Sunday, May 28, 2017

எதார்த்தமான பதில்


'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?'

'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!'
தூய பவுலுக்கும் எபேசு நகர மக்களுக்குமான உரையாடலை இப்படி பதிவு செய்கிறார் லூக்கா (காண். திப 19:1-8)

எபேசு நகர மக்களின் எதார்த்தமான பதில் எனக்கு பிடித்திருக்கிறது.

நாம நினைக்கிறது எல்லாம் அடுத்தவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறோம். அல்லது நாம் இந்த உலகத்தைப் பார்ப்பதுபோலத்தான் மற்றவர்களும் பார்ப்பார்கள் என நினைப்பதும் நாம் கொண்டிருக்கின்ற தவறான புரிதல்லகள்.

அடுத்தவர்கள் என்ன புரிந்துகொள்கிறார்கள் என்பதை முதலில் கேள்வி கேட்டு அறியலாம்.

அல்லது நம்மிடம் யாராவது விடை கேட்டால் நேருக்கு நேராகச் சொல்லலாம்.

1 comment:

  1. நாம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் விஷயம் தான்! சாதாரண விஷயமென அலட்சியப்படுத்தினோமெனில் விளைவுகள் அசாதாரணமாகவும் அமையலாம். பல நேரங்களில் நம் பேச்சு assumption, presumption இவற்றின் அடிப்படையில் அமைந்து விடுகிறது.சிலர் தங்களின் புத்திசாலித்தனத்தை எதிராளிக்குத் தம்பட்டம் அடிக்கவும் இப்படிச் செய்யலாம்.தந்தையின் கூற்றுப்படி நம் புரிதலை அடுத்தவரின் அறிவை அளக்கும் அளவுகோல் என எடுக்காமல் ஆழம் பார்த்து,அவர்களின் புரிதலை அறிந்து சம்பாஷனையில் ஈடுபடுவதே விவேகம்.நாமும் இதை வாழ்ந்து பார்க்கலாமே! அனைவருக்கும் இந்தவாரம் நலமாய் அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete