Tuesday, September 13, 2016

வந்தநாள் முதல்

புனேக்கு வந்து சேர்ந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகிவிட்டன.

வந்தநாள் முதல் தொண்டையும் சரியில்லை. நாக்கும் சரியில்லை.

காய்ச்சல், உடல்வலி, ஸ்பான்டிலிட்டிஸ் என்று எல்லாம் வந்து மாத்திரை எடுத்து, ஊசி போட்டு ஐந்து நாட்கள் (20 பாடவேளைகள்) வகுப்பும் எடுத்தாயிற்று.

எல்லாம் சரியாகி இன்று வகுப்பிற்குப் போனவுடன்,

'என்ன ஃபாதர் உடல்நிலை சரியில்லையா? ஒரு மாதிரி இருக்கீங்க!' என்றார் மாணவர் ஒருவர்.

'மறுபடியும் முதல்ல இருந்தா!' என்று கேட்கணும்போல இருந்தது.

'இன்று நான் நல்லா இருக்கணும்!' அப்படி என்று காலையில் நான் எழும் அதே நேரத்தில்,

'இன்று இவன் நல்லா இருக்கக் கூடாது!' என்று அந்தப் பக்கம் கடவுள் எழுவார்போல!

2 comments:

  1. எட்டு நாட்கள் சுகவீனத்திற்குப் பின் உடல் நலம் தேறி தந்தையை வகுப்பிற்குச் செல்ல வைத்த இறைவனுக்கு நன்றி.உண்மைதான்....பல நேரங்களில் நம்மைப் படைத்தவரின் 'கண்ணாமூச்சி' ஆட்டத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாமல் போவதுண்டு. ஆனால் அதற்காக 'இவன் நல்லா இருக்கக்கூடாது!' என அந்தப்பக்கம் கடவுள் எழுவார் போல.. என்பது கொஞ்சம் ஓவர்தான்.தங்களைப்போல மேதாவிகளுக்கு அப்பப்ப ' உசுப்பேத்தும்' உந்துதல் சக்தி தேவை என்பது அவருக்குத் தெரியாதா என்ன? மிச்சமுள்ள நாட்களில் பூரண உடல் நலத்தோடு தங்கள் பணியை இனிதே முடித்து வீடு திரும்ப வாழ்த்துக்களும்...செபங்களும்!!!

    ReplyDelete
  2. Wish you good health father...

    ReplyDelete