நேற்று கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
ஒரு தாத்தா தன் பேரனின் விரலைப்பிடித்து பள்ளியிலிருந்து அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்.
வழியில் ஃபாரக்ஸ் ஒன்று இருந்தது. அதாவது, அந்நிய பணமாற்று மையம்.
பேரன் தாத்தாவைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டான்.
'நம்ம நாட்டுல யூரோ பயன்படுத்துறோம். ஒருவேளை அமெரிக்காவுக்கு டூர் போனா, நாம இங்க வந்து யூரோவைக் கொடுத்துவிட்டு, அமெரிக்க டாலர் வாங்கணும். ஏன்னா அமெரிக்காவுல டாலர் பயன்படுத்துவாங்க!' என்று சொன்னார்.
'நாம ஏன் அமெரிக்கா போகணும்?' என்று அடுத்த கேள்விக்கு தாண்டினான் பேரன்.
எனக்கு என் தாத்தா ஞாபகம்தான் வந்தது.
'பத்து ரூபாய்க்கு சில்லறை கேட்டு அவரது கடைக்குச் சென்றாலே, காச் மூச்சென்று திட்டுவார்!'
டாலர், யூரோவைப் பற்றி அவரிடம் கேட்டிருந்தால் அவ்வளவுதான்.
இதுதான் தலைமுறை இடைவெளி.
ஒரு காலத்தில் தன் மருமகள் வீட்டில் நைட்டி அணிவதைப் பொறுத்துக்கொள்ளாத மாமியார்கள், இன்று தங்கள் பேத்திகள் லெக்கிங்ஸ் போடுவதைப் பொறுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். (இப்போது ஜெக்கிங்ஸ் வந்துவிட்டது, அதாவது ஜீன்ஸ் மற்றும் லெக்கிங்ஸின் கலவை)
சரி. இதுல இருந்து என்ன சொல்ல வர்றீங்க!
ஒன்னும் சொல்லல! எல்லா நாளும் ஏதாவது சொல்லணுமா என்ன?
சின்ன ப்ரேக்.

என்ன ஃபாதர்! வேளை பளுவா? நேரமில்லையா? பரவால்ல.அதனாலென்ன? அந்தப் பிஞ்சுக் கரங்களைத் தூக்கி விடும் பழுத்த கரங்களின் வாயிலாக ஆயிரம் விஷயங்கள் கற்றுக்கொள்ளலாமே! சகதியில் உழலும் நம்மைத் தூக்கிவிட பிரயத்தனப்படும் இறைவனுக்கு நாமும் நம் உடம்பை உந்தி உந்தி மேலே எழும்ப முயற்சிக்கலாமே!( இதைக்கூட இன்றைய செய்தியா வச்சிக்கலாம்.இல்லையா?) கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ப்ரேக் தேவைதான். மூளைக்கு சிறிது ஓய்வளித்துவிட்டு நாளைப் புதுத் தெம்போடு வாருங்கள்! இறைவன் தங்களையும்,தங்கள் அனைத்து முயற்சிகளையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!
ReplyDelete