நாளைய (15 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 2:18-22)
இணக்கத்தன்மை
'இணக்கத்தன்மை' ('compatibility') என்பது உறவுகள் மேலாண்மையியல் அதிகமாக பேசப்படும் ஒரு சொல்லாடல்.
இந்த இணக்கத்தன்மை இருக்கும்போது மனித உறவு நிலைகள், குடும்பம், வேலை, படிப்பு - என அனைத்து தளங்களிலும் இலகுவாக அமைகின்றன.
இயேசுவின் சமகாலத்து யூத சமயச் சடங்கான நோன்பிருத்தலில் இருந்த இணக்கத்தன்மை இயேசுவின் வருகையால் - புதிய மணமகனின் வரவால் - கெடுவதாக யோவானின் சீடர்களும் மற்றவர்களும் நினைக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் தான் ஒரு புதிய துணி என்றும், தன்னால் பழைய துணியோடு தன்னை ஒட்டிக்கொள்ள முடியாது என்றும், தான் ஒரு புதிய இரசம் என்றும், இந்தப் புதிய இரசத்தை பழைய தோற்பைகள் கொள்ளாது எனவும் உருவகமாகப் பேசுகின்றார் இயேசு.
ஆக, பழையது பழையதோடும், புதியது புதியதோடும் இணக்கத்தன்மை கொண்டிருக்கும் என்பது இயேசுவின் கருத்து.
இந்த இணக்கத்தன்மையை எப்படி வளர்த்துக்கொள்வது?
'பழைய துணியோடு புதிய துணியை எப்படி இணைப்பது?'
'பழைய தோற்பையில் புதிய மதுவை எப்படி ஊற்றி வைப்பது?'
பழையவற்றை அழிப்பதன் வழியாகவே இது சாத்தியமாகும். பழைய துணி கிழிக்கப்பபட வேண்டும். பழைய தோற்பையின் மது கொட்டப்பட வேண்டும்.
பழையது கழிந்தவுடன் புதியது வரும். புதியது அடுத்தவற்றுடன் இணக்கத்தன்மை கொண்டிருக்கும்.
பழையதை தூக்கி எறிய மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். சின்ன உதாரணம், நம்ம வேலை பார்க்கும் டேபிளை, அல்லது நாம் முக அலங்காரம் செய்யும் கண்ணாடிக்கு அருகில் உள்ள மேசையை பார்ப்போம். 'இதை மாற்ற வேண்டும்!' 'இதைத் தூக்கி எறிய வேண்டும்' என நாம் நினைத்து அவற்றை தூக்கி எறியாமல் வைக்கக் காரணம் என்ன?
புதியவற்றோடு இணக்கத்தன்மை கொண்டிருக்க தடையாக இருப்பது எது?

' compatibility' க்கு ஒப்பான தமிழ் வார்த்தை 'இணக்கத்தன்மை.' புதிய வார்த்தை! அழகு!பழையதைத் தூக்கி எறியும் போதுதான் புதியது அடுத்தவற்றுடன் இணக்கத்தன்மை கொண்டிருக்கும். உண்மைதான்! இது பொங்கல் காலம்.பழையன கழிந்து புதியன புக வேண்டிய காலம். ஆனால் எனக்கொரு சந்தேகம்... ஒரு புதியதைப்புதியதுடன் சேர்க்கவோ,பழையதைப்பழையதுடன் சேர்க்கவோ அதற்கான தேவை ஏற்படும்போதுதானே முடியும்? ஒரு புதியதோடு இணைக்க வேண்டுமெனும் ஒரே காரணத்திற்காக நாம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் டேபிளையும்,கண்ணாடிக்கருகே உள்ள மேசையையும் எதற்காகத் தூக்கிப்போட வேண்டும் அவை இன்னும் கொஞ்ச நாள் உழைக்குமெனில்? ஒரு அறையில் தேவையினிமித்தம் ஒரு பொருளை மாற்றும்போது, எல்லாமே புதிதாயிருக்க வேண்டுமென்று அனைத்தையுமே மாற்றுவது சாமான்யனுக்கு சாத்தியமா என்ன? எனக்கு இன்னும் கொஞ்சம் புரிதல் தேவை என நினைக்கிறேன்......தந்தைக்கு சாத்தியமா?
ReplyDelete