Thursday, August 4, 2022

வாழ்வுக்கு ஈடாக

இன்றைய (5 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 16:24-28)

வாழ்வுக்கு ஈடாக

தமிழில் பொதுமொழிபெயர்ப்புக்கு நாம் கடந்து சென்றபோது நம் காதுகளுக்கு எளிதாக ஒலிக்காத சில வாக்கியங்களில் ஒன்றை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்: 'மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?' (காண். மத் 16:25)

இதற்கு முந்தைய மொழிபெயர்ப்பில், 'தம் ஆன்மாவை', 'தம் ஆன்மாவுக்கு' என்று இருந்தது.

கிரேக்க மூலபாடத்தில், 'ப்ஸூகே' என்ற பதம் உள்ளது. இந்தச் சொல்லை மத்தேயு நற்செய்தியாளர் 16 முறை பயன்படுத்துகின்றார். 16 முறையும் ஐந்து பொருள்களில் பயன்படுத்துகின்றார்: ஒன்று, ஆவி, அல்லது உயிர் மூச்சு.இரண்டு, மனித ஆன்மா. மூன்று, நம் எண்ணங்கள், விருப்பங்கள், மற்றும் தெரிவுகள் உறையும் இடம். நான்கு, மனிதரின் தான்மை. ஐந்து, தனி மனிதர்.

காண்பவை, காணஇயலாதவை என உலக எதார்த்தங்களை இரு வகைகளாகப் பிரிக்கின்ற நற்செய்தியாளர், காண்பவற்றுக்காக காண இயலாதவற்றை விட்டுவிடலாகாது என எச்சரிப்பதுடன், காணஇயலாதவையே நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன என அறிவுறுத்துகின்றார்.

பணம், புகழ், பெயர், மதிப்பு ஆகியவை காணக்கூடியவை. இவற்றையும் தாண்டிய தன்மதிப்பு, மாண்பு, தான்மை, இறைச்சாயல் ஆகியவை காண இயலாதவை.

சீடத்துவம் என்பது காணாதவற்றை நோக்கி நம் மனத்தைச் செலுத்துவது.

பனிமய அன்னையாக நாம் நினைவுகூர்கின்ற நம் அன்னை கன்னி மரியா காணாதவற்றை நோக்கியே வாழ்ந்தார்.


No comments:

Post a Comment