Wednesday, January 20, 2016

காற்றோடு வந்து


'பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்று சொல்வது போல,

சவுலுக்கு அடுத்தடுத்து பிரச்சினை வருகிறது.

ஏற்கனவே அமலேக்கியரோடு ஏற்பட்ட போரில் கடவுளுக்கு கீழ்ப்படியாததால் அவரின் கோபத்தை சம்பாதித்த சவுல், இப்போது பொறாமை என்னும் தீயால் அலைக்கழிக்கப்படுகின்றார்.

'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்.
தாவீதோ பதினாயிரும் பேரைக் கொன்றார்.'

என்று பாடி கடுப்பேத்துகின்றனர் பெண்கள்.

இப்படித்தான் நாம் சும்மாயிருந்தாலும், பல நேரங்களில் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் கும்மி அடித்து நம்மை கடுப்பேற்றுவார்கள்.

சவுல் இந்தப் பொண்ணுங்க வார்த்தையை ரொம்ப சீரியசா எடுத்துக்கொள்கிறார்:

'எனக்கு ஆயிரம் பேர் எனச் சொல்லி, தாவீதுக்கு பத்தாயிரம் என்று சொல்கின்றனரே' என்று எல்லாரிடமும் புலம்புகின்றார்.

இது பங்குத்தளங்களில் நடக்கும்.

சின்ன ஃபாதருக்கும், பெரிய ஃபாதருக்கும் இடையில் சண்டையை மூட்டிவிடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும். 'சின்ன ஃபாதர் பூசை வச்சா கோயில் ஃபுல்லா ஆட்கள் இருக்காங்க. பெரிய ஃபாதர் பூசை வச்சா கோவில் காத்தாடுது' என்று சொல்லி உசுப்பேத்தி அழ வைப்பார்கள்.

சவுலின் பொறாமைக்கு காரணம் என்னவென்றால், தான் கேட்டதையெல்லாம் உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருந்ததுதான்.

காற்றோடு வந்து நம் காதுகளில் விழுந்தவை காற்றோடு போகவேண்டும்.

அதைவிட்டுவிட்டு, சவுல் boy மாதிரி நாமும் பாய் விரித்துக்கொண்டு மல்லாக்கப் படுத்து யோசிச்சுக் கொண்டிருந்தால், வாழ்க்கை ரொம்ப கஷ்டமாகிடும் பாஸ்!


5 comments:

  1. தந்தை சொல்ல வரும் விஷயம் கொஞ்சம் சீரியஸானதெனினும் அதை அவர் கையாண்டுள்ள விதமும்,உபயோகப்படுத்தியுள்ள வார்த்தைகளும் கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கின்றன.இந்த 'ஒப்புமை' என்பது பங்குதளங்களில் மட்டுமல்ல, ஒரு நாலு பேர் கூடிவிட்டால் போதும்.....இப்படிப்பட்ட அவல் மெல்லும் வேலை பார்ப்பதற்கு.சில சமயங்களில் என்னதான் நாம் வாய்மூடி மௌனிகளாயிருப்பினும் நாம் ரியாக்ட் பண்ணின பிறகே அவர்கள் நிம்மதியடைவார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் எப்படிக் கையாள்வது? அழகாக வெளிப்படுத்துகிறார் தந்தை..."காற்றோடு வந்து நம் காதில் விழுந்தவை காற்றோடு போக வேண்டும்".அதைவிட்டு மல்லாக்கப் படுத்து யோசித்துக்கொண்டிருந்தால் நாம் இழப்பது நம் தூக்கத்தோடு நிம்மதியையும் சேர்த்தேதான்.எதற்காக எதை இழப்பது? கொஞ்சம் யோசிப்போமே! யோசிக்கத்தூண்டிய தந்தைக்குப் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Indeed, "SAUL" isn't just a person, although he was.
    "Saul" is a personality, it is an attitude, a way of life, and at times it is a personality disorder.
    To define one's life's agenda by hearing others' gossip and puffed up narratives leads to harsh encounters with reality and results.
    Mango Pickle and Ginger Achar spice up the general Tamil foods. Sure, it is lovely to hear others in our neighborhoods and their input critically and reasonably.
    However, too much of pickle-intake, or rather exclusive consumption of pickle destroys the intestine and digestive processes...
    Good luck and good health.
    GITA A BERNARD, CHENNAI, INDIA

    ReplyDelete
  3. Ah, these "women" of Fr. Yesu...Why do they sing the glories of men...disrupting their lives and destroying them in the process.
    It is a pretty bad situation right?
    Then there is the other and opposite and ugly phenomenon, especially in politics; men who dress as men, talk as men and walk as men but behave as WOMEN. They lie down on the dust and adore the woman who shamelessly pretends to be man, the only man in the country and...hehehehe...
    Gita - Chennai - India

    ReplyDelete
  4. Dear Father,Very good thought.

    "காற்றோடு வந்து நம் காதுகளில் விழுந்தவை காற்றோடு போகவேண்டும்".

    Let God inspire you and bless you more and more.

    ReplyDelete