நாளைய (2 மார்ச் 2018) நற்செய்தி (மத் 21:33-43, 45-46)
இவன்தான் சொத்துக்கு உரியவன்!
நாளைய நற்செய்தி வாசகத்தில் கொடிய குத்தகைக்காரர் எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.
ஒரு குழுவிடம் ஒரு திராட்சைத் தோட்டம் குத்தகையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. குத்தகைக்கு எடுப்பவர் தோட்டத்தின் விளைச்சலில் பங்கைச் சுவைக்கலாமே தவிர தோட்டத்தின்மேல் உரிமை கொண்டாட முடியாது. ஆக, உரிமை இல்லாத இடத்தில் உரிமை கொண்டாடுவது வன்முறை அல்லது அத்துமீறல்.
கடந்த ஒரு வாரமாக சிரியாவின் போர் உக்கிரமாகிக்கொண்டு வருகின்றது. அப்பாவி குழந்தைகளும், பெண்களும் வன்முறைக்குப் பலியாகின்றனர். இந்தக் குழந்தைகளின் உயிரை எடுத்துக்கொள்ளும் உரிமை எந்த அரசுக்கும் எழுதி தரப்படவில்லைதானே!
மேலும், மேற்காணும் திராட்சைத் தோட்ட குத்தகைகாரர்கள் தலைவரை நேரடியாக எதிர்கொள்ள பயந்து அவரது பணியாளர்கள் மற்றும் மகன் மேல் தங்கள் வன்மத்தை தீர்த்துக்கொள்கின்றனர். இது அவர்களின் இரண்டாவது தவறு. அதாவது, ஒருவருடைய இயலாமையை அல்லது மென்மையைப் பயன்படுத்தி தங்களுக்கு இயல்வது அல்லது தங்கள் வன்மையைச் சாதித்துக்கொள்வது.
இவ்வாறாக,
அத்துமீறல் அகற்றி அடுத்தவரின் உரிமையை மதிக்க நம்மை அழைக்கிறது நாளைய வாசகம்.

ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு.... " Very often goodness is mistaken for weakness" என்று. அதையே தான் தந்தையும் சொல்கிறார்..."ஒருவரின் மென்மையைஅல்லது இயலாமையைப்பயன்படுத்தி தங்கள் வன்மையை சாதித்துக்கொள்வது" என்று.அரிவாளை தூக்குவது மட்டுமே அத்து மீறல் இல்லை... நமக்கடுத்திருப்பவரின் எல்லைக்குள் நுழைவதும் கூடத்தான். நம்மிடம் அத்துமீறுபவர்களுக்கு நம் " அன்பை", " அன்பான வார்த்தைகளை"ப் பரிசளிப்போம்.தந்தைக்கு என் இரவு வணக்கம்!!!
ReplyDelete