Wednesday, October 12, 2016

இரண்டு வாழ்க்கைகள்

நாளைய முதல் வாசகமும் (கலா 5:18-25) நற்செய்தி வாசகமும் (லூக் 11:42-46) இரண்டு வாழ்க்கைகள் பற்றி பேசுகின்றன:

அ. ஊனியல்பு வழி வாழ்வு - தூய ஆவி வழி வாழ்வு
ஆ. வெளிப்புற வாழ்வு - உள்புற வாழ்வு

அ. ஊனியல்பு - தூய ஆவி

நம்மிடம் இருக்கும் இந்த இரண்டு வாழ்க்கை நிலைகளும் வௌ;வேறு கனிகளை விளைவிக்கின்றன. இந்த கனிகளைக் கொண்டே நாம் நம் இயல்பை அறிந்து கொள்கிறோம்.

ஆ. வெளிப்புறம் - உள்புறம்

பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் வாழ்ந்த இரட்டை வாழ்வை தோலுரிக்கின்றார் இயேசு.

1 comment:

  1. என்னதான் திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் போன்ற அருட்சாதனங்களின் மூலமாக நாம் தூய ஆவியையும்,அவரது கொடைகளையும் பெற்றிருப்பினும் நம்மைப் பல நேரங்களில் ஆட்டுவிப்பது நம் 'ஊனியல்பு' தான்." Spirit indeed is willing; but the flesh is weak"... இப்படித்தான் காரணங்களைச் சொல்லிப்போகிறது நம் வாழ்க்கை.அகம்- புறம் இவை இரண்டிற்குமே இணைந்த,இசைந்த வாழ்க்கை நாம் வாழ்வது எப்போது? மனிதனுக்காகத்தான் சட்டங்களேயன்றி,சட்டங்களுக்காக மனிதன் இல்லை என்பதை உணரும்போதும், இந்தச் சட்டங்களோடு கொஞ்சம் அன்பும்,நீதியும் இணைந்த வாழ்க்கையை வாழும்போதும் தான் என்று புரிகிறது. நம் வாழ்க்கை எப்படி? ஊனியல்புக்குட்பட்டதா இல்லைத் தூய ஆவிக்குட்பட்டதா? நமது வாழ்க்கை முறையையும் தோலுரித்து ஆராய்வோம்; வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க முயல்வோம்.நம்மில் இரட்டை வாழ்வைக் களைந்து விட்டு உண்மை வாழ்வை அதுவும் தூய ஆவியின் துணையோடு இணைந்த வாழ்வை வாழ,நம்மைத் தூண்டும் வார்த்தைகளுக்காக தந்தையைப் தூய ஆவி தன் கனிகளாலும்,கொடைகளாலும் நிரப்புவாராக!!!

    ReplyDelete