Saturday, April 5, 2014

குடம் சுமக்கும் மகளிர்

அவர்கள் நகரின் மேட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது, இளம் பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதைக் கண்டு, அவர்களிடம், 'திருக்காட்சியாளர் இங்கே இருக்கிறாரா?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'ஆம். உங்களுக்கு முன்பே வந்துவிட்டார். விரைந்து செல்லுங்கள்...' என்றனர். (1 சாமுவேல் 9:11-14).

சவுல் கழுதையைத் தேடும் நிகழ்வின் மற்றொரு பகுதியைப் பார்ப்போம்.

தண்ணீர் சுமக்கும் இளம்பெண்கள்.

இன்று இளம்பெண்களைச் சந்திக்க வேண்டுமானால் நாம் எங்கே செல்ல வேண்டும்? ஃபேஸ்புக்கிற்குத் தான்.

அன்று ஆண்கள் சந்திக்கும் இடமாக இருந்தது நகர வாயில். பெண்கள் சந்திக்கும் இடமாக இருந்தது கிணறு. இந்த இரண்டு இடங்களில்தாம் தகவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். 'அது யாரு? இது யாரு? அங்க என்ன நடந்தது? இங்க என்ன நடந்தது?' என்று ஒருவருக்கொருவர் 'டுவிட்' செய்தது நகர வாயிலிலும், கிணற்றடியிலும் தான்.

சவுல் கேட்கும் கேள்வியை விட அதிகமாகவே பதில் சொல்கிறார்கள் பெண்கள்.

சவுல் அரசராகும் நிகழ்வில் வேலைக்காரர், பெண்கள், கழுதைகள் முக்கியத்துவம் பெறுவதாக எழுதுகின்றார் இந்நூலின் ஆசிரியர். விளிம்புகள் மையமாகின்றன.

நம் வாழ்விலும் விளிம்புகள் மையமாகின்றன.

இன்று நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் மற்றவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறதா என்பதை சுயஆய்வு செய்ய நம்மை அழைக்கின்றனர் இந்தக் குடம் சுமக்கும் மகளிர்.

1 comment:

  1. Anonymous4/05/2014

    இன்றையப் பகுதியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ள 1சாமுவேல் 10ம் அதிகாரத்தையும் வாசித்தேன்.தந்தையின் விருப்பப்படி கழுதைகளைத் தேடிச்சென்ற சவுலுக்குக் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்கள் பற்றிக் கூறுகிறார் திருக்காட்சியாளர் சாமுவேல்.அவையும் நடந்தேறுகின்றன.குடம் நமக்கும் மகளிரோ இல்லை ஐ பேட்,ஐ ஃபோன் சகிதம் வலம்வரும் யுவதிகளோ சொல்வதால் நமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.விளிம்புகளை மையமாக்குவதும்,குப்பைமேட்டைக் கோபுரமாக்குவதும்,மண்துகற்களை மலையுச்சியாக்குவதும் அவரின் 'கடைக்கண் பார்வை'மட்டுமே! இது ஒன்றை மட்டும் மனத்திலிருத்துவோம் யாரையும் நம் விமர்சனத்துக்குள் கொண்டு வரும்போது. அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்.

    ReplyDelete