'பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு' (காண். உரோ 6:19-23)
நீங்கள் பாவத்திற்கு அடிமையா அல்லது கடவுளுக்கு அடிமையா என்று கேள்வி கேட்கும் பவுல், தொடர்ந்து உரோமைத் திருச்சபைக்கு அறிவுறுத்துவதுதான் நாளைய முதல் வாசகம்.
இதுவரை நீங்கள் பாவத்திற்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்கியிருந்தீர்கள். ஆனால் உங்களுக்கு சாவைத் தவிர என்ன கிடைத்தது? என்று கேட்கும் பவுல், 'இனியாவது கடவுளுக்கு அடிமையாக்குங்கள்' என அவர்களை மன்றாடிக் கேட்கின்றார்.
'பாவத்தின் சம்பளம் மரணம்' - என்று சில பெந்தேகோஸ்து சபையினர் சுவரொட்டிகள் அடித்து மதுரை கோரிப்பாளையும் பகுதி முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள்.
'பாவத்தின் சம்பளம் மரணம்' என்றால் 'பாவத்தின் போனஸ் என்ன?' என்று யாராவது எழுதியிருக்கலாம் என நான் என் நண்பரிடம் கமெண்ட் அடித்தேன்.
'பாவத்தின் சம்பளம் சாவு' என்று சொல்லும்போது பவுல் இரண்டு விஷயங்களைச் சொல்கின்றார்:
1. தொடக்கத்தில் முதற்பெற்றோரின் பாவத்தால் சாவு உலகிற்கு வந்தது. ஆக, அவர்களின் பாவத்தின் சம்பளம் மரணம்.
2. ஒவ்வொருமுறை நாம் பாவம் செய்யும்போது சின்னதாக இறக்கிறோம். உடலளவில் இல்லையென்றாலும், மனதளவில்.
ஆனால் 'டாடி எனக்கொரு டவுட்டு!'
பாவம் என்ற ஒன்றே இல்லையென்றால், மனித தவறை இயற்கைநிகழ்வாக எடுத்துக்கொண்டு சென்றால் எத்துணை நலம்.
பாவம் என்று வந்தவுடன் குற்றவுணர்வு வந்துவிடுகிறது. இந்த குற்றவுணர்வின் குழந்தை பயம். குற்றவுணர்வும் பயமும் சேர்ந்து பெற்றெடுத்த குறைமாதக் குழந்தைதான் நாம் கொண்டிருக்கும் சமயம் - எந்த சமயம் என்றாலும் சரி.
'நாம் செய்யும் நல்லதுக்காக கைதட்டாத கடவுள், நாம் செய்யும் கெட்டதுக்காக நம் கண்ணைக் குத்துவார்' என்று சொல்வது எவ்வளவு பெரிய மடமை.
ரொம்ப யோசிக்காதீங்க பாஸ்!

தந்தை என்ன சொல்ல வருகிறார் என்றே விளங்க வில்லை. பாவம் என்றே ஒன்றே இல்லையென்றால் நன்றாக இருந்திருக்கும் தான்.ஆனால் தறிகெட்டு ஓடும் நம் பலவீனத்தைதடுத்து நிறுத்த ஒரு 'வேகத்தடை'அவசியமில்லையா? குற்றவுணர்வும்,பயமும் சேர்ந்து பெற்றெடுத்த குறைமாதக் குழந்தைதான் நாம் கொண்டிருக்கும் சமயம் எனில் பாவம் செய்யக்கூடிய வாய்ப்பிருந்தும் அதை விட்டு விலகும் போது வருகிறதே ஒரு 'பேரானந்த நிம்மதி'....அதற்கு என்ன பெயரிடலாம்? நாம் செய்யும் நல்லது கெட்டதுக்காக கடவுள் கை தட்டுகிறாரா இல்லை கண்ணைக் குத்துகிறாரா என்று ஆராய்வதைவிட நான் செய்யும் நல்லது கெட்டது என்னை...என் மனமகிழ்ச்சியை எப்படிப் பாதிக்கிறது என யோசித்தல் நலமில்லையா??!! அதை வைத்துப் பார்த்தால் எந்த ஒரு மனசாட்சியுமே 'பாவத்தின் சம்பளம் மரணம்' எனக்கூறுவதை நாம் கேட்க இயலும் என்றே எண்ணுகிறேன். ஃபாதர்! நானும் ரொம்ப யோசிக்கிறேன் என்று நினைக்கிறேன்.'எனக்கொரு டவுட்டு' என்று கேட்ராதிங்க ப்ளீஸ்!
ReplyDeleteதந்தைக்கு வணக்கம். "சம்பளம்" என்ற பதிவு மிக அழகான பதிவு. இதுவரை நீங்கள் பாவத்திற்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்கியிருந்தீர்கள். ஆனால் உங்களுக்கு சாவைத் தவிர என்ன கிடைத்தது? என்று கேட்கும் பவுல், 'இனியாவது கடவுளுக்கு அடிமையாக்குங்கள்' என அவர்களை மன்றாடிக் கேட்கின்றார்.
ReplyDelete'பாவத்தின் சம்பளம் மரணம்' -இவைகள் என் மனதை தொட்ட வரிகள் .இங்கு பவுல் மன்றாடுவது ரோமை திருச்சபை மக்களை மட்டும் அல்ல மாறாக என்னை பார்த்தும் உங்களை பார்த்தும்.ஆக,நம் அனைவரின் எண்ணமும் ஏக்கமும் கடவுளை சார்ந்ததாகவும், தூய்மையானதாகவும் இருக்க இறைவனிடம் வேண்டுவோம்.பாவத்திற்கு சவால் விடுவோம். பாவத்திலிருந்து விடுபட சிந்திக்க தூண்டிய தந்தையின் பதிவிற்கு நன்றிகள்.பாஸ் உங்களுக்கு பாராட்டுக்கள்!
dear father,it is bro.britto mmi from kovai.i hope u could remember me.i am reading ur reflections every day.they r very inspiring.thanks
ReplyDelete