Thursday, October 29, 2015

உன் வாயில்களின் தாழ்களை

'அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்.
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.'

(திபா 147:13)

நாளைய பதிலுரைப்பாடலில் நாம் இந்த வரியை வாசிக்கின்றோம்.

இந்தத் திருப்பாடலின் பின்புலம் என்ன என்பது நமக்கு விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த இரண்டு வரிகளின் பின்புலம் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறதா?

ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு வீடு. அந்த வீட்டினுள்ளே ஒருதாய். படுத்த படுக்கையாய் அவளது இள மகன். நடந்து கொண்டிருக்கும் போரில் அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடக்கிறான். இந்தத் தாய் அந்த மகனுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வெளியில் இன்னும் எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எந்நேரமும் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வந்து இந்தத் தாயையும், இந்தத் தாயின் இள மகனையும் கொன்றுவிடலாம்.

பயம், கலக்கம், திகில், ஆபத்து என எல்;லா உணர்வுகளும் நிரம்பியவளாய் இந்தத் தாய் இறைவனை நோக்கித் தன் கண்களை உயர்த்துகின்றாள். கண்ணீரோடு இறைவேண்டல் செய்கின்றார்.

அவளின் கண்கள் கண்ணீர் சொரிந்து கொண்டிருக்கும் நேரம் அவளின் இதயத்தின் காதுகளில் இறைவன் மெதுவாய் உச்சரிக்கும் வார்த்தைகளே இவை:

'அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்.
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.'

ஆக, வெளியிலிருந்தும் உனக்கு ஆபத்து இல்லை. உள்ளுக்குள் இருக்கும் உன் பிள்ளையும் நலம் பெறுவான்.

இறைவனின் பிரசன்னம் முழுமையான நலம் தருகிறது. பயம் போக்குகிறது.

நாளைய நற்செய்தியிலும் (காண். லூக் 14:1-6) இத்தகைய இறைவனின் முகத்தைத்தான் நாம் இயேசுவில் பார்க்கிறோம். நல்லது செய்வதற்கு நல்ல நேரம், கெட்ட நேரம், ஓய்வு நாள், வேலை நாள் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் நடுவில், தன் கரம் நீட்டிக் குணம் தருகின்றார் இயேசு.

இறைவனின் பார்வையில் எல்லா நேரமும் நல்ல நேரமே. எல்லா இடமும் நல்ல இடமே. எல்லா மனிதர்களும் நலம்பெறத் தகுதியானவர்களே.


5 comments:

  1. தன் பிள்ளைகளுக்காக இறைவேண்டல் செய்யும் எந்த ஒரு தாய்க்கும் நெருக்கமானவை 147 ம் திருப்பாடலில் வரும் இவ்வரிகள்.குற்றுயிராய்க் கிடக்கும் தன் மகனுக்கு நலமளிக்க முடியாத தன் இயலாமையை ஏற்றுக்கொண்டவளாய் இறை வேண்டல் செய்யும் ஒரு தாயையும், அவளின் சேயையும் நம் கண் முன் உணரச் செய்கிறார் தந்தை தன் கற்பனையை ஓடவிட்டு." கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடே அறுவடை செய்வார்கள்" என்ற வரிகளின் அர்த்த்தையும் நம்மால் உணரமுடிகிறது. இறைவனின் பிரசன்னமும்,அந்தத் தாயின் செவிகளில் விழும்அவரது கிசுகிசுப்பும் அவளது பயம் போக்குகிறது எனில் அவர் நமது பயத்தைப் போக்க மாட்டாரா என்ன? " இறைவனின் பார்வையில் எல்லா நேரமும் நல்ல நேரமே; எல்லா இடமும் நல்ல இடமே; எல்லா மனிதர்களும் நலம் பெறத் தகுதியானவர்களே"....... நாளின் இறுதியில் உறங்கச் செல்லுமுன் நான் வாசிக்கும் இந்த வார்த்தைகள் இறைவனே நேரில் வந்து என்னைத் தாலாட்டுவது போல் உணர்கிறேன்.உணரச் செய்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. பாச தந்தைக்கு வணக்கம் ."உன் வாயில்களின் தாழ்களை" மிக மிக அர்த்தமுள்ள பதிவு. என்னை தொட்ட வார்த்தைகள் இறைவனின் பார்வையில் எல்லா நேரமும் நல்ல நேரமே. எல்லா இடமும் நல்ல இடமே. எல்லா மனிதர்களும் நலம்பெறத் தகுதியானவர்களே. ஆக , நாம் எல்லாவற்றிற்கும் தகுதியானவர்களா இருக்கிறோமா? அதுதான் இன்று தந்தை நமக்கு வைக்கும் கேள்வி என்று நினைக்கிறேன்.நாம் கடவுளை மட்டும் நம்புவோம். அவர் ஆசிர் நமக்கு குறைவுபடாமல் நம்மிடம் தங்கும் என்பதை விசுவசிப்போம்.தந்தைக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. Dear fr thank You for your wishes & prayers i am suganthi very good thoughts

    ReplyDelete
  4. Anonymous10/30/2015

    DEAR YESU, GREETINGS OF JOY. HOW ARE YOU YESU. TAKE CARE OF YOUR HEALTH. A MIRACLE HAPPENED IN OUR SCHOOL. 65 STUDENTS FROM 1std TO 10TH STD NEW ADMISSION. THEY ARE FROM KOVILPATTI. TOTAL PRIMARY STRENTH 250 1ST IN WATRAB RANGE.

    PRAY FOR YOUR MINISTY. YOUR BLOGS DAILY REFRESH ME. THANKS. KEEP GOOD HEALTH.

    ReplyDelete