நாளைய நற்செய்தியை (காண். லூக் 18:9-14) வாசிக்கிறோம்.
பரிசேயர், வரிதண்டுவோர் என்ற இரண்டு கதைமாந்தர்களைப் பார்க்கின்றோம்.
பரிசேயர் சொல்கிறார்: 'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபச்சாரர் போன்ற மக்களைப் போலவோ, இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்'
வரிதண்டுபவர் சொல்கிறார்: 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்!'
இரண்டுபேருமே தன்னைப் பற்றித்தானே பேசிக்கொள்கிறார்கள்.
அப்படி இருக்க, இரண்டாமவரை மட்டும் ஏன் இயேசு 'ஏற்புடையவர்' என்கிறார்?
எந்நேரமும் 'நான் பாவி' என்று சொல்வதுதான் கடவுளின் விருப்பமா?
அப்படி நான் சொல்லிக்கொண்டே இருப்பது என்னில் இருக்கும் இறைச்சாயல் என்னும் சூரியனை கிரகணம் செய்துகொள்வது இல்லையா?
என்னைப் பொறுத்தவரையில், அந்த நேரத்தில் அமைதியாக எங்கோ நின்று கொண்டு எதையோ செய்து கொண்டு அல்லது சிந்தித்துக்கொண்டிருந்தவரே ஏற்புடையவர்!

இன்றைய நற்செய்தியில் காணும் இருவரைத்தவிர மூன்றாவதாக ஒரு கதை மாந்தரை உள்ளே நுழைக்கிறார் தந்தை.இங்கே நாம் காணும் பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் எனும் இருவரில் தன் நிலையை உண்மையாக உணர்ந்த ' வரி தண்டுபவர்' இறைவனுக்கு ஏற்புடையவர் எனில், இந்ந ஒட்டு மொத்த மனுக்குலத்தில் எவனொருவன் தன்னைப்பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிராமல் தான் செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வதில் கருத்தாயிருக்கிறானோ அவனே ' இறைவனுக்கு ஏற்புடையவன்' என்கிறார் தந்தை.நமக்கேற்றார் போல் தானே நம் சிந்தனையும்,கற்பனையும்! இன்று நான் என்னை இறைவனுக்கு ' ஏற்புடையவனாக்க' என்ன செய்யப்போகிறேன்? யோசிப்போம்." என்னில் இருக்கும் இறைச்சாயல் எனும் சூரியனை கிரகணம் செய்து கொள்வது"... மனத்தின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தும் அழகான வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்! இந்த நாள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களை அள்ளித்தரட்டும்!!!
ReplyDelete