'தந்தையின் திருவுளப்படி செய்படுவோர் பெறும் பரிசை' வாக்குறுதி தரும் இயேசு நாளைய நற்செய்தியில் (காண். மத் 7:21,24-27) 'பாறை மீது கட்டுதல்,' 'மணல் மீது கட்டுதல்' என்ற இரு உருவகங்களைக் கையாளுகின்றார்.
'பாறை மீது கட்டுதல்' - 'தந்தையின் திருவுளம் நிறைவேற்றுதல்'
'மண் மீது கட்டுதல்' - 'தன் சொந்த திருவுளம் நிறைவேற்றுதல்'
நம் மனித உள்ளத்தில் ஒரு மணித்துளி நேரத்தில் ஓராயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. இந்த எல்லா எண்ணங்களின் படி வாழ முயற்சி செய்தால் நாம் பைத்தியமாகிவிடுவோம். இப்படி பல நிலைகளில் சிதறிக்கிடப்பதுதான் மண். மண் துகள்களில் ஒன்று சரிந்தால் அடுத்தடுத்து என எல்லாம் சரிந்துவிடும்.
ஆனால் இறைவனின் திருவுளம் எப்போதும் ஒன்றுபோல இருக்கிறது. அது பாறை போன்றது. பாறையில் முன்பாறை, பின்பாறை என்று எதுவும் இல்லை. பாறை ஒன்றாக இருக்கிறது. பாறை நகராமல் இருக்கிறது.
கன்னிமரியாளுக்கு இறைவன் கிறிஸ்து பிறப்பு செய்தியை அறிவிக்கிறார். அது அவரின் திருவுளம். அது அப்படியே நடந்தேறுகிறது. அந்தத் திருவுளம் மாற்றத்திற்கு உட்படாமல் இருக்கிறது. மரியாளைப் பார்த்து இன்று மங்கள வார்த்தை சொன்ன கபிரியேல் அதற்கு அடுத்த நாள் அவரிடம், 'நீ வேண்டாம். வேற ஒரு ஆளைப் பார்த்தாயினற்று' என்று சொன்னால் எப்படிஇருக்கும்?
கடவுளின் திருவுளம் எப்போதும் ஒன்றுபோல இருப்பது.
இன்று என் வாழ்வு அலைக்கழிக்கப்படுகிறதா?
அல்லது அமைதியாக நிற்கிறதா?
அலைக்கழிக்கப்படுகிறது என்றால் அந்த வாழ்வில் என் திருவுளம்தான் மேலோங்கியிருக்கிறது.
அமைதியாக இருக்கிறது என்றால் அங்கே அவரின் திருவுளம் ஆட்சி செய்கிறது.
நம்முடைய அன்றாடம் வாழ்வைப் பிரதிபலிக்கும் ஒரு பதிவு. ஆம்....சில சமயங்களில் நாம் ஒரு காரியத்தில் ஈடுபடும் போது நமது மனம் தெளிந்த நீரோடையாக இருப்பதும், அதுவே இன்னும் பல வேளைகளில் இதுவா,அதுவா,வேண்டுமா,வேண்டாமா என சஞ்சலப்படுவதும் நமக்கு ஒன்றும் புதிதல்ல.'சஞ்சலம்' என ஒன்று வந்துவிட்டாலே அது தீர யோசிக்கப்பட வேண்டிய விஷயமாகி விடுகிறது.அந்நேரங்களில் நமக்கு முன்னோடியாகத் திகழ வேண்டியவர் " இதோ ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்ற நம் அன்னைதான்,எந்த சலனத்துக்கும் இடம் கொடாமல் இறைவனின் சித்தத்தை செயல்படுத்துவதை மட்டுமே தன் குறிக்கோளாய் கொண்டிருந்ததால் தான் அவளால் " இறைவனின் தாயாக" முடிந்தது.மனத்தளவில் சஞ்சலப்படாதவர்கள் தான் வாழ்க்கையில் " சாதனை வீர்ர்கள்" ஆகின்றனர்.நம் வாழ்க்கையை அலசிப்பார்க்கும் நேரமிது.....இறை சித்தத்திற்கு இசைந்து நான் பாறைமீது வீடு கட்டுகிறேனா? இல்லை... என் சித்தமே பெரிதென்று மண்மேடையை என் இல்லாமாக்குகிறேனா? யோசிக்க வைத்த தந்தையை ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக!
ReplyDelete