Thursday, October 27, 2016

நம்பிக்கை இழந்தோர்

நாளை புனித யூதா ததேயு திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நான் உரோமில் இருந்த பங்கின் திருநாள் நாளை.

இன்று காலை முதல் மனம் உரோம் நகரின் என் பங்கு ஆலயத்தைச் சுற்றியே வலம் வருகிறது.

ஒரு இடத்தை விட்டு போனவுடன்தான் அந்த இடத்தின் அருமை தெரிகிறது.

நம்பிக்கை இழந்தவர்களின் பாதுகாவலராக திருச்சபை அவரை முன்வைக்கிறது.

நம் வாழ்வில் உணவை இழந்தால், உறவை இழந்தால், பொருளை இழந்தால், புகழை இழந்தால் என எல்லா இழப்புகளையும் ஓரளவு நம்மால் சரிசெய்துவிட முடியும். ஆனால், நம்பிக்கை இழந்தால் எல்லாம் இழந்துவிட்ட நிலை வந்துவிடுகிறது.

நாளை நாம் கொண்டாடும் நம் புனிதர் நமக்கு நம்பிக்கை தரட்டும்.

இந்த நம்பிக்கையை நாம் மற்றவர்களுக்கும் ஊட்டுவோம்.

1 comment:

  1. எனக்கும் கூட மிகவும் பிடித்த புனிதர் இவர்.இயேசுவின் உறவினர் இவர் என்பதால் நாம் இவரிடம் கேட்கும் அனைத்தையும் உடனே இயேசுவிடம் கேட்டுப் பெற்றுத்தருவார் என்று என்னிடம் கூறப்பட்டதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.அழகாகச் சொல்கிறார் தந்தை...எதை இழப்பினும் ஈடுகட்ட முடியும் நம்மால் நம்பிக்கையை இழக்கும்போது எல்லாமே சூன்யமாகி விடுகிறது.இந்தப்புனிதர் வழியாக நம் உள்ளத்தில் நம்பிக்கையின் விதைகளை விதைப்பதோடு நில்லாமல் அதை நம்மைச் சுற்றியுள்ளோருக்கும் பகிர்ந்தளிப்போம்.பாவம்...தந்தைக்கு 'ரோம் சிக்னஸ்'வந்துவிட்டது போலத்தெரிகிறது.அந்நிய மண்ணில் எத்தனை பிடிப்போடு இவர் தன் கடமையைச் செய்திருப்பார் என்று உணரமுடிகிறது.அன்றும்,இன்றும்,என்றும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் தேவையறிந்து ஓடி ஓடி உதவி செய்யும் இவரின் கடமை உணர்வு என்னை வியக்க வைக்கிறது.தங்களின் பழைய பங்கின் பாதுகாவலர் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் இறைவனின் திருக்கரங்களிலிருந்து பெற்றுத்தர வேண்டுகிறேன்; வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete