இரவு உங்களுக்குப் பிடிக்குமா? எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை எவை என்று கேட்டால் இரண்டு என்பேன்: ஒன்று, பசி. மற்றொன்று, தூக்கம். இந்த இரண்டும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டால் தனிமனிதருக்கு நோயும், சமூகத்தில் குற்றங்களும் குறைந்துவிடும்.
இரவு ஒரு வித்தியாசமான எதார்த்தம். எது உண்மை? இரவா? பகலா? ஒரு மெழுகுதிரியின் வெளிச்சத்தை ஒரு ஊரின் இருள் ஒன்று சேர்ந்தாலும் இருட்டாக்க முடியாது. இருள் என்பது ஒளியின் இல்லாமை.
தன்னால் அறிந்து கொள்ள முடியாத அனைத்தையும் ஒன்றே மூட்டை கட்டி அதற்கு இருள் என்று பெயர் வைத்துவிட்டனர் மனிதர்கள்.
இன்று நாம் சிந்திக்கும் கேள்வி இருள்சூழ்ந்த நேரத்தில் தன் வீட்டின் கட்டிலில் அமர்ந்திருக்கும் ஒருவரின் உள்ளத்து உணர்வுகள்.
பகலெல்லாம் வெயிலில் நின்று எதிரிகளோடு போர் செய்துவிட்டு, தூசியோடும், அழுக்கோடும் வீடு திரும்பும் ஒருவர் நன்றாகக் குளித்துவிட்டு, சுடச்சுட சோறு சாப்பிட்டுவிட்டு, தன் மனைவி, குழந்தைகள் அனைவரும் தூங்கிப்போய்விட தான் மட்டும் விழித்திருந்து தன் இறைவனை நோக்கிப் பாடும் பாடல்தான் திருப்பாடல் 4. திருப்பாடல் 3 அவர் பகலில் என்ன செய்தார் என்பதைச் சொல்லுகிறது.
விவிலியம் திருப்பாடல் நான்கை 'மாலை மன்றாட்டு' என அழைக்கின்றது.
'இந்த நாள் இனிய நாளாக இருந்தது!' என்று இனிமையாக வாழ்ந்த ஒருவரின் வார்த்தைகள் தாம் இவை.
கடவுளை நோக்கிப் பாடுவதாகத் தொடங்கும் இப்பாடல் மற்றவர்களை நோக்கி நகர்ந்து இறுதியில் பாடகர் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதாக அமைகின்றது.
1. இறைவா! நீர் எனக்குத் துணைபுரிந்தீர்!
2. மற்றவர்களே! நான் இறைவனின் அன்பன். நான் என்ன கேட்டாலும் அவர் செய்வார்!
3. ஹலோ மிஸ்டர். உள்மனம்! நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்!
யாருக்குத் தூக்கம் வரும்? இந்த இடத்தில், இந்த நேரத்தில் எனக்கு ஆபத்தில்லை என்று நினைக்கும் ஒருவரால் அந்த இடத்தில், அந்த நேரத்தில் தூங்க முடியும்.
திருவிழாக்களிலும், திருமண வைபவங்களுக்கு முன் தினமும், பயணம் செய்யும் போதும், இறந்தவர்களின் வீட்டிலும், நோயுற்றவரின் அவருகிலும் நாம் வேண்டுமென்றே தூங்காமல் இருக்கின்றோம். அதற்கான காரணங்கள் வேறு.
தனக்கு ஆபத்து இருக்கும் இடத்தில் எந்த உயிரினமும் தூங்காது.
ஆபத்தைக் களைபவர் இறைவன். ஆகையால் இறைவனின் பிரசன்னம் அவசியம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எப்படித் தூக்கம் வரும்? அதை இன்னொரு நாள் பார்ப்போம்.
இரண்டாவதாக, மற்றவர்கள் மேல் நம்பிக்கை கொள்ளும் ஒருவரே தூங்க முடியும். எனக்கு அருகில் தூங்குபவன் துப்பாக்கியோ, கத்தியோ வைத்திருப்பதை நான் பார்த்துவிட்டால் அவரோடு என்னால் தூங்க முடியுமா? 'சுட்டு விடுவானோ! குத்திவிடுவானோ?' என்றே தான் மனம் எண்ணிக்கொண்டிருக்கும். இதுதான் நம்பிக்கை.
மூன்றாவதாக, சலனமற்ற உள்ளம். நம் உள்ளத்தின் சலனங்களே பல நேரங்களில் நம் கனவுகளாக வருகின்றன. சலனமில்லாத உள்ளம் தூக்கத்தில் கனவுகள் காண்பதில்லை. சலனமற்ற உள்ளம் தனிநபர் சார்ந்தது.
மொத்தத்தில் இனிய தூக்கம் வர திருப்பாடல் 4 சொல்லும் வழிகள் மூன்று:
அ. உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாக இருங்கள்.
ஆ. முறையான பலிகளைச் செலுத்துங்கள்.
இ. ஆண்டவரை நம்புங்கள்.
இந்த மூன்றும் இருந்தால் நமக்குக் கிடைப்பவையும் மூன்று:
அ. மகிழ்ச்சி. சாதாரண மகிழ்ச்சி அல்ல! தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியை விட மேலான மகிழ்ச்சி! இன்னைக்கு உள்ள மாடர்ன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், 'ஸ்டேட் ஃபர்ஸ்ட வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சி!'
ஆ. மன அமைதியுடன் படுத்துறங்குவேன்.
இ. தனிமையாயிருந்தாலும் ஆண்டவர் பாதுகாப்பார்.
இன்றைக்கு இதில் ஒன்றை மட்டும் நாம் செய்வோமோ?
உள்ளத்தோடு பேசி அமைதியாக இருப்போம்!
என்றாவது நாம் நம்மைப் பற்றி நம்மிடம் பேசியிருக்கிறோமா? இன்றைக்குப் பேசிப் பார்ப்போம். நம்மையே நாம் வாய்விட்டுப் பாராட்டுவோம். தட்டிக் கொடுப்போம். தட்டிக் கேட்போம். ஆறாத காயங்களுக்கு நாமே மருந்திடுவோம்.
நம் பிறப்பிலிருந்து நம்மோடு வரும் நல்ல நண்பன் 'நாம்' தான். இறுதிவரை நம்மோடு இருக்கப்போவனும் இந்த 'நாம்' தான். நம்மோடு பேசக் கற்றுக்கொண்டால் வெளியிலிருந்து வரும் தனிமையோ, வருத்தமோ, சோகமா, வன்சொல்லோ, கண்டுகொள்ளாத்தன்மையோ எதுவும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
உள்ளத்திற்கு அமைதியும், இரவில் தூக்கமும் தராத எந்த நிகழ்வும்
வெறுமையையும், பொய்யானதையும் நாடிச்செல்வதேயாகும்!
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்?

நான் தினமும் உச்சரிக்கும் 'மாலை மன்றாட்டு' தான் இன்றையப்பகுதி.என்றாலும் கூட ஒரு சிறிய விஷயம் போதும் என்னை விடியும் வரைக் கலங்கடிக்க.எவ்வளவு ஜெபித்தாலும்,மாத்திரைகளின் உதவியை நாடினாலும் இன்று வரை நான் மேற்கொள்ள முடியாத பிரச்சனை.ஆனால் இன்று இதற்கு மருந்து கிடைத்துவிட்டதாக நம்புகிறேன்.ஆம்...தனிமையிலிருந்தாலும் ஆண்டவர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையோடும்,மனமிழ்ச்சியோடும் என் உள்ளத்தோடு பேசி படுத்துறங்குவேன்.மருத்துவரே! தங்களுக்கு என் நன்றிகள்....
ReplyDelete