இந்த வாரம் நான் இரசித்த பட்டினத்தார் பாடல் ஒன்றை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
பட்டினத்தார் துறவு மேற்கொண்டு ஊர் ஊராய் சென்று கொண்டிருக்க, காவிரிப்பூம்பட்டிணத்தில் இருந்த அவரது தாய் இறந்து விடுகிறார். தன் தாய் இறந்த நிகழ்வை தானாகவே உணர்ந்து தன் சொந்த ஊர் வருகின்றார் பட்டினத்தார். இறந்த தாயின் உடலை தகனம் செய்வதற்காக ஊரார் ஏற்கனவே இடுகாட்டில் கூடியிருக்கின்றனர். 'பட்டினத்தார் வருவாரா? மாட்டாரா?' என எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க, அங்கே வந்து சேர்கின்றார் பட்டினத்தார். தாயின் உடலைத் தகனம் செய்யுமாறு அவரின் கைகளில் கொள்ளியைக் கொடுக்கின்றனர். அந்த நேரத்தில் அவர் குரலெழுப்பி பாடிய பாடலே இது.
'எப்படி நான் தீ இடுவேன்?' என்ற கேள்விகளால் நிறைந்திருக்கும் இப்பாடல் பட்டினத்தாருக்கு தாயின் மேலிருந்த பாசத்தை நினைவுபடுத்துகிறது.
தாயின் பண்புகளாக அவர் நான்கைக் குறிப்பிடுகின்றார்:
அ. 'பையல் என்றபோதே பரிந்து எடுத்துச் செய்ய...'
'பிறந்திருப்பது பையன் என்றபோதே பரிவோடு எடுத்தார்' என்பது பொருள். 'பையன்' என்பதற்காக எடுத்தார் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. 'பரிவு' என்ற வார்த்தையைத்தான் நாம் இங்கே பார்க்க வேண்டும். ஒரு தாய்க்கு தன் குழந்தையின் மேல் ஏற்படும் முதல் உணர்வு அன்பு அல்லது பாசம் அல்ல. மாறாக, பரிவு. அதாவது, பரிவு என்ற வார்த்தையில் அடுத்தவரின் சார்பு நிலை அடங்கியிருக்கிறது. குழந்தையின் மேல் யார் வேண்டுமானாலும் அன்பு காட்டலாம். அல்லது, அன்பு செய்வதில் சார்பு நிலை தேவையில்லை. ஒரு குழந்தை தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள முடியாது. முற்றிலும் அடுத்தவரை சார்ந்தே அது இருக்கின்றது. அந்த சார்பு நிலைக்கு தாய் தரும் உடனிருப்பே பரிவு.
ஆ. 'வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னை காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகில் இட்டு தீ மூட்டுவேன்'
'வட்டில்' என்பது 'பிறந்தவுடன் குழந்தையை கிடத்தியிருக்கும் வட்ட வடிவமான தட்டு.' இது இன்றும் நகரத்தார் சமூகத்தவரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் கிடத்தும்போது குழந்தையின் தண்டுவடம் நேராகிறது. கழுத்தின் அமைப்பு, பின் தலையின் அமைப்பு நேராகிறது. வட்டில், தொட்டில், மார்பு, தோள், கட்டில் என்னும் வார்த்தைகள் ஒரு குழந்தை அடையும் வளர்ச்சியைக் குறிக்கின்றது. குழந்தையின் எல்லா வளர்ச்சியையும் சரியாகக் கவனித்து அதை அக்கறை எடுத்துப் பார்க்கிறாள் தாய். வட்டிலில் போட வேண்டிய குழந்தையை தோள்மேலும், தோள்மேல் போட வேண்டிய குழந்தையை தொட்டிலிலும் போட்டால் வளர்ச்சி எசகுபிசகாவிடும்.
மேலும், பரிவுக்கு அடுத்தபடியாக தாய் குழந்தையின் மேல் காட்டும் உணர்வு 'காதல்'. அதாவது, காதல் செய்யும் ஒருவர், தான் காதலிக்கும் நபர்மேல் சார்ந்திருக்கத் தொடங்குகின்றார். பரிவின் அடுத்த பரிணாமம் காதல். பரிவில் கீழிருப்பவர் மேல் நோக்கி சார்ந்திருக்கிறார். காதலில் மேலிருப்பவர் கீழ்நோக்கி சார்ந்திருக்கிறார். காதலும், பரிவும் ஒரு தாயின் இரண்டு பண்புகளாக இருக்கின்றன.
இ. 'அரிசியோ நான்இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப்பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வதிரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு'
வாய்க்கு அரிசியிடல் என்பது சைவ அடக்கச் சடங்கின் ஒரு பகுதி. இதை கிறிஸ்தவ மரபிலும் சில இடங்களில் கடைப்பிடிக்கின்றனர். இந்த வாயினால்தான் தன் தாய் தன்னைக் கொஞ்சினாள் என நினைவுகூறுகின்றார் பட்டினத்தார்.
எப்படி வாழ்த்தினாராம் தாய்? ருசியுள்ள தேனே, அமிர்தமே, செல்வமே, திரவியமே, பூவே, மானே என வாய்நிறைய பட்டினத்தாரை அழைத்திருக்கின்றார் அவரின் தாய்.
மேலும், 'ஆத்தாள்' என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்துகின்றார். 'ஆத்தா' என்பது இன்றும் சிலர் அம்மாவை அழைக்க பயன்படுத்தும் வார்த்தை. 'ஆள்' ('ஆட்கொள்') என்ற வினைச்சொல், அல்லது 'அத்' ('பெற்றெடுத்தல்' என்று அர்த்தம் அக்காடிய மொழியில்) என்ற பெயர்சொல்லை தொடக்கமாகக் கொண்டு, இந்த வார்த்தை வந்திருக்கலாம். மேலும், பெண் தெய்வங்களுக்கும் இந்தப் பெயர்தான் முதலில் வழங்கப்பட்டது என்பதை மறந்துவிட முடியுமா? நாம் இன்றழைக்கும் மாரியம்மன், செல்லம்மாள் என்பவர்களெல்லாம் தொடக்கத்தில் மாரியாத்தா, செல்லாத்தா என இருந்தவர்கள்தாம்.
ஈ. 'முகம்மேல் முகம் வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு'
இன்றும் என் கிராமங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தையை தங்களுக்கு நேர்முகமாக பிடித்துக்கொண்டு, தங்கள் நெற்றியை குழந்தையின் நெற்றியோடு இணைத்து, 'முட்டு...முட்டு...' என விளையாடுவார்கள். இது 'முத்து...முத்து...' என்று அந்த குழந்தைக்கு கேட்கும். இந்த விளையாட்டில் குழந்தை அழகாக புன்முறுவல் செய்யும். இந்த விளையாட்டு சாதாரணமாக தெரிந்தாலும், இந்த விளையாட்டில்தான் தன் சிரிப்பை தன் குழந்தைக்குத் தருகிறாள் தாய். சிரிப்பு என்பது ஒரு பழக்கம். அதை நாம் கற்றால்தான் நமக்கு இயல்பாக வரும். மேலும், தாயின் முகம் குழந்தையினுள் அப்படியே பதிவதும் இந்த நேரத்தில்தான்.
இந்த விளையாட்டைத்தான் 'முகம்மேல் முகம் வைத்து முத்தாடி' என்கிறார் பட்டினத்தார்.
(இத்துடன் புழக்கத்தில் உள்ள இன்னொரு விளையாட்டு என்னவென்றால், குழந்தையை தாய் தன் முதுகில் போட்டு, தன் கழுத்துக்குப்பின் அதன் இரு கைகளையும் போட்டுக்கொள்வாள். குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு முன்னும் பின்னும் சாய்ந்து, 'சாய்ந்தாடம்மா...சாய்ந்தாடு...' என்று பாடுவாள். இந்த விளையாட்டில் குழந்தையின் கைகள் வலுப்பெறுகின்றன. மேலும், குழந்தையைப் பெற்றெடுத்தபின் பெண்களின் வயிற்றில் பதிந்திருக்கும் சுருக்கம் மறைகிறது. ஆக, இந்தக் குழந்தையில் தாயும், சேயும் ஒருசேர பயன்பெறுகின்றனர். இப்படி எளிதான வழிகளை விடுத்துவிட்டு, இன்று நம் மகளிர் ஜிம் நோக்கி விரைகின்றனர்.)
இறுதியாக,
'வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறுஆனாள் பால்தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்...'
என முடிக்கின்றார்.
ஒரே பாடலில் தன் தாயின்மேலுள்ள பாசத்தையும், தான் சிவனுக்காக மேற்கொண்ட துறவையும் சொல்லி முடிக்கின்றார் பட்டினத்தார்.

ஒரு தாய்க்கு அவள் தனயனின் பிரியாவிடையுடன் கூடிய வழியனுப்பு.உலகம்,உறவு அத்தனையையும் துறந்த ஒருவரின் மனத்திலிருந்து வரும் குமுறலின் வெளிப்பாடு என்பதை நம்ப முடியவில்லை. இதற்கு மிஞ்சி ஒரு தாய்க்குப் புகழாரம் சூட்ட வார்த்தைகள் இருக்க வழியில்லை என்று சொல்லுமளவுக்குத் தன் தாயிடமிருந்து பெற்ற அனைத்துக்கும் வார்த்தையால் மகுடம் சூட்டுகிறார் பட்டினத்தார்.பாசம்,பரிவு,காதல் இவற்றின் மொத்த உருவமான தன் தாய்க்கு,....தன்னை மானே,தேனே,செல்வமே,திரவியமே, பூவே என்று கொஞ்சிய வாய்க்கு எப்படி அரிசி இடுவேன் என்று தவிக்குமிடத்தில் நம் மனத்தைப் பிசைய விடுகிறார்.தாய்க்கும் சேய்க்கும் உள்ள பிணைப்பைத் தொப்புள் கொடி உறவை அஅழகுறத் எடுத்தியம்பும் ஒரு பதிவு.என்னதான் பட்டினத்தார் போன்றவர்கள் சொந்த பந்தங்களைத் துறந்திடினும் உண்மையான 'அன்புக்கு' அவர்கள் அந்நியரில்லை என்று சொல்லும் பதிவு." தாயை சார்ந்திருக்கும் குழந்தையின் சார்பு நிலைக்குத் தாய்தரும் உடனிருப்பே பரிவு" தந்தையின் அழகான டச்.குழந்தையின் வழியாகத் தாயும் சேயும் பயன்பெறும் எளிதான வழிகளை விடுத்துவிட்டு இன்று நம் மகளிர் ஜிம் நோக்கி விரைகின்றனர்........வாழைப்பழத்தில் தந்தை சொருகும் ஊசி. விபரம் தெரியா வயதிலேயே தாயை இழந்துவிட்ட நான் அடிக்கடி நினைப்பதுண்டு." நல்ல காலம் பால் மணம் மாறா பருவத்திலேயே இறைவன் என் தாயை எடுத்துக்கொண்டார் என்று". இன்று தந்தையின் பதிவு என் நினைப்பு சரிதான் என்பதை உணர்த்துகிறது.தெரியாமலா கூறினான் புதுக்கவிஞன்....."ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்...அம்மாவை வாங்க முடியுமா?" என்று.இந்த பூமியை புண்ணியபூமியாக வைத்திருக்க உதவும் " தாய்- சேய்" உறவுக்கு ஒரு சலாம்.என் தாயை நினைவு படுத்திய தந்தைக்கு என் நன்றிகள்!அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteசகோதரி...
Deleteஅருட்தந்தை அவர்களின் பதிவு என் மனதை தொட்டதோ - இல்லையோ, உங்கள் கமென்ட் முப்பத்தொரு வருடங்களுக்கு முன்னர் மறைந்த என் அம்மாவையும் - அவர்கள் காட்டிய பாச நினைவுகளையும் எனக்கு ஞாபகப்படுத்தியது!
நன்றி, இறை ஆசீர்!
ReplyDeleteGITANJALI A BERNARD, CHENNAI.
Dear Fr. Yesu:
[01] I am indeed touched by the profound affinities you have drawn – with scholarly elegance - from Mr. Pattinathar's loss of his mother, the similarities among Ancient Akkadian literature and Tamil lullabies/child care practices. I am sure there are a lot more to be pulled out from among the Romans, the Greeks, the Hebrews, the Egyptians, the Sumerians, the Assyrians and the Tamils.
[02] It is quite comforting that Mr Pattinathar could reach home on time to the funeral of his mother [Most of us aren’t given that special gift!]
[03] In contrast, I thought of the greater sorrow and deeper grief [that is possible, right? – after all, pain is quite subjective!] possibly suffered by those many Christian MISSIONARIES in our neighborhood, as they too lost their parents and loved ones in their native countries. May be, these men and women longed to attend their parents' funerals [Who among us would not?]. May be, many circumstances might have handicapped them. Financial and travel constraints might have blocked them [No Jumbo jets or Airbus then]. Pastoral obligations and religious commitments perhaps forced them to prioritize such ventures. May be, many heard “the losses” after so many months or years. To underline poignancy, let me recall the death in the families of St Francis Xavier, Henri Henriquez, Beschi, DeNobili, St John de Britto etc.
[04] Is not the SANYASA- the Christ-commitment - of these Missionaries a step ahead and above that of Mr Pattinathar? He at least could attend the function and compose quite a lot and pour out his heart, which we are able to read. Writing – either in prose or in poetry – is an excellent form of therapy]. I don’t have any such documented evidence of a Beschi’s composition for his parents [though he was an accomplished poet]. It is extraordinary that while the missionaries buried their sorrows on their parents’ loss in their hearts and in our shores, they let the parental burial take place in the Providence of God…
[05] Your comment, 'paiyal' [section A] stuck me as strange and inquisitive. Does it mean, 'exclusively a boy child'? If such is the interpretation, what might have happened, if the birth was that of a girl child? How shall Pattinathar-mother variable contrast with a female Pattinathar and her father? Is there, therefore, an accepted, unquestionable, pro-masculine code in place here?
[06] Although I feel like reassessing your "parivu-pAsam" component of a mother's relationship with her child, my competency is limited and I hope to study you further.
[07] As someone not belonging to the central region of Tamilnadu, I have this hunch. Mr Pattinathar's song for his deceased mother speaks so elaborately on MOTHERHOOD and the TAMIL PSYCHE – something special one does not find in Tamilnadu’s neighborhoods. It graphically summarizes a basic devotion of Tamils’ plunge into the Feminine element. On the one hand, it gives a hint to me to appreciate POSITIVELY and CLEARLY the mother-child-devotions such as ANNAI VAILANKANNI and all its variables [branched out into popular Hinduism and its Bhakthi expressions. Where do the Tamil Protestant Christians invest all these devotional “mother feelings”? And the Tamil Moslems?] . On the other hand, it offers me a glimpse - NEGATIVELY and DESTRUCTIVELY - into the ugly, the abusive, the foul, the insulting, the slavish, the decadent expressions of the inter-family relationships, intra-psychic relationships and managerial-business-political contexts [AMMA, AMMA, AMMA-craze]!
அன்புள்ள திரு.புஷ்பராஜா அவர்களுக்கு, தங்களின் அம்மாவைப்பற்றிய பாச நினைவுகளை ஞாபகப்படுத்த,அசைபோட நான் காரணமாயிருந்தது குறித்து மகிழ்ச்சி.அம்மா சென்டிமென்டுக்கு நாம் எல்லோருமே அடிமைகள் தானே! இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக! அன்புடன்....
ReplyDelete