Friday, August 23, 2013

மார்ட்டின் பியூபர்


ஆஸ்டிரியாவில் பிறந்து இஸ்ரேலில் ஒரு யூத மெய்யியலராக உருவெருடுத்தவர் பியூபர் (1878 – 1965). உரையாடல் மெய்யியல் என்ற புதிய சிந்தனையை எக்ஸிஸ்டன்சியலிசத்தோடு இணைத்தவர் இவர். 1923ல் இவர் எழுதிய 'இக் அன்ட் து' (ஐ அன்ட் தவ் - நானும் நீங்களும்) என்ற நூல் மிகவும் முக்கியமானது. 1925ல் எபிரேய விவிலியத்தை ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். 

இவரின் உரையாடல் மெய்யியலில் இவர் இரண்டு வகையான உறவுகளைப் பற்றி விளக்குகின்றார்.

1. நான் நீ (ஐ அன்ட் தவ்)
2. நான் அது (ஐ அன்ட் இட்)

1. நான் - நீ (நான் - நீங்கள்)
இந்த உறவு இருவருக்கிடையே மிகவும் பரஸ்பரமானது. ஒருவர் மற்றவரின் நலன் மட்டுமே விரும்பும் உரையாடல் உறவு. பார்ப்பது, சந்திப்பது, உரையாடுவது, ஒருவரையொருவர் கையளிப்பது என்ற அடிப்படையில் இந்த உறவு உருப்பெறுகின்றது. இரண்டு காதலர்கள், இரண்டு நண்பர்கள், ஓவியனும் மரமும், பார்ப்பவரும் பூனையும், டிரெயினில் சந்திக்கும் இரு அந்நியர்கள் என அனைத்து நிலைகளிலுமே இந்த உறவு சாத்தியப்படலாம்.

மனிதருக்கும், கடவுளுக்கும் உள்ள உறவும் இந்த வகைதான். இறைவனிடமும், இயற்கையிடமும், ஒருவர் மற்றவரிடமும் இந்த உறவை உருவாக்க நமக்குத் தேவைப்படுவதெல்லாம் பரந்த சிந்தனையும், திறந்த மனமும்தான்.

2. நான் - அது

இந்த உறவில் இணையும் இருவரில் ஒருவர் மற்றவரை சாதாரண பொருளாகப் பார்க்கின்றார். அடுத்தவரைப் பயன்படுத்தவும், பயமுறுத்தவும் தொடங்குகின்றார். பயம் இருக்கும் இடத்தில் அன்பு பறந்துவிடுகிறது. 

மனித உறவுகள் அனைத்துமே இந்த இரண்டிற்குமிடையே ஆடிக்கொண்டிருக்கும் ஊசலாகத்தான் இருக்கின்றது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நம் உறவு நிலைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.

அதிகமாக நம்மில் எந்த உறவுநிலை இருக்கின்றது?

No comments:

Post a Comment