நாளைய முதல் வாசகத்தில் (காண். கலா 4:22-5:1) தூய பவுல் ஆகார் மற்றும் சாரா என்ற இரண்டு முதல் ஏற்பாட்டுப் பெண்களை எடுத்து, 'அடிமைப் பெண்' - 'உரிமைப் பெண்' என உருவகம் செய்து, இரண்டு வகை பிறப்பு நிலை பற்றி சொல்கிறார்: 'இயல்பான முறைப்படி பிறந்தவன்' - 'வாக்குறுதியின்படி பிறந்தவன்.'
இயல்பாய் நடக்கும் எல்லா விஷயங்களும் நம் வாழ்வைக் கவர்வதில்லை.
உதாரணத்திற்கு, இயல்பாய் உதிக்கும் அல்லது மறையும் சூரியன், தோன்றி வீழும் பூக்கள்.
ஆனால், நமக்கு வாக்களிக்கப்பட்டு, நாம் எதிர்பார்த்து நின்று பார்க்கும் ஒன்று அப்படியே மனதில் பதிந்துவிடுகிறது.
உதாரணத்திற்கு, வெளிநாட்டிலிருந்து வரும் நம் நண்பர் அல்லது உறவினர்.
நாளைய நற்செய்தியில் (லூக் 11:29-32), யோனா-சாலமோன்-இயேசு என மூவர் ஒப்பீடு செய்யப்படுகின்றனர்.
யோனாவும், சாலமோனும் இயல்பு நிலை மக்கள்.
இயேசுவோ வாக்குறுதியின் மகன்.
ஆகவே அவர் மற்றவர்களைவிடப் பெரியவர்.

Good Morning Yesu. Short and sweet. Have a nice day.
ReplyDeleteநாம் எப்பொழுதுமே கூட்டத்தில் ஒருவராகவோ இல்லை,பத்தோடு பதினொன்றாகவோ இருப்பதை விரும்புவதில்லை.ஒரு பரிசு பொருளாக இருப்பினும் கூட அது நமக்கே நமக்காக வாங்கப்பட்டிருக்க வேண்டுமென விரும்புகிறோம்.நம் மனம் தேடுவது ஒரு ' ஐடென்டிடியை.'இதைத்தான் சொல்ல வருகிறது இன்றையப்பதிவு.அடிமைப் பெண்ணா-உரிமைப்பெண்ணா?,சீனாய் மலையா- எருசலேமா?, இயல்பு நிலை மக்களா- வாக்குறுதியின் மக்களா? கண்டிப்பாக நம் மனம் விரும்புவது இரண்டாவதைத்தான்.நாம் ஒவ்வொருவருமே ஏனோதானோ என்று படைக்கப்பட்டவர்கள் அல்லர், இறைவனால் தேர்ந்து தெளிந்து பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்கள். ஏனெனில் வாக்குறுதியின் மகனான இயேசுவே நம் இறைவன்! இது ஒன்றே போதும் நாம் கைதட்டிக் களிகூற! நல்லதொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றி.இந்த வாரம் அனைவருக்கும் இனிய வாரமாய் அமைந்திட வாழ்த்துக்கள்!!!
ReplyDelete