Friday, October 28, 2016

தீப ஒளி

'இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன்'

(காண். பிலி 1:18-26)

நாளை நாம் தீப ஒளித் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

ஒளி உண்டாகட்டும்! இன்றும் என்றும்!

நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் பிலிப்பி நகரத் திருச்சபைக்கு மனம் திறக்கின்றார்.

வழக்கமாக நாம் எல்லாரிடமும் நம் இறப்பு பற்றி சொல்வதில்லை. நெருக்கமானவர்களிடம் மட்டுமே சொல்கின்றார்.

அப்படித்தான் பவுலும் தன் இறப்பும் ஆதாயம் என்று தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகர மக்களிடம் சொல்கின்றார்.

வாழ வேண்டும் என்ற ஆசை ஒருபுறம். ஆண்டவரோடு இணைய வேண்டும் என்ற ஆசை மறுபுறம்.

இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள இழுபறிநிலையில் இருக்கின்றார் பவுல்.

இருதலைக்கொள்ளி எறும்பு பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இரண்டு தலைகள் கொண்ட இந்த எறும்பின் வாழ்க்கை எப்போதும் திண்டாட்டம்தான். இரண்டு தலைகளும் தத்தம் பாதையில் நடக்க எத்தணித்தால் துன்புறுவது என்னவோ அதன் உடல்தான்.

அதுவா, இதுவா என்ற நிலை ஒழிந்து, இரண்டும் ஒன்றே என்ற ஒருங்கமைவு பிறந்தால் இழுபறி நிலை மறையும்.

அதுவே, நம் உள்ளத்தில் துலங்கும் ஒளி.

1 comment:

  1. " கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை" என்று கேள்விப்பட்டிருப்போம்.ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று எனும் நிலை மாறி எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவது என்பதுதான் அதன் பொருள்.அப்படித்தான் இருக்கிறது...பவுலின் நிலையும்..வாழ்வா சாவா என்ற இரு நிலைப்பாட்டுக்கிடையில்.' இருதலைக் கொள்ளி எறும்பு' பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் தந்தை இங்கு அதற்குத் தரும் காரணப்பெயரும் அதன் விளக்கமும் அதைப்பற்றி யோசிக்கவே மிரட்சி தருகிறது.ஆனால் இத்தகைய நிலைகளிலிருந்து மனத்தை ஒருநிலைப்படுத்தி நிலையான ஒன்றைத் தேர்ந்து,தெளிந்து எடுப்பதுவே நம் உள்ளத்தில் ' ஒளி'யைக் கொணரும் என்கிறது இன்றையப்பதிவு.ஆம்....உலகத்தின் ஒளியான இறைவன் நம் அக,புற இருள் அகற்றி நம் உள்ளங்களையும்,இல்லங்களையும் அவரது ஒளியால் நிரப்ப வேண்டுவோம்.அனைவருக்கும் 'தீபத்திருநாளின்' வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete