Tuesday, May 9, 2017

கிறிஸ்தவர்

'அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாக சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.'

(காண். திப 11:19-26)

'கிறிஸ்தவர்' என்னும் பெயர் கிறிஸ்தவர்களுக்கு முதல் முதலாக அந்தியோக்கியாவில்தான் கிடைத்தது என பதிவு செய்கிறார் லூக்கா. அப்படி என்றால் அதற்கு முன்னால் அவர்கள் எப்படி அழைக்கப்பட்டனர்?

'நசரேயர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள்.

'புதிய நம்பிக்கையாளர்கள்' என அழைக்கப்பட்டார்கள்.

'புரட்சியாளர்கள்' என அழைக்கப்பட்டனர்.

இப்படி பல பெயர்கள்?
பெயர் ஏன் முக்கியம்?

பெயர்தான் முக்கிய அடையாளம். உதாரணத்திற்கு, அஇஅதிமுக என்ற பெயரை தக்க வைத்துக்கொள்வதற்காக இப்போது அரசியலிலும் சண்டை நடக்கிறது.

இயேசு அல்லது நசரேயன் என்பது வரலாற்றுப் பெயர். கிறிஸ்து என்பது நம்பிக்கைப் பெயர்.

இயேசு காணக்கூடிய வரலாற்று நபர்.

கிறிஸ்து காண முடியாத நம்பிக்கை நபர்.

ஆக, காணக்கூடிய நிலையிலிருந்து காணக்கூடாத நிலைக்கு கடந்து போகிறது.

சிறிய வட்டத்தை உடைத்து பெரிய வட்டத்திற்குள் பயணமாகிறது.

'கிறிஸ்தவர்' என்பது 'கிறிஸ்து' 'அவர்' என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டே. அப்படி என்றால் ஒவ்வொருவரும் அப்படி இருக்கத்தானே அழைப்பு பெறுகிறோம்.

1 comment:

  1. " தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றுக்கும், தொட்டு உணரக்கூடிய ஒன்றிலிருந்து உணர முடியாத ஒன்றிற்கும் கடந்து செல்வதைத்தான் உண்மையான " கற்றல்" அல்லது " புரிதல்" எனப்படித்திருப்போம்.அதே வழியில் காணக்கூடிய வரலாற்று நபர் " இயேசு" விலிருந்து,காணமுடியாத நம்பிக்கை நபர் " கிறிஸ்து" வுக்குள் கடந்து போவதைத்தான் " கிறிஸ்தவம்" என்கிறார் தந்தை. உண்மைதான்...."கிறிஸ்து" " அவள்" எனும் இரண்டு வார்த்தைகளின் கூட்டே " கிறிஸ்தவள்" எனில் நாம் ஒவ்வொருவருமே ஒரு " வாழும் கிறிஸ்துவாக" இருக்கத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம் என அறைகூவல் விடுக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete