' desire that I be "warm" to Him is understandable...
    Anyone loves a warm and cuddly "Gita"!
    Including Jesus...

    But why does He desire that I be cold?
    Numb and freezy?

    ReplyDelete