இன்று மோனிக்கம்மாவின் திருநாள்.
மோனிக்கா என்றால் யார்?
புனித அகஸ்தினாரின் தாய்.
பிறந்த ஆண்டு, இடம் அனைத்தையும் கடந்து இவர் யார் என்று மட்டும் பார்ப்போம்.
மோனிக்கா என்றால் கண்ணீர் என்று அர்த்தம் சொல்லும் அளவிற்குக் கண்ணீர் வடித்தவர்.
'தென்னைய வச்சா இளநீரு...பிள்ளையப் பெத்தா கண்ணீரு...'
என்ற பாடல் வரிகளை மூன்றாம் நூற்றாண்டிலேயே அனுபவித்தவர் இவர்.
நம் உடலும் உள்ளமும் இயலாமையில் பேசும் மொழிதான் கண்ணீர்.
இறப்பு.
அதை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது?
இயலாமை கண்ணீராய் வழிகிறது!
பிறப்பு.
குழந்தையின் முதல் சிரிப்பு.
அதையும் வார்த்தையால் சொல்ல இயலாது.
இயலாமையில் கண்ணீர் வடிக்கின்றாள் தாய்.
நட்பு.
பிரிவு.
காதல்.
நெருக்கம்.
பிரிவு.
பயணம்.
பிரிவு.
அனைத்திலும் உடன் வருவேன் என்று சொல்வதற்குள்
உடனேயே வருவது கண்ணீர்.
கண்ணீர் பெண்களின் முதல் ஆயுதம்.
மனிதர்களை வெல்ல மட்டுமல்ல, கடவுளையை வெல்லும் ஆயுதம் கண்ணீர்.
கண்ணீர் ஆன்மா சுரக்கும் மருந்து.
தன் மகனுக்காய் கண்ணீர் வடித்த தாய் மோனிக்கா.
ஒவ்வொரு பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால் கண்டிப்பாய் ஒரு ஆண் இருப்பான்.
(ஆனால் ஒவ்வொரு ஆணின் கண்ணீருக்குப் பின்னால் இரண்டு பெண்கள் இருப்பார்கள்!)
அந்தக் கண்ணீருக்குக் காரணமாகவோ.
அந்தக் கண்ணீரின் தேவையாகவோ.
அந்தக் கண்ணீரின் ஏக்கமாகவோ.
'சும்மா எதுக்கெடுத்தாலும் அழாத!'
என்ற அதட்டலுக்குப் பின்னும் இருப்பது ஒரு இயலாமைதான்.
நம் ஒவ்வொருவரின் பிறப்பின் போதும்
கண்ணீர் வடித்திருப்பாள் தாய்...
வலியினால் வரும் கண்ணீரல்ல அது...
தன் குழந்தையோடிருந்த தொப்புள்கொடி அறுவதால் வரும் பிரிவின் கண்ணீர் அது...
பிரிவு என்றால் கண்ணீர்...
தன் மகன் கடவுளை விட்டுப் பிரிகிறான் என்று அவர் வடித்த கண்ணீர்
மறுபடியும் அவரை இறைவனோடு இணைக்கின்றது...
கண்ணீர் நல்லதுதான்...
No comments:
Post a Comment