Wednesday, March 2, 2016

அச்சுறத்தலும், முற்றுகையும்

யூதித்து நூலின் முதல் உட்பிரிவு (1:1-3:10) மற்றும் இரண்டாம் உட்பிரிவு (4:1-7:32) எதிரிகளின் அச்சுறுத்தலையும், இஸ்ரயேல் மக்களின் வலுவற்ற நிலையையும் நம் முன் வைக்கின்றன.

1. மிகைப்படுத்துதல்

இந்த இரண்டு உட்பிரிவுகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு இலக்கியக்கூறு 'மிகைப்படுத்துதல்' (magnification or exaggeration).

அதாவது, 'அவங்க அப்படியாக்கும்! இப்படியாக்கும்!' என்று நிறைய பில்ட்-அப் கொடுப்பது.

அவற்றிற்கான சில உதாரணங்கள்:

அ. 'எழுபது முழ உயரமும், ஐம்பது முழ அகலமும் உடைய மதில்களை எழுப்பினான்' (1:2)

இவ்வளவு பெரிய மதில்கள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் எதுவும் இல்லை.

ஆ. 'ஓர் இலட்சத்து இருபதாயிரம் தேர்ந்தெடுத்த வீரர்களையும் வில் வீரர்களான குதிரைப் படையினர் பன்னிரண்டாயிரம் பேரையும் திரட்டினான்' (2:15)

இந்நூலில் குறிப்பிடும் நிகழ்வுகள் நடைபெறும் காலத்தில் உலகத்திலேயே இவ்வளவு மனிதர்கள் இருந்திருப்பார்களா என்பதே ஐயமாக இருக்கிறது.

2. நோன்பும், தவமும், செபமும்

தங்கள் மன்றாட்டு இறைவனால் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக, நோன்பும், தவமும் இருந்து செபிக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இறைவனும் அவர்கள் குரலுக்குச் செவிகொடுக்கின்றார்.

3. அக்கியோரின் உரை

அக்கியோர் இஸ்ரயேல் மக்கள் யார் என்பதையும், அவர்களின் கடவுள் எப்படிப்பட்ட வல்ல செயல்களைச் செய்யக்கூடியவர் என்பதையும் ஒலோபெரினிடம் எடுத்துரைக்கின்றார்.

அக்கியோருக்கு நடந்தது என்ன?

நாளை பார்ப்போம்.