Monday, October 19, 2015

வாழ்வு வந்துவிடாது

'நான் நல்லா இருக்கிறேன்!
எனக்கு நிறையா சொத்து இருக்கிறது!
என் வயலில் நல்ல அறுவடை!'
என்று கட்டிலில் படுத்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த
செல்வந்தன் ஒருவனுக்கு கெட்ட கனவு வருகிறது.

இந்த செல்வந்தன் யாரையும் ஏமாற்றவில்லை.
யார் சொத்தையும் அபகரிக்கவில்லை.
அவன் உழைத்தான். அவன் அறுவடை செய்தான்
அவன் சொத்து சேர்த்தான்.

பின் ஏன் கடவுள் அவனை இப்படிச் சாட வேண்டும்?

இரண்டு காரணங்கள்:

அ. மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது
ஆ. கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய் தமக்காக செல்வம் சேர்ப்பது ஆபத்து

வாழ்வு என்றால் என்ன?
கடவுள் முன்னிலையில் செல்வம் என்றால் என்ன?

இரண்டும் ஒன்றுதான் என நினைக்கிறேன்.

அதாவது, நாம் நம்மிலேலே நிறைவானவர்கள்தாம். நமக்கு வெளியில் இருக்கும் எதுவும், யாரும் நம்மை நிறைவு செய்வதில்லை.

அப்படி வெளியிலிருந்து நம்மை நிறைவு செய்தால் அவர் கடவுளாக மட்டுமே இருக்க முடியும்.

ஆனால் கடவுள்தான் நமக்கு உள்ளேயும் இருக்கிறாரே.


3 comments:

  1. ' வாழ்வு', 'நிறைவு', 'கடவுள்'....போன்ற வார்த்தைகள் யாவுமே subjective.ஆளுக்கு ஆள் ,மனிதனுக்கு மனிதன் மாறக்கூடியவை.மூன்று வேளை வயிறு புடைக்க உண்ட பின்னும் அடுத்து என்ன என்று கேட்பவனும் உண்டு.வாடி வதங்கிய வயிறோடு கிடைக்கும் ஒருவேளைக் கஞ்சியை மல்ர்ந்த முகத்தோடு உண்பவனும் உண்டு.பத்து வீடுகள் சேர்த்த பின்னும் பதினோராவது வீட்டிற்காக ஏங்குவோர் மத்தியில் இவ்வையகமே வீடாக, வானமே கூரையாக திருப்தியுடன் வாழ்வோரையும் பார்க்கத்தான் செய்கிறோம்.ஆக ' வாழ்வு','நிறைவு', கடவுள் என்ற சொற்கள் யாவும் " போதும் என்ற மனம்" உள்ளவருக்குத்தான். இம்மனம் நம்மிடம் இருப்பின் நாம் வாழும் வாழ்க்கையும் ஒரு வரமே! இந்த வாரம் இனிதே அமைந்திட தந்தைக்கும்,மற்றோருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம். "மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது".(லூக்12'15) என்பதனை ஆணி அடித்தார் போல் ஞாபகபடுத்தியதற்கு நன்றி.
    உயிர் இல்லாத அழகு, பிணம். சாதனை இல்லாத அறிவு,மதியீனம். பணிவு இல்லாத வீரம், மூர்க்கத்தனம். தர்மம் இல்லாத செல்வம் பாலைவனத்து மழை, ஆன்மீகம் இல்லாத வாழ்க்கை ஒளியில்லா உலகம்.ஆண்டவனோடும் ஆன்மீகத்தோடும் தொடர்பு இல்லாத வாழ்க்கை நூல் அறுந்த பட்டம் போன்றது. தொடர்பிழந்த விமானம். அழிவது உறுதி. இறைவன் காட்டும் விழியில் விவேகத்துடன் வாழ்வோம்.இதை கூறிய தந்தைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete