Friday, October 30, 2015

நண்பரே

'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்!'

திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டால் எங்கே அமர வேண்டும் இயேசு போதிக்கின்றார்.

திருமண விருந்துக்குப் போய் ரொம்ப நாளாச்சு. ஃபாதர் ஆன பின் எந்தத் திருமண விருந்துக்கும் போகவும் முடியல. கடைசியா நான் போன திருமண விருந்து என் தங்கையின் திருமண விருந்துதான் என நினைக்கிறேன். நம்ம ஊரு திருமண பந்திக்கு இயேசுவின் பிரின்சிபில் ஒத்து வருமா என்று தெரியல. ஒரு காலத்தில் ஒரு பந்தி முடிய அடுத்த பந்திக்கு மக்கள் எழுந்து போவார்கள். கொஞ்சம் வளர்ந்து அடுத்த பந்திக்கான ஆட்கள் படிகளில் நின்று இருப்பார்கள். இன்று சாப்பிடுபவரின் பின்னால் நின்றுகொண்டு, 'தம்பி, இந்த இலைக்கு பாயாசம் கொண்டு வாருங்கள்!' என்று நாம் சாம்பார் ஊற்றும்போதே கூவத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால் அந்தக் கூட்டத்தின் நெருக்கத்திலும், அவசரத்திலும், வியர்வையிலும், சூட்டிலும் பரிமாறப்படும் அன்பிற்கு இணையாக எந்த ஐந்து நட்சத்திர ஓட்டலும் இன்னும் வரவில்லை.

கடைசி இடத்தில் அமருங்கள். எதற்காக?

உங்களைவிட மதிப்பிற்குரியவரை ஒருவேளை அவர் அழைத்திருக்கலாம்.

கடைசி இடத்தில் அமர்வதால் இரண்டு நன்மைகள்:

அ. 'நண்பா' என அழைக்கப்பட முடியும்.

ஆ. மதிப்போடு மற்றவர்கள்முன் எழுந்து முன்னால் சென்று அமர முடியும்.

கடவுளின் மதிப்பீடுகள் மனித மதிப்பீடுகளிலிருந்து மாறுகின்றன என்பதற்கு இயேசுவின் இந்த உவமை சான்று. அதிக பணம், அதிக மதிப்பு, அதிக பலம் என முக்கியத்துவம் கொடுக்கும் நம் நடுவில் தாழ்ச்சியையும், மனச் சாந்தத்தையும் முதன்மைப்படுத்துகிறார் இயேசு.

நாமும் இன்று கடைசி இடத்தில் அமர்ந்தால் இயேசுவுக்கு அருகில் அமரலாம்.

ஏனெனில் அவர் தேர்ந்து கொள்வதும் கடைசி இடம்தானே.

விருந்தில் தான் கடைசி இடம்.

வாழ்க்கையில் கொஞ்சம் முன்னால போகணும் பாஸ்.

தீயா வேல செய்யணும்.


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம் ."நண்பரே" என்ற பதிவு மிக மிக கருத்துள்ள ஆழமான பதிவு . என்னை தொட்ட வரிகள் "கடைசி இடத்தில் அமர்வதால் இரண்டு நன்மைகள்:

    அ. 'நண்பா' என அழைக்கப்பட முடியும்.

    ஆ. மதிப்போடு மற்றவர்கள்முன் எழுந்து முன்னால் சென்று அமர முடியும்.இது மட்டும் அல்லாமல் நாம் அவர்கள் குடும்பத்தில ஒருவராக கருதப்படலாம் .எப்படி என்றால் கடைசி பந்தியில் அமரும் வரைக்கும் கொஞ்சம் அவர்களுக்கு உதவலாம் .பின்னர் நாமும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராவோம் ,இல்லையென்றால் பத்தரிக்கை வைத்ததால் சாப்பிட வந்துவிட்டார்கள் என்று நினைக்க தோன்றும் . இப்படி உதவும் நிலையில் நாம் நண்பரே என்றும் அழைக்கப்படலாம் .எப்படி நாம் நண்பராகலாம் என்று கூறிய தந்தைக்கு ஒரு ஓ போடுவோம் மற்றும் தந்தைக்கு பாராட்டுக்கள் !









    ReplyDelete
  3. " முதன்மையானோர் கடையராவர்; கடையரானோர் முதன்மையாவர்" என்னும் விவிலியப் பகுதியை எடுத்துக்கூறும் பதிவு.ஏற்ற- இறக்கங்களும்,மேடு- பள்ளங்களும் இணைந்ததுதான் வாழ்க்கை எனக் கூறும் பகுதியாகவும் கொள்ளலாம்.விருந்துபற்றிக் குறிப்பிடும்போது இன்றைய 5ஸ்டார்,7ஸ்டார் கலாச்சாரங்களில் வயிறு முட்டும் உணவைத்தவிர கிராமங்களின் அந்த தள்ளு முள்ளுக்கிடையே உள்ள அன்பின் பரிவர்த்தனையைக் காண முடியாது தான். கடையனாய் இருப்பதில் உள்ள வசதி...ஆம் விருந்துக்குச் சொந்தக்காரன் 'நண்பா!' என அழைக்கும் போதும்,நாலு பேருக்கு மத்தியில் தலை நிமிர்ந்து அழைத்துச்செல்லப்படும் போதும் ஏற்படும் பெருமிதம் தனி சுகம் தானே! இறைவனின் மதிப்பீடுகள் நம்முடையவற்றிலிருந்து மாறுபடுபவைதான்.இன்றைய பதிவு எடுத்துக்காட்டும் தாழ்ச்சியையும்,மனச்சாந்தத்தையும் அடுத்த முறை விருந்துக்கு அழைக்கப்படுகையில் மனதில் கொள்ளலாமே! தந்தைக்கு ஒரு வார்த்தை....அடுத்த முறை நீங்கள் வருகையில் பெரிய விருந்தொன்று....ஜமாய்ச்சிடுவோம்.சரியா?! நன்றி!!!!

    ReplyDelete