Monday, January 4, 2016

தூண்டுதல்

தூய ஆவியானவரைப் பற்றிய தூண்டுதல் கடவுளிடமிருந்து வர வேண்டும் என்று தன் திரு அவைக்கு எழுதுகிறார் யோவான் (நாளைய முதல் வாசகம்).

இயேசுவின் பிறப்பை ஒட்டி நடந்த பல நிகழ்வுகளில் தூண்டுதல் இடம் பெறுவதை நாம் பார்க்கிறோம்.

யோசேப்பு கனவில் தூண்டுதல் பெற்றதால் மரியாளை ஏற்றுக்கொள்கிறார்.

ஞானியர் தூண்டுதல் பெற்றதால் விண்மீனை அடையாளம் கண்டுகொள்கின்றனர்.

சிமியோன் தூண்டுதல் பெற்றதால் இயேசுவைக் காண எருசலேம் ஆலயத்திற்குள் வருகின்றார்.

நாம் இன்று பயன்படுத்தும் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் தூண்டுதல் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.

ரொம்ப நாளா ஒரு பிரச்சினைக்கு தீர்வு யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால், அது கிடைக்காமல் திடீரென ஒருநாள் குளித்துவிட்டு தலைதுவட்டிக் கொண்டிருக்கும்போது அதற்கான விடை கிடைத்துவிடும்.

இதுதான் தூண்டுதல் (inspiration). இது உள்ளுணர்வில் (instinct) இருந்து சற்று வித்தியாசமானது.

உள்ளுணர்வு நம் உடல் சார்ந்தது. அதாவது, பசி என்பது ஒரு உள்ளுணர்வு. உச்சி வேளையில் பசி எடுக்கும் உணர்வு. உள்ளுணர்வு பெரும்பாலும் உடனடி நிவாரணத்தை எதிர்பார்க்கும். அதாவது, உள்ளுணர்வு வந்துவிட்டால் அதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கும்.

தூண்டுதல் மனம் சார்ந்தது. அதாவது, செபிக்க வேண்டும் என்ற உணர்வு. இந்த உணர்வை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை.

இன்று நான் உள்ளுணர்வால் செய்யும் காரியங்கள் எவை? தூண்டுதலால் செய்யும் காரியங்கள் எவை?

இயேசு நாளைய நற்செய்தியில் விண்ணரசை போதிக்க காரணம் தூண்டுதல்.

தூண்டுதலின் படி வாழ்தல் நீண்ட பலனைத் தரும்.

உள்ளுணர்வு உடனடி இன்பத்தையே தரும்.


2 comments:

  1. 'தூண்டுதல்',உள்ளுணர்வு' இவற்றிற்கான விளக்கத்தையும்,வித்தியாசத்தையும் விளக்கியுள்ளார் தந்தை.பொதுவாக இந்த உடல்சார்ந்த உள்ளுணர்வுகளைத்தான் திருப்திப்படுத்துகிறோமே தவிர 'தூண்டுதலை' அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை....அது நம்மைப் பாதிக்கும் வரை.புதுவருட ஆரம்பத்தில் நாம் எடுக்கும் வாக்குறுதிகள் கூட தூண்டுதல் தான்...ஏனெனில் அது இறைவனிடமிருந்து,இறைவனைச் சார்ந்து வருவதால்.இப்பேர்ப்பட்ட தூண்டுதல்களை இனம் கண்டு கொள்ளவும்,அவற்றை நிறைவேற்றவும் தூய ஆவி கண்டிப்பாகத் துணையிருப்பார் என நாம் நம்ப வேண்டும்.நம்பிக்கைதானே பாதி வாழ்க்கை! நமக்கு நீண்ட பலனைத் தரக்கூடிய தூண்டுதலின் வழி நடப்போம்.இனிய விஷயத்தை இனிதே கூறிய தந்தைக்கு மனம் நிறைப் பாராட்டுக்கள்! நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Dear Father,Very excellent explanation on inspiration and on instinct.I too had a doubt on these two very long back. Thanks and Congratulations to You Father.

    So let us live our life according to inspiration which will take us to God and God alone.

    ReplyDelete