Friday, October 14, 2016

டீ கப்

ஒரு டீ கப்.

நாம் அமரும் டேபிள்.

நம் உணவறை.

நம் வீடு.

நம் தோட்டம்.

நம் தெரு.

நம் மாவட்டம்.

நம் நகரம்.

நம் மாநிலம்.

நம் நாடு.

நம் கண்டம்.

நம் பூமிப்பந்து.

நம் சூரிய குடும்பம்.

நம் பால்வெளி.

பால்வெளியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் டீ கப் ஒன்றுமே இல்லை. அதற்கு மதிப்பும் இல்லை.

ஆனால், காலையில் எழுந்தவுடன் நாம் தேடுவது நம் வீட்டு டீ கப்பைத்தான்.

என்னதான் பால்வெளினு அதற்கு பேர் வச்சாலும் அதுல டீயா போட்டு குடிக்க முடியும்.

ஒப்பிட்டுப் பார்க்கும்போது மதிப்பை இழக்கும் ஒவ்வொன்றுக்கும் மதிப்பும் பயன்பாடும் நிறையவே இருக்கிறது.

'உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?'

என மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (நாளைய பதிலுரைப்பாடல், திபா 8).

1 comment:

  1. ஒரு டீ கப்பில் ஆரம்பித்து அதை பால்வெளி வரைக்குமாக்க் கொண்டு போய் அழகானதொரு கவிதை படைத்துள்ளார் தந்தை.கண்டிப்பாக ஒப்பிட்டுப்பார்க்கும் போது பயனை இழக்கும் ஒவ்வொன்றுக்கும் மதிப்பும் பயன்பாடும் நிறையவே இருக்கிறது." ஒரு "சிறு குச்சி கூட பல் குத்த உதவும்" என்பதும், ஒரு சிறிய ஆணியின் இழப்பினால் ஒரு போரிலே அரசன் தோல்வியை சந்தித்ததும் நாம் கேட்டுப்பழகிப்போன கதைகளே! இறைவன் படைப்பில் அத்தனைக்கும் ஒரு பொருளுண்டு; பயனுண்டு.ஒருவரின்/ ஒன்றின் பயன் நமக்குக் கிடைக்கப்பெறாததால் ஒருவரை/ ஒன்றைத் தூக்கி எறிவதும்,இழிவாகப் பேசுவதும் நமக்குத்தான் இழுக்கைக் கொண்டு சேர்க்கும்.மாறாக இறைவனின் படைப்பைக் கண்டு வியக்கையில் நாம் இறைவனையே நம் கண்முன் கொண்டு வருகிறோம்.ஆம்! " உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்,அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும்,விண்மீன்களையும் நோக்கும்போது மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?" திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து நாமும் இறைவனைப் புகழ்வோம்.விடியற்காலையில் ஒரு கப் நிறையக் கொடுத்த சுவையான டீக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன் தந்தைக்கு!!!

    ReplyDelete