'பவுலையும் பர்னபாவையும் எனக்கென ஒதுக்கி வையுங்கள்.
அவர்கள் இறைவேண்டல் செய்து அவர்கள்மேல் கைகளை விரிக்க அவர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்டார்கள்'
நாளைய முதல் வாசகத்தில் பவுலும், பர்னபாவும் புதிய பணிக்காக தெரிந்தெடுக்கப்படும் நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். இங்கே ஆச்சர்யம் என்னவென்றால் தூய ஆவியானவரைப் பொழிவது ஒருவர் மற்றவரின் கடமையாக, உரிமையாக இருக்கிறது.
நேற்றைய முதல் வாசகத்தில் 'கிறிஸ்தவர்கள்' என்னும் பெயர் தோற்றத்தை வாசித்தோம். பெயர் உருவாகும்போது ஒருவரின் சிந்தனையை நாம் ஒரு கூட்டுக்குள் அடைத்துவிடுகிறோம்.
காரல் மார்க்ஸ் உயிரோடு இருக்கும் வரை அவர் நிறைய சிந்தித்தார். ஆனால், மார்க்சியம் என்ற வார்த்தை உருவானபின் அவர் இப்படித்தான் என நாம் வரையறை செய்துவிட்டோம். மகாத்மா காந்தி இருந்தபோது இருந்த உயிரோட்டம் 'காந்தியம்' என்ற ஒன்று உருவானவுடன் சுருங்கிப்போகிறது.
கிறிஸ்தவம் என்ற வார்த்தைக்கும் அந்த ஆபத்து உண்டு.
யார் யார் கைகளை விரிக்கலாம், யார் யார் மேல் தூய ஆவி இறங்கலாம் என இப்போது வரையறை செய்துவிட்டோம். ஆனால் தொடக்க கிறிஸ்தவர்கள் யார் மேலும் கைகளை விரிக்கின்றனர், எல்லாரும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கின்றனர்.
பெயரிட்டு சுருக்காதவரை எதுவும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது.

"பெயர் உருவாகும் போது ஒருவரின் சிந்தனையை நாம் ஒரு கூட்டுக்குள் அடைத்து விடுகிறோம்" எனும் சித்தாந்தத்திற்குக் கார்ல்மார்க்ஸ்,மற்றும் மகாத்மா காந்தியைத் துணைக்கழைத்திருப்பது தந்தையின் கூற்றுக்கு வலு சேர்க்கிறது.'கிறிஸ்தவம் என்ற வார்த்தைக்கும் இந்த ஆபத்து உண்டு' என்ற தந்தையின் எச்சரிக்கை மணியில் உண்மை இருப்பினும் எனக்கு அதில் மாற்றுக் கருத்தும் உண்டு.யார்,யார் கைகளை விரிக்கலாம்,யார் யார் மேல் தூய ஆவி இறங்கலாம் எனும் வரையறை நடைமுறையில் இருப்பினும், யாருக்காகவும்,யாரும் தலைமேல் கரம் வைத்து தூய ஆவியின் வருகைக்காக இறைஞ்சிடின் அவர் கேட்பவரின் ந்திமூலம்,ரிஷிமூலம் பாராமல் கண்டிப்பாக இறங்குவார் என்பதே என் கருத்து. ஆகவே ஒருவரின் சிந்தனைகளையோ,செயல்களையோ பெயர் மட்டுமல்ல, எதையுமே காரணம் காட்டி மறுத்தல் ஆகாது என்ற என் கூற்றைத் தந்தையும் ஒத்துக்கொள்வார் என்றே நம்புகிறேன். தூய ஆவியினாரைப் பொழிவதில் பவுலும்,பர்னபாவும் போல் நாம் அனைவருமே செயல்பட தூய ஆவி நமக்குத் துணை வருவாராக! அழகான சிந்தனையை ஆணித்தரமாக எடுத்து வைத்த தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!
ReplyDelete