Saturday, March 3, 2018

அண்டிப் பிழைக்கச் சென்றார்

இன்றைய (3 மார்ச் 2018) நற்செய்தி (லூக் 15:1-3,11-32)

அண்டிப் பிழைக்கச் சென்றார்

தந்தையை விட்டுப் பிரிந்த இளைய மகன் மற்ற நாட்டவர் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார்.

ஆக, மகனாக இருந்தவர் வேலைக்காரராக மாறுகின்றார். இதுதான் அவர் அனுபவித்த மிகப் பெரிய வலியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். மகனாக இருக்கும் வரை அவருக்கு எல்லாம் இருந்தது. தந்தையின் வீட்டில் அனைத்து உரிமைகளும் இருந்தன. வேலை வாங்குவதற்கு ஏவலர்களும், வேலைக்காரர்களும் இருந்தனர். ஆனால் இப்போது அந்த நிலையிலிருந்து அவர் இறங்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.

'அண்டிப் பிழைத்தல்' என்பது தனது தனிப்பட்ட சுதந்திரத்தை மற்றவர்களுக்கு கொடுத்துவிடுவது. உதாரணத்திற்கு, போர் மற்றும் இயற்கைச் சீற்றத்தால் நாடுவிட்டு நாடு புலம்பெயர்ந்து செல்பவர்கள் தங்கள் சொந்த நாட்டின் மேல் உள்ள உரிமையை விட்டுக்கொடுத்தால்தான் அடுத்த நாடு அவர்களைத் தன் நாட்டிற்குள் வர அனுமதிக்கும்.

இவ்வாறாக, 'அண்டிப் பிழைத்தல்' நம் வாழ்வின் சுதந்திரத்தை நம்மிடமிருந்து எடுத்துவிடுகிறது. மேலும், அது நம்மை மகன் நிலையிலிருந்து அடிமை நிலைக்குத் தள்ளிவிடுகின்றது.

2 comments:

  1. எதுவும் நம் கைக்கெட்டும் தூரத்திலிருக்கும் வரை அதன் அருமை புரிவதில்லை. இது நாம் நேசிப்பவர்களுக்கும் பொருந்தும்.ஆனால் அவை/ அவர்கள் நம் கையை விட்டு நழுவியபின் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பலரைப்பார்த்திருப்போம்.அப்படி ஒரு கதை மாந்தர் தான் இந்த ' ஊதாரிப்பையன்.' தன்னைச்சுற்றி இருந்த எதன் மதிப்பும் தெரியாதுபோனவன்.' அண்டிப்பிழைக்கச்' சென்ற இடத்தில் பன்றிகளை விட தரம் தாழ்ந்தும் போனவன்.' அண்டிப்பிழைத்தல்' என்பது நம் சுதந்திரத்தைப்பறிப்பது மட்டுமின்றி நம்மை மகன்/ மகள் நிலையிலிருந்து அடிமை நிலைக்குத் தள்ளி விடுகிறது' என்கிறார் தந்தை.கையில் இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படும் அனைவருக்குமே இன்றையப் பதிவு நல்லதொரு பாடம். அழகானதொரு வாழ்வுப்பாடத்தை அழகாகச் சொன்ன தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete