Wednesday, October 26, 2016

முயன்றும்

'இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமல்போகும்' என்று நாம் நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். 13:22-30) வாசிக்கும் சொற்கள் எனக்கு நெருடலாக இருக்கின்றன.

ஒருவர் இடுக்கமான வாயில் வழியே நுழைய முயல்கின்றார்.

ஆனால், அவரால் நுழைய முடியவில்லை.

ஆகவே, அவர் கதவைத் தட்டி தனக்கு கதவைத் திறந்துவிடுமாறு கேட்கிறார்.

அதாவது, மனிதர்கள் தங்கள் முயற்சியால் ஒன்றைச் செய்ய முற்படுகின்றனர். அது இயலாமல் போகின்றது. ஆகவே, அவர்கள் கடவுளை நோக்கி கூக்குரல் எழுப்புகின்றனர்.

ஆனால், அங்கே என்ன நடக்கிறது?

'உங்களை எனக்குத் தெரியாது!' என்று சொல்கிறார் ஆண்டவர்.

இது எதைச் சொல்கிறது?

நுழைய முயன்றும் இடுக்கமான வாயில் வழியே நுழைய முடியாமல் போனால் நம் முயற்சிகள் இன்னும் அதிகமாக வேண்டுமே தவிர, நாம் கடவுளை தேடக் கூடாது.

அப்படின்னா, கடவுளே தேவையில்லையா?

'உங்களை எனக்குத் தெரியாது!' என்று நாமும் ஏன் கடவுளைப் பார்த்துச் சொல்லக் கூடாது?

1 comment:

  1. தந்தையின் அந்த இறுதி வரிகளைப் படிக்கும்போது " இளம் கன்று பயமறியாது" என்று மட்டுமே சொல்லத்தோன்றுகிறது.அண்மையில் வந்த முதல் வாசகங்கள் யாவுமே புரிந்து கொள்ளவும்,ஒத்துக்கொள்ளவும் கொஞ்சம் நெருடலான பகுதிகள் தான்.ஆனால் இன்றையப் பகுதி எனக்குக் கொஞ்சம் 'லாசர்,செல்வந்தர்' பகுதியோடு ஒப்பிடத்தோன்றுகிறது.வாழ்நாளெல்லாம் மனம் போன போக்கில் திரிந்து இட்டு, இறுதி நேரத்தில் இறைவனை நாடுபவர்களுக்காகக் கூறப்பட்டதா?...தெரியவில்லை.ஆனால் எந்த நேரத்தில் யார் கூப்பிட்டாலும் உதவிக்கரம் நீட்டுபவர் தானே இறைவன்? இங்கேயும் கொஞ்சம் இடிக்கத்தான் செய்கிறது.போகட்டும்...வேதத்தைக் கரைத்துக் குடித்த தந்தை போன்றோரையே குழப்பும் விஷயங்கள் என் போன்றோருக்கு எப்படி விளங்கும்?இப்பொழுது எனக்கும் கூட அப்படித்தான் தோன்றுகிறது.என்னைத்தெரியாது என்று சொல்பவர்களை அவர் இறைவனாகவே இருப்பினும் கூட நான் ஏன் தெரியாது என சொல்லக்கூடாது? சொல்லலாம்தான்..ஆனால் அதற்கப்பறம் என் கதி? தந்தையே! என்னையே குழப்பி விட்டீர்கள் பார்த்தீர்களா! நீங்கள் குழம்பவில்லை.எங்கள் குழப்பம் போக்கத் தாங்கள் நடிக்கிறீர்களோ எனத்தோன்றுகிறது. கண்டிப்பாக இன்றையப்பகுதி என்ன சொன்னாலும் " கதவு திறக்கப்படும்வரைத் தட்டிக்கொண்டிருப்பவனே புத்திசாலி" என சொல்லத்தோன்றுகிறது.குழப்பத்தின் மூலமே குழப்பம் போக்கும் தந்தையின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete