நாளைய நற்செய்தியில் (காண். லூக் 9:57-62) இயேசுவைத் தேடி மூன்றுபேர் வருகின்றனர். அவரிடம் வரும் மூன்றுபேருக்குமே ஓர் ஆசை - இயேசுவைப் பின்பற்றுவது!
ஆனால், தன்னைப் பின்பற்றுவதற்காக வரும் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை இயேசு.
தன்னைப் பின்பற்றுவது கடினம் என்ற எதார்த்தத்தை மட்டும் சொல்கிறார்.
கடந்த வாரம் எங்கள் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்களுக்கான ஆண்டுத்தியானம் நடைபெற்றது. தியானத்தை வழிநடத்திய அருள்தந்தை, 'இறைவன் தகுதியில்லாதவர்களை அழைக்கிறார்' என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்படி அவர் சொல்லும்போதெல்லாம் தமிழ்சினிமாவின் திரைக்கதைதான் நினைவிற்கு வந்தது.
இப்போ கொஞ்ச நாளா வரும் படங்களில் அப்படித்தான் காட்டப்படுகின்றன.
வேலையில்லாமல், ஊரைச் சுற்றிக்கொண்டு, பெண்களைக் கிண்டல் செய்து கொண்டு, குடித்துக் கொண்டு, ஓடுகிற பஸ்சில் சும்மா சுற்றித் திரியும், கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் சரிவரப்படிக்காத ஹீரோவை தேடி தேடி காதலிக்கிறார் ஹீரோயின்.
ஏன்! நல்லா படிச்ச, நல்ல வேலையில் இருக்கும், குடிக்காத, புகைபிடிக்காத, தன் பெற்றோருக்கு கீழ்ப்படியும், மற்றவர்களை மதித்து நடக்கும் மனிதர்களை இவர்கள் லவ் பண்ணுவதில்லை. பல திரைப்படங்களில் இத்தகைய கதாபாத்திரங்கள் பிழைக்கத் தெரியாத மனிதர்களாகவும், கேலிப்பொருள்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.
நம் திரைப்படங்கள் எதைத்தான் நமக்கு சொல்ல வருகின்றன?
ஒன்றும் சொல்ல வரவில்லை.
செல்லுலாய்டில் செதுக்கப்படுவதெல்லாம் வாழ்க்கை அல்ல.
அப்படி ஒரு பிரம்மையில் தன்னைச் சுற்றி வந்தவர்களின் கனவுகளைத்தான் துடைத்துப் போடுகின்றார் இயேசு.
இயேசுவைப் பின்பற்றுதல் என்பது மிகவும் கடினமே.
தன்னிடம் லவ்வை வந்து சொல்லும் இளவலை நிராகரிக்கும் மற்றொரு இளவல்போல போகிற போக்கில் தன்னிடம் வருபவர்களை நிராகரிக்கின்றார் இயேசு.

தந்தைக்குக் கோபம் தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் கதாநாயகிகளின் மீதா இல்லைத் தன்னைத் தேடி வருபவர்களை நிராகரிப்பது போல் மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் இயேசுவின் மீதா தெரியவில்லை.பொதுவாக நம்மை சுத்திகரிக்கும் அவாவுடன் தியானங்களுக்குச் செல்லும்பொழுது இது போன்ற எதிர்மறை எண்ணங்கள் எழுவது இயற்கைதான்.ஆனால் அதுவே பின்னால் நம்மைப் பல நேர்மறை உணர்வுகளுக்கு இட்டுச்செல்லும் என்பதுதான் உண்மை.
ReplyDelete" தன்னைப் பின்பற்றுவது கடினம் என்ற எதார்த்தத்தைத்தான்சொல்கிறார் இயேசு" என்பதிலேயே எல்லாம் அடங்கி விடுகிறதே! சிலுவையைச் சுமந்து கொண்டு ஒருவரைப் பின் செல்லுதல் கடினம் என்பது யாருக்குத்தெரியாது? ஆனால் அதையும் செய்துவிடுவது தான் ' அவருடைய சீடனுக்கு அழகு' என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் இயேசு.தந்தை யேசுவும் கூட அதைத்தான செய்கிறார் மறைமுகமாக.எந்த ஒருவரும் நிராகரிக்கப்படும் போதுதான் அவரது செயலின்...(அது அன்பாக இருப்பினும்கூட)....வீரியம் கூடும் என்பது யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உளவியல் உண்மை தானே!பெரிய இடைவெளிக்குப்பின் கொடுத்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றி!!!