Tuesday, January 30, 2018

வியந்தார்

நாளைய (31 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 6:1-6)

வியந்தார்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சொந்த ஊருக்கு வருகிறார். அவர் அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று கேள்விப்பட்ட அவரின் சொந்த ஊர்க்காரர்கள் ரொம்ப சிம்ப்பிளா,

'அவரைப் பற்றி எங்களுக்கு தெரியாதாக்கும்!' 'அவர் குடும்பம், கோத்திரம் எங்களுக்குத் தெரியாதாக்கும்!' என்கின்றனர்.

அவர்கள் அவரை நம்பவில்லை.

ஆனால் அதனால் இயேசுவுக்கு கோபம் வரவில்லை.

கோபம் நமக்கு எப்போது வருகிறது?

ஒன்றை எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது கோபம் வருகிறது.

தன்னை நம்புவார்கள் என எதிர்பார்க்கிறார் இயேசு. ஆனால் மக்கள் அவரை நம்பவில்லை. அப்படின்னா அவருக்கு கோபம்தானே வரணும்.

ஆனால், 'அவர் ஆச்சர்யப்பட்டார்' 'வியந்தார்' என பதிவு செய்கிறார் மாற்கு.

'என்ன இப்படி இருக்காங்களே!' என ஆச்சர்யப்படுவது கோபத்தைவிட நல்லது என நினைக்கிறேன். இந்த ஆச்சர்யத்தின்போது இயேசுவின் உதட்டில் கண்டிப்பாக ஒரு புன்னதை நின்றிருக்கும்.

நம் உள்ளத்தில் எழும் கோப உணர்வை ஆச்சர்ய உணர்வாக மாற்றிப் பார்க்கலாமே!

நாம் நினைப்பதுபோலவே எல்லாம் அல்லது எல்லாரும் நடக்க வேண்டும் என நினைப்பது தவறு. அப்படி மற்றது அல்லது மற்றவர் மாறி நடக்கும்போது கொஞ்சம் புன்முறுவல் மற்றும் வியப்பு இருந்தால் போதும்.


1 comment:

  1. அழகானதொரு பதிவு. நமக்கு அந்நியமாக்கிப்போன "புன்முறுவலை" நமக்கு மீண்டும் நினைவு படுத்தும் பதிவு. ,நாம் நினைத்தது நிறைவேறாதபோது,அல்லது நினைத்ததற்கு மாறாக விஷயங்கள் நம் கையை விட்டுப்போகும் போது உருகுகிறோம்; மறுகுகிறோம்; கலங்குகிறோம். "தேவையில்லை" என்கிறார் தந்தை.அத்தனை எதிர்மறை உணர்வுகளையும் ஆச்சரியக்குறியாக்கிப் புன்னகையை உதட்டில் தவழ விடுவது ஒன்றே அந்த நேரத்தின் தேவை என்பதை உணர்ந்தால் நமக்கு நலமே! ஆனால் அது அத்தனை எளிதான விஷயமா என்ன? நிச்சயமாக இல்லை தான்.ஆனால் முடியாததை முடிப்பதுதானே வாழும் வார்த்தைக்கு அர்த்தம்! முயன்று பார்ப்போமே! அது மட்டும் பத்தாது என்கிறது இன்றையப்பதிவு.ஆம்! நமக்குப் பரிச்சயப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காகவே நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வியக்கத்தக்க விஷயங்களைச்செய்கையில் "இதெல்லாம் ஒரு விஷயமா?" என்று ஏளனப்பார்வை பார்ப்பதை விடுத்து அவர்களை மனதாரப் பாராட்டப்பழகுவோம்! அவர்களையும் பார்த்து ஆச்சரியப்படுவோம்; வியப்போம். அன்றாட வாழ்க்கையை அழகானதாக்கும் ஒரு விஷயத்தைத் தந்த தந்தைக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும்!!!

    ReplyDelete