நாளைய (6 ஜனவரி 2018) நற்செய்தி (மாற் 1:7-11)
யோர்தான் ஆற்றில்
நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை வாசிக்கின்றோம். 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று இயேசுவைப் பார்த்து சொல்லப்பட்ட வானக வார்த்தைகள் 'அடாப்ஷனிஸம்' என்ற தப்பறைக் கொள்கைக்கு வழிவகுத்தன. இந்தக் கொள்கை இயேசு கடவுளின் மகனாகப் பிறக்கவில்லை என்றும், திருமுழுக்கின்போது அவர் கடவுளால் அல்லது தந்தையால் தத்து எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும் வரையறுக்கிறது.
திருமுழுக்கில் இயேசு கேட்ட இந்த வார்த்தைகள் அவருக்கு அடித்தள அனுபவத்தை கொடுக்கின்றன. அடித்தள அனுபவம் என்பது நம் வாழ்வின் போக்கையே மாற்றிவிடும் ஓர் அனுபவம்.
தான் கடவுளின் மகன் என்ற அனுபவமே ஒருவர் மற்றவரை சகோதரர் என்றழைக்க இயேசுவைத் தூண்டியிருக்கலாம்.
நம் திருமுழுக்கு நிகழ்வுகள் நமக்கு நினைவிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.
ஆனால், ஏதாவது ஓர் அனுபவம் நம் வாழ்வின் அடித்தள அனுபவமாக இருக்கலாம் நமக்கு. அதை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா?

கண்டிப்பாக... ஒரு சிறு நிமிடங்கள் நாம் கண்களை மூடி நம் இதயத்தின் மௌனத்தோடு சஞ்சரித்தால் ஒன்றென்ன,ஓராயிரம்" அடித்தள அனுபவங்களை" நாம் கடந்து வந்த வாழ்க்கையிலிருந்து நம்மாலும் இனம் காண முடியும். அதற்கான நேரம் ஒதுக்குவதே நாம் செய்ய வேண்டிய ஒரே முயற்சி.இயேசு தான் திருமுழுக்கின் போது வானிலிருந்து கேட்ட வார்த்தைகள் மாந்தர் அனைவரையும் அவரது சகோதரராக்க அவருக்கு உதவி இருக்கிறதென்றால், என் செவியில் விழும் எத்தனை எத்தனையோ நல்ல வார்த்தைகள் என்னையும் மாற்ற வேண்டும்; என் போக்கை மாற்ற வேண்டும்; எனக்கடுத்திருப்பவரை மாற்ற வேண்டும். இது நடக்கும் பட்சத்தில் இயேசு நம்மையும் பார்த்து இவனே/இவளே என் நேச குமாரன்/ குமாரத்தி என்று பூரிப்படையும் நாள் வெகு தொலைவில் இல்லை.புதிய வருடத்தின் தொடக்கத்தில் இத்தகையதொரு சிந்தனையைத் தூண்டும் விஷயத்தைத் திரியாக ஏற்றிவிட்ட தந்தைக்கு என் நன்றிகள்!!!
ReplyDelete