Wednesday, April 27, 2016

மூன்று காரணிகள்

என்னதான் நல்ல ஐஸ் க்ரீமை விற்கப் போனாலும், மழை பெய்யாமல் இருந்தால்தானே வியாபாரம் இருக்கும்.

அல்லது என்னதான் மாவு விற்கப் போனாலும் காற்று அடிக்காமல் இருந்தால்தானே இருக்கிற மாவு சாக்கில் இருக்கும்.

திருத்தூதர்கள் நல்லவர்களாக, அர்ப்பணம் உள்ளவர்களாக, கடின உழைப்பாளர்களாக இருந்தாலும், அவர்களின் பணிக்கேற்ற சூழல் இருந்தால்தானே அவர்கள் பணி சிறப்பாக நடைபெறும்.

திருத்தூதர்களின் பணிக்கு இலகுவாக மூன்று காரணிகள் இருந்தன:

அ. உரோமை அமைதி
ஆ. கிரேக்க கலாச்சாரம்
இ. யூத நம்பிக்கை

அ. உரோமை அமைதி

'கண்ணுக்கெட்டுகிற தூரம் வரைக்கும் நம்ம வயல்தான்' என்று கிராமங்களில் நம் முன்னோர் சொல்வார்கள். ஒருவரின் கால் எட்டும் வரைக்கும் உரோமையின் ஆதிக்கம் தான் அக்காலத்தில் மத்திய கிழக்கில் இருந்தது. உரோமையர்களின் ஒரு நல்ல குணம் என்னவென்றால், அவர்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டால், அந்த நாட்டவருக்கு மருத்துவம், கல்வி, பயணம் என எல்லா சலுகைகளும் கிடைக்கும். மேலும், தங்கள் குடிமக்களுக்கு அமைதியை வாக்களித்தனர் உரோமையர்கள் (pax romana). எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் மக்கள் அமைதியுடன் வாழ்ந்தனர். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மக்களும் வேறு மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும், ஆட்சி செய்வது உரோமையர்கள் என்பதால், உலகமே ஒரு குட்டி கிராமமாக சுருங்கி நின்றது.

ஆ. கிரேக்க கலாச்சாரம்

இன்று முகநூல் கலாச்சாரம், மேக்டொனால்ட் கலாச்சாரம் என நிறைய கலாச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை வெறும் மேற்பூச்சுக்களே. 'கலாச்சாரம்' என்றால் 'ஒரு மனிதரை உருவாக்குவது அல்லது பண்படுத்துவது' என்று பொருள். இது ஒருவரின் நடை, உடை, பாவணை, வீடு, ஊர், ஓவியம், கலை என அனைத்திலும் வெளிப்படும். திருத்தூதர்களின் காலத்தில் கிரேக்க கலாச்சாரம் புகழ்பெற்றிருந்தது. அரசியல் சாசனம் தந்த பிளேட்டோவின் ரிபப்ளிக், தத்துவத்தில் மேலோங்கிய சாக்ரடிஸ் உரையாடல்கள், கணிதத்தில் அரிஸ்டாட்டில் என கலை மற்றும் கல்வியில் கிரேக்கம் முன்னேறி இருந்தது. அது மட்டுமல்லாமல், 'புதிய கருத்துக்களை தேடி அறிந்து கொள்ளவும், புதிய நபர்களைச் சந்தித்து அவர்களைப் பற்றி ஆர்வம் கொள்ளவும்' அவர்கள் விழைந்தனர். ஆகையால்தான் அரோயோபாகு மன்றத்தில் பவுல் பேசியபோது, 'உன் பேச்சு புதியதாக இருக்கிறது. மீண்டும் வந்து பேசு. நாங்கள் கேட்கிறோம்!' என்று சொல்கின்றனர் கிரேக்கர்கள்.

இ. யூத நம்பிக்கை

திருத்தூதர்கள் அனைவரும் யூத நம்பிக்கையில் பிறந்தவர்களே. இயேசுவை யூத நம்பிக்கையில் தாங்கள் கற்றிருந்த பல அடையாளங்களுக்குள் புகுத்தி மக்களுக்கு போதித்தனர். 'தலைமைக்குரு,' 'பாஸ்காப் பலி,' 'புளிப்பு மாவு,' 'புளியாத அப்பம்,' 'பாஸ்கா உணவு,' 'செபம்,' 'நோன்பு' என தாங்கள் ஏற்கனேவே கொண்டிருந்த வழிபாட்டு முறைகளில் இயேசுவைப் போதிக்கத் தொடங்கினர். இன்று நாம் கொண்டாடும் பல திருவிழாக்களும், வழிபாட்டு முறைமைகளும் யூத மதத்திலிருந்து நாம் எடுத்துக்கொண்டவைகள்தாம்.

இந்த மூன்றும் இனிய சூழலை உருவாக்கிக் கொடுக்க, திருத்தூதர்களின் பணி இனிதே தொடங்குகிறது.

2 comments:

  1. கருத்தாழமிக்க, நாட்டு வழக்கில் உள்ள பழமொழிகள் தந்தையின் இன்றையப் பதிவிற்குக் கைகொடுக்கின்றன.கண்டிப்பாக நாம் நினைப்பவற்றை, நம் உள்ளக் கிடக்கைகளை செயல் வடிவில் கொண்டு வர நமக்கு சூழல்கள் ஒத்துழைக்க வேண்டும். சூழல்கள் நமக்கு சாதகமாக இருக்கையில் நாம் திட்டமிடும் காரியத்திற்கு இறைவனே ஓ.கே சொல்லி விட்டதாக நினைப்பவர்களும் உண்டு.அப்படித்தான் இன்றைய நம் கதாநாயகர்களுக்கும் உரோமை அமைதி,கிரேக்கக் கலாச்சாரம்,யூத நம்பிக்கை எனும் காரணிகள் சாதகமாக அமைந்துவிட அவர்கள் தங்களின் பணியை இனிதே தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார் தந்தை. ' 'பிள்ளையார் சுழி' இட்டாயிற்று. தொடங்கும் பணியின் பங்காளர்களாக நாமும் பின் தொடர்வோம். தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete
  2. Dear Fr. YESU KARUNANIDHI:

    I want to congratulate you for summarizing into 3 easy and intelligent headings the background that was advantageous to the fast growth of the early Church.

    Other students of early Christianity seem to list out as many as 13 to 2 dozen contributing circumstances that might have helped the easy spread of the early Church.

    Of course, computing causes or contexts varies depending on individual perspectives.

    Indeed, the Pax Romana, the Greek Thought and the Jewish Faith-forms were uniquely handy for a quick launch of the nascent Church.

    None could question their impact on the early Church, especially as you have delineated within the Book of Acts.

    Then I thought of the implication of the THREE factors you made mention of.

    Factors that might be perennially valuable to a Church on the mission everywhere and at all time.

    Thus, each evangelizer must first seek out your THREE-DIMENSIONAL MATRIX of political stability, philosophical systems and theological/faith modes in a given context from within the setting of the mission.

    And, more importantly, [while a Pax-Romana type political stability, and a Greco-Jewish modes of thought processes and faith expressions MAY NOT BE readily available], the Church planter has an obligation to initiate, induct, engender, experiment and nourish multiple patterns of political stability, philosophical thoughts and modalities of faith expressions.

    This is not to be misconstrued as political meddling by the Church; or borrowing pagan ideas by studious philosophers, theologians or liturgists.
    On the contrary, Church [as Resurrected Lord’s incarnate community] has an inborn mission to save mankind and the entire creation [of which YOUR TRIPLE MATRIX is part of.

    One area I would shudder to suggest is moral theology!

    Based on your TRIPLE-GROUD of polis, philosophy and symbolism [understood in the most comprehensive manner], it might be a valuable study to situate, evaluate and COMPARE the 2000 years of “missionary work” in India, especially by Religious Congregations.

    [Strange, that the majority of evangelizers in India were Europe-based “religious orders”.
    Select few dared to follow your TRINITARIAN MODEL…
    Most others imported cutleries, crockeries, cassocks, pipe organs, entire marble altars, hymns, devotions, thoughts and theologies.
    “OURS” was considered as “pagan” or “sub-standard”.

    Additionally:
    What might have been the impact if diocesan priests, say, of Africa and South America were our missionaries?

    Does a specific University an Indian clergyman studies in Europe or elsewhere have an impact on his input, back in India after his return?

    I just thinking...

    Blessings on both of us.

    GITANJALI A BERNARD,
    New York

    ReplyDelete