Friday, September 30, 2016

சின்ன சின்ன

'வானிலிருந்து ரோஜா மலர்களை அள்ளித் தெளிக்கும்
எங்கள் சின்ன ராணி குழந்தை தெரசா...'

ஒவ்வொரு திருப்பலி நடு செபத்திலும் இப்படித்தான் சிறுமலர் குழந்தை தெரசம்மாளை வாழ்த்தி செபிப்பார் எங்கள் குருமட முன்னாள் அதிபர் அருள்தந்தை. ஹெர்மஸ் மொடுதகம் அவர்கள்.

நாளை இந்த சின்ன ராணியின் திருநாள்.

நாளை அக்டோபர் திங்கள் முதல் நாள். அக்டோபர் திங்களை நாம் செபமாலை திங்கள் என சிறப்பிக்கின்றோம்.

நாம் பத்து நாட்களாக முதல் வாசகதத்தில் வாசித்துக் கொண்டுவந்த யோபு நூல் நாளை நிறைவடைகிறது.

'யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசி வழங்கினார்' என்று சொல்கிறார் ஆசிரியர்.

யோபிற்கு மூன்று மகள்கள் பிறக்கின்றனர்.

முதலாமவள் 'எமிமா' - 'எம்' என்றால் 'நாள்' அல்லது 'பகல்.' 'எமிமா' என்றால் எபிரேயத்தில் 'பகலைப்போல பளிச்சென்று இருப்பவள்' என்று பொருள்.

இரண்டாமவள் 'கெட்சியா' - 'கெட்சியா' என்றால் 'இலவங்கம்' அல்லது 'ஏலக்காய்' என்பது பொருள். ஏலக்காய் போல மணமானவள் இவள்.

மூன்றாமவள் 'கேரன்ஹப்புக்' - 'கேரன்ஹப்புக்' என்றால் கண்மை என்பது பொருள்.

மூன்று மகள்களின் பெயர்களும் 'அழகு' அல்லது 'இனிமை'யோடு தொடர்புடையவை.

2016ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்கள் இன்றுடன் நிறைவடைகின்றன. நாளை நாம் தொடங்கும் புதிய மாதத்தில் முன்னைய நாள்களை விட ஆண்டவர் இன்னும் அதிகம் ஆசி வழங்கக் காத்திருக்கிறார்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:17-24), 'உங்கள் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று மகிழுங்கள்' என தன் சீடர்களிடம் சொல்கிறார் இயேசு.

சின்ன ராணி குழந்தை தெரசாவும் தன் அப்பாவிடம் வானத்து நட்சத்திரங்களைக் காட்டி அங்கே தன் பெயர் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்வாள்.

இளவல் - அழகி - சின்ன ராணி.

இவளின் மறைபரப்பு தாகத்தாலும், இவளின் எழுத்துக்களாலும் இந்த இளவலை 'மறைவல்லுநர்' எனவும், 'மறைபோதகப் பணியின் பாதுகாவலி' எனவும் அழைக்கிறது திருஅவை.

வாழ்வின் பெரிய விஷயங்கள் சின்னஞ்சிறியவற்றில்தான் இருக்கின்றன என்பதை உணர்த்தியவள் இந்த சின்ன ராணி.

சின்ன சின்ன வழிகள் வழியாகவே வாழ்க்கை.

3 comments:

  1. ஆசீர்வாதங்களை அள்ளித் தெளிக்கும் ஒரு பதிவு. நாளை நாம் நினைவு கூறும் சிறுமலர் குழந்தை தெரசா புனிதர்களில் அந்தோணியார்,செபஸ்தியார் போல புனிதைகளில் அதிகம் பேசப்படுபவர்; மக்களால் நேசிக்கப்படுபவர். தன் இளம் பிராயத்திலேயே இம்மண்ணைப்பற்றி நினைத்ததைவிட விண்ணைப்பற்றி அதிகம் யோசித்தவர்.தன் இளமையை சிந்தாமல் சிதறாமல் இறைவனுக்கு அர்ப்பணமாக்கிய இந்த அழகுப்பதுமை இன்று திருஅவைக்கு மட்டுமல்ல...பல குடும்பங்களுக்கும் பாதுகாவலி. இவளைப்பற்றிய நினைவுகளைத் தந்தை யோபுவின் குடும்பத்துடன் இணைப்பது பொருத்தமானதொன்றாக உள்ளது.யோபுவின் முன்னைய நாட்களை விடப் பின்னைய நாட்களின் ஆசீர்வாதம் குறித்துப் பேசும் தந்தை அவரது பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் விதம் பெண்மக்கள் இல்லாதவர்களை ஏங்கவைப்பது போல் உள்ளது.தான் சொல்ல வந்த விஷயத்தை அட்சரம் பிசகாமல் எடுத்துரைக்கும் தந்தையின் எழுத்து நடைக்காக மட்டுமல்ல....நாளை தொடங்கவிருக்கும் புதிய மாத்த்தில் முன்னைய நாட்களைவிட இன்னும் ஏராளமான ஆசிகளை வழங்க இறைவன் காத்திருக்கிறார் எனும் நல்ல செய்திக்காகவும் தந்தையைப் பாராட்டியே தீரவேண்டும்.வாழ்வின் பெரிய விஷயங்களை சிறியவற்றின் மூலம் சாதித்த நாளைய கதாநாயகி 'சின்னராணி' பிறக்கப்போகும் புதிய மாத்த்தில் நமக்கு 'உந்துசக்தியாய்' இருக்கட்டும். ஆமாம்...."சின்ன சின்ன வழிகள் வழியாகவே வாழ்க்கை"...., நச்சென்ற நறுக்கு தெறித்தாற்போன்ற இந்த வார்த்தைகளுக்காக தந்தைக்கு ஒரு 'சபாஷ்!'....பிறக்கப் போகும் இந்த 'செபமாலைத்திங்களில்' நம் செபமாலைகளை அன்னையின் கழுத்தில் அணிவிப்போம்.புதிய மாதம் அனைவருக்கும் வளங்களையும்,நலன்களையும் வாரி வழங்கட்டும்!!!

    ReplyDelete
  2. GITANJALI A BERNARD
    New York

    What a riveting beauty this Therese of Child Jesus has been!
    The picture is worth a thousand words.
    She is indeed the embodiment of France's best...

    Then the daughters of Job.
    The new batch [he had lost 3 of them previously] possess such wonderful names.
    The Bible states, "In all the land no other women were as beautiful as the daughters of Job" [Job 42:15].
    I am sure it took a man - not a woman - to write that extraordinarilyy descriptive sentence.

    I then thought:
    About this blog in Tamil by Fr. Yesu Karunanidhi.
    About the latest events in the region where Tamil is being spoken and written - with so much of classical respect for women in general.

    Why are Tamil women not everyone's Jemimah, Keziah and Keren-happuch?
    Why so many heinous crimes and heartless butchery?

    Why are their throats being sliced and slit?
    Why so much bloodshed?
    In the train stations, class rooms and prayer halls?
    From Chennai to Thoothukudi and in between?

    Why so much of tears in the lives of Job's beautiful daughters of Tamil Country?
    In homes and outside them?
    Within marriages and in single lives?

    One could argue that these criminalities do not take place in “our circles”.
    Let me raise a question: Is Christian Faith and its Praxis a matter of our private “circles” and “safe enclosures”?

    ReplyDelete
  3. She is a little sweet flower with full of heavenly fragrance...

    ReplyDelete