Sunday, March 7, 2021

இடறலுக்கு உட்படுத்துவது

இன்றைய (8 மார்ச் 2021) நற்செய்தி (லூக் 4:24-30)

இடறலுக்கு உட்படுத்துவது

தன் சொந்த ஊரான நாசரேத்துக்கு வருகின்ற இயேசு, தன் சொந்த இனத்தாரும், ஊராரும் தன்னைக் குறித்தும், தன் எளிய பின்புலம் குறித்தும் இடறல்படுவதைக் காண்கின்றார். 

'இறைவாக்கினர் எவரும் தன் சொந்த ஊரில் மதிப்பு பெறுவதில்லை' எனச் சொல்லும் அவருடைய வார்த்தைகளைத் தொடர்ந்து, தன் சொந்த ஊர் மக்களை அவர் இடறல்பட வைக்கின்றார்.

முதல் ஏற்பாட்டில் எலியா மற்றும் எலிசா இறைவாக்கினர்கள் அந்நிய நாட்டவர்களால், புறவினத்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டும் இயேசு, அந்தப் புறவினத்து மக்களின் நம்பிக்கை கூட உங்களுக்கு இல்லையே என மறைமுகமாகக் கடிந்துகொள்கின்றார்.

இவ்வாறாக, தன் சொந்த ஊர் மக்களை இடறலுக்கு உட்படுத்துகின்றார் இயேசு.

அப்படி உட்படுத்துவதன் நோக்கம் அவர்களுடைய மனமாற்றத்தை தூண்டுவதற்கே.

ஆனால், அவர்களோ இயேசுவை அழித்துவிட முயல்கின்றனர்.

இன்றைய நாளில் இறைவன் நாம் தவறு செய்யும்போது நம்மையும் நம் மனச்சான்று வழியாக இடறல்பட வைக்கின்றார். இடறலுக்கு உட்படும் நாம் உடனே எழுந்து கொள்வது நலம்.

1 comment:

  1. பல நேரங்களில் நம்மை அடுத்தவர்கள் திருந்த வேண்டுமென நாம் நல்ல மனத்தோடு செய்யும் காரியம் நமக்கே வினையாய் முடிந்து விடுகிறது. இங்கே இயேசு “இறைவாக்கினர் எவரும் சொந்த ஊரில் மதிப்புப் பெறுவதில்லை” என்று சொன்னதற்கும் நடந்தது அவரின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே.

    தான் மனம் மாறுவார்கள் என்று நினைத்த மக்கள் அவரை ஒழிக்கத்திட்டமிடுகிறார்கள். நாமும் கூடத் தவறு செய்கையில் நம்மை எச்சரிக்கும்....இடறல் படுத்தும் இயேசுவைப் புரிந்து கொள்கிறோமா? புரிந்து கொள்வது மட்டுமல்ல.....உடனே எழுந்து கொள்வதும் நலம் என்கிறார் தந்தை. செவிமடுப்போம்.

    பதிவை வாசிப்பவரின் மனத்துக்குள் அசரீரியாக ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete