Sunday, April 6, 2014

மரணம் ஒரு மந்திரச்சொல்

பெத்தானியாவின் லாசர் உயிர் பெற்ற நிகழ்வை இந்த ஞாயிறு நாம் திருப்பலியில் வாசிக்கின்றோம்.

உயிர் பெற்ற லாசர் வாழ்வை இரண்டாம் முறை வாழும் வாய்ப்பு பெற்றவர்.

முதன்முறை தவறியதையெல்லாம் பின் சரிசெய்திருப்பாரா?

தன் அக்கா, தங்கையிடம் 'இறப்பு' எப்படி இருந்தது என்று சொல்லியிருப்பாரா?

பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரைப் பார்த்து என்ன சொல்லியிருப்பார்கள்?

இரண்டாம் முறை அவர் இறந்த போது மக்கள் அவரது அடக்கத்திற்கு வந்திருப்பார்களா? அல்லது 'இவர் மறுபடியும் உயிர்ப்பார்!' என நினைத்திருப்பார்களா?

மரணம்...என்றும் ஒரு மந்திரச்சொல்!

1 comment:

  1. Anonymous4/06/2014

    இன்றைய வாசகம் இயேசு உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை விளக்குகிறது.மரணத்தின்'வலி'க்கு அவரும்கூட விதிவிலக்கல்ல என்று நமக்குப் புரிய வைக்கிறது. 'மரணம்'..எந்த வீரசூரனையும்கூட சலசலக்க வைக்கும் மந்திரச்சொல்தான்.லாசரைப்போல நமக்கும் இரண்டாம் முறை வாழும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? இரண்டாம் வாழ்வில் சரிசெய்துகொள்ளலாம் என்று முதல் வாழ்வை மனம்போன போக்கில் வாழ்வோம்.போதுமே! நம் மனசாட்சிக்கும் சகமனிதனுக்கும் கட்டுப்பட்ட முறையான ஒரே வாழ்க்கை போதுமே!

    ReplyDelete