Monday, October 19, 2015

பாவம் நல்லது

'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' (காண். உரோ 5:20-21)

நான் உரோமையருக்கு எழுதிய திருமடலை முதன்முதலாக வாசித்தபோது என்னைத் தொட்ட வரி இந்த வரிதாம்.

ஆங்கிலத்தில் இன்னும் அழகாக இருக்கும்: "Where sin was abundant grace was overabundant".

இதைச் சொல்லியும், சொல்லாமல் பவுல் தொடர்ந்து இப்படி எழுதுகிறார்: 'அதற்காக அருள் பெருக வேண்டும் என்று பாவம் செய்யலாமா?'

இப்படி ஒரு கேள்வி வரும் என்பதை அவராகவே யோசிக்கின்றார். என்னவொரு லாஜிக்! என்னவொரு இன்ட்டலிஜன்ஸ்!

ஒரு மனிதரால் பாவம் வருகிறது இந்த உலகிற்குள். சரி! எல்லாம் முடிந்துவிட்டது! - என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு மனிதரால் அருள் வருகிறது.

'முடிவு என உலகம் நினைப்பதை விடிவு எனக் காட்டுபவர்தான் இறைவன்!'

இந்த நாட்களில் அகுஸ்தினாரின் 'கன்ஃபெஷன்ஸ்' மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அகுஸ்தினாரின் வாழ்வுக்கு மேற்காணும் பவுலின் வரி நன்றாகவே பொருந்துகிறது.

எந்த அளவிற்கு அவர் இறைவனை விட்டுத் தூரத்தில் இருந்தாரோ, அதைவிட அதிகமாக அவரைப் பற்றிக்கொள்கின்றார்.

பாவத்தின் இயல்பு இதுதான். கொஞ்ச நேரம் இன்பத்தைத் தந்துவிட்டு நம் நீண்ட நேர மகிழ்ச்சியைக் களவாடி விடுகிறது.

பவுலின் இந்த வார்த்தைகள் சொல்வது என்ன?

'இருளாய் இருக்கிறது என்று மனம் கலங்கிவிடக் கூடாது. ஒளி வரும்.'

ஒவ்வொரு ஆன்மாவும் இருள்சூழ்ந்த இரவை அனுபவிக்கும் - தோல்வியில், விரக்தியில், ஏமாற்றத்தில், ஆசையில், கோபத்தில், குரோதத்தில், வெறுப்பில். ஆனால், அந்த இரவு கடந்து போகும்.

காலையில் வெளிச்சம் உள்ளே வரும் - வெற்றியில், சுறுசுறுப்பில், பெறுதலில், ஆசையைக் கடத்தலில், மன்னித்தலில், ஏற்றுக்கொள்ளுதலில், அன்பு பாரட்டுதலில்.

இந்தப் பின்னைய வெளிச்சம் உள்ளே வந்தவுடன் முந்தைய இருள் பறந்து போய்விடும்.

இருளை அனுபவித்த ஒருவர்தான் ஒளியை ரசிக்க முடியும்.

ஆக, 'கறை நல்லது' என்று சர்ஃப் எக்சல் விளம்பரம் சொல்வது போல, 'பாவம் நல்லது' என நாம் சொல்லலாமே!



3 comments:

  1. " where sin was abundant grace was over abundant".... என்ன சொல்ல வருகிறார் தந்தை என என் நெற்றி சுருங்கியதை என்னால் தவிர்க்க இயலவில்லை.சொல்ல வருவதை நேரடியாகச் சொல்லாமல் நம்மை சிறிது குழப்பி விட்டுப் புரியவைப்பதே தந்தையின் தனிவழி.' முடிவு என உலகம் நினைப்பதை விடிவு எனக்காட்டுபவர் தான் இறைவன்' இந்த அவர்களுக்குப் புனித அகுஸ்தினாரின் வாழ்க்கையை மேற்கோளிட்டுக் காட்டியிருப்பது அழகு. தந்தையின் வரிகளில் நான் மிக இரசித்ததை மீண்டும் உணர்த்த விழைகிறேன்." ஒவ்வொரு ஆன்மாவும் இருள் சூழ்ந்த இரவை அனுபவிக்கும்- தோல்வியில்,விரக்தியில்,ஏமாற்றத்தில்,ஆசையில்,கோபத்தில்,குரோத்த்தில்,வெறுப்பில்.ஆனால் அந்த இரவு கடந்து போகும்.காலையில் வெளிச்சம் உள்ளே வரும்- வெற்றியில்,சுறுசுறுப்பில்,பெறுதலில்,ஆசையைக்கடத்தலில்,மன்னித்தலில்,ஏற்றுக்கொள்ளுதலில்,அன்பு பாராட்டுதலில்.பின்னைய வெளிச்சம் வந்தவுடன் முன்னைய இருள் பறந்துவிடும்.இருளை அனுபவித்த ஒருவர்தான் ஒளியை இரசிக்க முடியும்".... ஆம், கண்டிப்பாகப் பாவம் நல்லதுதான் அதிலிருந்து நாம் எழுந்து புண்ணியத்தைத் தேடிப் புறப்படுவோமேயானால்! அழகாதொரு உண்மையை அழகாகச் சொல்லியிருக்கும் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம். " பாவம் நல்லது" என்ற பதிவில் பாவத்தை பாராட்டி பாவிகளுக்கு வாழ்வின் அர்த்தத்தை புரியவைக்க தங்கள் நேரத்தை ஒதுக்கி இப்படி ஒரு அழகான பதிவை இந்த வார்த்தைகளாகிய 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' (காண். உரோ 5:20-21) என்பதன் வழியாக எடுத்து இயம்பிய தந்தைக்கு நன்றிகள்.இவ்வாறு பொங்கி வழியும் கடவுளின் அருள் என்றென்றைக்கும் என் மீதும் பிறர் மீதும் ததும்பி வழிந்து எல்லோரையும் காப்பாற்ற வரம் வேண்டுவோம்.ஆக, ஒளியாம் கிறிஸ்துவை ரசிக்க தம் வாழ்வாக்க இருளாகிய சாத்தானை விட்டு விரைவில் வெளி வருவோம்.புது பிறப்படைவோம்.தந்தைக்கு பாராட்டுக்கள்! .

    ReplyDelete
  3. it is really admirable that u have used the advertisement quote for surf excel 'dirt is good' to make us understand Rom5;20-21 "Where sin was abundant grace was overabundant".
    the worth of any washing powder is recognized when it washes out DIRT in the clothes.the value of light is recognized when we r in darkness(while power cut in the night or when we open a window of closed room......).in the same way the abundant grace of god is realized when we commit sin yet loved by god.
    for example,now a days more than village people city people r having or acting good faith in god and ready to do many things for church.one of Hindu friends would say it is because city people commit many sins and seek for the grace of god in this way.
    so ur concept is true,where the opportunities to commit sin is high there the grace of god is much realized.

    ReplyDelete