நாளைய (9 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 10:38-42)
தேவையானது ஒன்றே
'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக' என்று 'இறையன்பு' பற்றிய கட்டளையை முதலாகவும், 'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்று 'பிறரன்பு' பற்றிய கட்டளையை இரண்டாகவும் முன்வைக்கும் லூக்கா நற்செய்தியாளர், 'பிறரன்பிற்கு' எடுத்துக்காட்டாக 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டை' முதலாகவும், 'இறையன்பிற்கு' எடுத்துக்காடடாக 'மார்த்தா-மரியா-இயேசு நிகழ்வை' இரண்டாவதாகவும் எழுதுகின்றார். இவ்வாறாக, இறையன்பும், பிறரன்பும் சமநிலையில் வைக்கப்படுகின்றன.
'நாம் நல்லதொரு வாழ்வை வாழ்வதையே கடவுள் விரும்புகிறார். நன்மைகள் நிறைந்த வாழ்வே நாம் அவருக்குத் தரும் காணிக்கை. அத்தகைய வாழ்வு எளிமை, தாழ்ச்சி, கனிவு, பரிவிரக்கம் ஆகிய மதிப்பீடுகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். இவை தவிர்த்த வாழ்வு வெறும் பரபரப்பான பேச்சே' என்கிறார் டால்ஸ்டாய்.
மார்த்தா-மரியா இல்லத்திற்குச் செல்கின்றார் இயேசு. மார்த்தா இயேசுவை வரவேற்கின்றார். இயேசு உள்ளே வந்தவுடன் அவருடைய காலடிகளில் அமர்கின்றார் மரியா. சற்று நேரத்தில் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகிவிடுகின்றார். அத்தோடு, 'என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்கு கவலையில்லையா?' என்று முறையிடுகின்றார்.
'நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்...ஆனால்...தேவையானது ஒன்றே (unum necessarium)' என்கிறார் இயேசு.
இங்கே, 'ஆனால்' என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது. 'ஆனால்' என்ற இந்த வார்த்தை அதற்கு முன் சென்ற அனைத்து வார்த்தைகளின் பொய்யை தோலுரிக்கின்றது.
'தேவையானது ஒன்றே' - இதைக் கண்டுபிடிப்பவர் மிகவும் புத்திசாலி.
கொஞ்சம் அமர்ந்து நம் வாழ்வை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால், அந்த வாழ்வில் எத்தனை ஓட்டங்கள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்வோம். 'நான் நானாக இருக்க ஒரு ஓட்டம்,' 'நான் அடுத்தவருக்கு பிடித்தமாக இருக்க ஒரு ஓட்டம்,' 'ஓட்டத்தின்போதே அவன் எப்படி, இவள் எப்படி என்ற ஒப்புமை ஓட்டம்,' 'படிப்பு,' 'பட்டம்,' 'நண்பர்கள்,' 'உறவுகள்,' 'புதிய ஊர்,' 'புதிய உணவு,' 'அங்கே,' 'இங்கே' என ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, கடைசியில் இவை எதிலும் நம் மனம் இலயிக்காமல் இருப்பது கண்டு, 'ஆண்டவரின் காலடிகளை - இல்லை, அமைதியாகவாவது - தேடி அமர்கிறோம்.' நம்மைச் சுற்றி இருப்பவர்களும், இருப்பவைகளும் நம்மைப் போலவே குறைவானவர்கள். ஆக, குறைவு எப்படி இன்னொரு குறைவை நிரப்ப முடியும்? நிறைவான இறைவனே நம்மை நிரப்ப முடியும்.
நாளைய முதல் வாசகத்தில் (காண். கலா 1:13-24) நாம் காணும் தூய பவுலும் இதே மனநிலையைத்தான் கொண்டிருக்கின்றார். ஆண்டவரால் ஆட்கொண்ட பவுல் அதன்பின் தான் என்ன செய்தார் என்பதை கலாத்திய நகர திருச்சபைக்கு பதிவு செய்கின்றார். ஆண்டவரைக் கண்ட பவுல், 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என ஒவ்வொருவரிடம் சென்று தன்னை நிரூபித்துக்கொண்டிராமல், தனியே பாலைவனம் நோக்கி புறப்படுகின்றார். தன் வாழ்வின் ஓட்டம் அனைத்தும் வீண் என உணர்கிறார்.'எந்த விசுவாசத்தை அழிக்க முயன்றாரோ அதே விசுவாசத்தை அவர் அறிவிக்க தொடங்குகின்றார்.'
இவ்வாறாக, அவரின் காலடிகளில் அமர்வது அனைத்தையும் புரட்டிப்போட்டுவிடுகிறது.
இப்படி நமக்குக் கிடைக்கும் அனுபவம் ஓர் உயரிய அனுபவம்.
ஆகையால்தான், இயேசுவும், 'அவள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது' என்கிறார். நாம் வைத்திருக்கும் மற்ற அனைத்தும் நம்மிடமிருந்து எடுக்கப்படலாம். அல்லது அதை மற்றவர் ஓவர்டேக் செய்துவிடலாம்.
இம்மேலான அனுபவத்தையே, திருப்பாடல் ஆசிரியர், 'என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும் ஆண்டவரே' (காண். திபா 139) இறைவேண்டல செய்கிறார்.

" தேவையானது ஒன்றே "---
ReplyDeleteஇதைக் கண்டுபிடிப்பவர் மிகவும் புத்திசாலி...
" அவள் நல்ல பங்கைக் தேர்ந்து கொண்டாள்"
அது அவளிடமிருந்து எடுக்கப்படாது.
மிகவும் தேவையான அந்த நல்ல பங்கினை யாம் எம் வாழ்வில் நனவாக்கிட....
இறைவா உம் அருள் தா.....
உம்மை யாம் இறுக பற்றிக் கொள்ள எமை உம் உன்னத வழியில் நடத்தியருளும்...
நிறைவான இறைவா! எமை நிரப்பும்...
ReplyDeleteஉம் காலடிகளில் அமர்வது எத்துணை சுகமானது...
“நம்மைச்சுற்றி இருப்பவர்களும், இருப்பவைகளும் நம்பைப்போலவே குறைவானவரகள்; குறைவு எப்படி இன்னொரு குறைவை நிரப்ப முடியும்?. நிறைவான இறைவனே நம்மை நிரப்ப முடியும்”.. இந்த எண்ணம் நம்மை ஆட்கொண்டுவிட்டால் இறைவன் மட்டுமே நம்மை நிரப்புவார் என்பது திண்ணம்.. ஆண்டவரைக் கண்ட பவுலும் அவரைக்கண்டதன் விளைவாகத் தான் அழிக்க நினைத்த விசுவாசத்தை அனைவருக்கும் பரப்புகிறார்... இதன் மூலம் நாம் அறிவது... இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட ஒன்றை நாம் மட்டுமே சொந்தம் கொண்டாட விரும்பாமல் அதை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதே!ஆனால் பல நேரங்களில் ‘எது தேவையான பங்கு?’ எனத் தெரிந்து கொள்வதில்தான் சிரம்ம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ளத்தான் “ என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்” என்கிறாரோ திருப்பாடலின் ஆசிரியர்?
ReplyDeleteஆனால் ஒன்று. .... அவர் காலடியிலிருந்து எழுந்தபின்...” அந்த ஒன்று நம்மை நிரப்பியபின் நாம் தேடுவது இந்த வயிற்றுக்கான உணவைத்தானே! அதைக்குறித்த வேலைகளில் தன்னை இணைத்துக்கொண்ட மார்த்தாவை நாம் குறை சொல்ல முடியுமா... என்ன? தந்தை தான் பதில்அளிக்க வேண்டும். அளிப்பாரா?
There is a tendency to compare these 2 sisters The story is not about comparison but completion; not about who is better but when is better; not about what is better but where is better.As we play host to Jesus, we need both: action & contemplation.Thus in the church we have active religious orders that concentrate on doing: we also have contemplative religious orders cloistered in silence & solitude who focus on being.Martha is the active host busy in the kitchen; Mary is the contemplative host seated silently at the feet of Jesus listening to HIS word.Both Martha & Mary are disciples of Jesus for both acknowledge HIM as their Lord.Both serve HIM: One by doing, Other by being...
ReplyDeleteWe can select as we please...
But l always prefer"BEING".....
Good Reflection Yesu .
ReplyDeleteGoodafternoon Sister! ( I address u that way since U've not disclosed ur identity) Thanks a lot for clearing my doubt that has been always bothering me. I get very angry when people say Maria has chosen the better part in comparison with Martha . I feel nice to read that Martha is the active host busy in the kitchen."As we play host to Jesus we need people both of action& contemplation"..U've nailed it. Good explanation.Again I feel, it's not about what one prefers... But it's about what I'm called for.Whether I'm at the feet of Jesus listening to Him or busy in the kitchen playing the role of a host I am serving Him....Yes.. Iam serving Him.Thanks alot sister for elating the role of " DOING" to that of "BEING"! May God bless us....
ReplyDeleteAkka,it's me mother of primrose & lizni rose
ReplyDeletewow! Feel so Great! Do continue the good job. Love& Godbless...
DeleteThank you sis
ReplyDelete