Wednesday, March 19, 2014

வளன் என்னும் மௌனி

நாளை நம் திருஅவை தூய வளனாரின் திருநாளைக் கொண்டாடுகிறது. வளனாருக்கு இரண்டு நாட்கள் திருநாட்கள் உண்டு: ஒன்று மார்ச்சு 19 மற்றொன்று மே 1. மார்ச்சு 19 அன்று அவரை அன்னை மரியாளின் துணைவர் எனவும், மே 1 அன்று தொழிலாளர்களின் பாதுகாவலர் எனவும் சிறப்பிக்கின்றது.

வளன் ஒரு நீதிமான். வளன் ஒரு ஞானி. வளன் ஒரு மௌனி.

அவரை நீதிமானாகவும், அவரை ஞானியாகவும் ஆக்கியது அவரது மௌனம்தான்.
மௌனம்.

ஒரு பெரிய வரம்.

பேச்சைப் போலவே மௌனத்திற்கும் மதிப்பு உண்டு.

சத்தமும் மௌனமும் இணைவதே இசை. இருளும் ஒளியும் இணைவதே ஓவியம். இருமையும் இல்லாமையும் இணைவதே சிற்பம்.

இயேசுவின் வளர்ப்புத் தந்தை இவர். இவர் பேசியதாக விவிலியத்தில் எதுவுமே பதிவு செய்யப்படவில்லை. மௌனமாகவாக நிழலாடுகின்றார். 

நம் வாழ்விலும் மௌனமாக நம்மேல் உடன் வருபவர்கள் பலர். அவர்கள் தங்கள் முகங்களை நமக்குக் காட்டுவதில்லை. அவர்கள் நம்மோடு பேசுவதில்லை. ஆனால் அவர்கள் நம் நல்வாழ்விற்காகத் தங்களையே ஏதோ ஒரு வகையில் கையளிக்கிறார்கள்.

வளன் என்னும் இந்த மௌனி நமக்கு மௌனத்தைக் கற்றுக்கொடுக்கட்டும். அந்த மௌனத்தில் நம் இதயத்தின் உள் ஒலியைக் கேட்போம்.

வளன் வழி இறைவன் நம்மை ஆசிர்வதிப்பாராக!

2 comments:

  1. Anonymous3/19/2014

    உரக்கப் பேசினால்தான் ஊருக்குக் கேட்கும் என்பவர்களுக்கு மத்தியில் தன் மௌனத்தாலேயே பலரைத்தம்மிடம் இழுத்த காரியவாதி வளனார் என்னும் இந்தப் புனிதர்; எம் பங்கின் பாதுகாவலர்.குடும்பத்தலைவரகளுக்கு, படிக்கும் குழந்தைகளுக்கு, திருமணம் வேண்டிக் காத்திருப்பவர்களுக்கு,வேலை வாய்ப்புக்கு,நல்ல மரணத்துக்கு என்று இத்தனைக்கும் பாதுகாவலரைப பற்றிக் கொள்வோம்...பலனை அனுபவிப்போம்...படத்தில் உள்ள அந்த இளமை த்தும்பும் சூசையும் குழந்தை இயேசுவும் ரொம்பவே அழகு.

    ReplyDelete
  2. Anonymous3/19/2014

    கீழ்ப்படியக் கற்றுக்கொள்வது, அமைதி காக்கக் கற்றுக்கொள்வது, பேசத் தேவைப்படும் போது குறைவாகவும் அடக்கமாகவும் பேசுவது என்பவற்றை புனித சூசையப்பர் நமக்குக் கற்றுத்தருகின்றார். புனித சூசையப்பர் திருமறையில் ‘சான்றோர்’ என கெளரவப்படுத்தப்படுவதுடன், தொழிலாளர்களின் பாதுகாவலராகவும், கல்விக்கும் கற்புக்கும் பாதுகாவலராகவும் விளங்குகிறார். நம் குடும்பங்களையும் அவர் ஆசீர்வாதத்துக்கு ஒப்புக்கொடுப்போம்.

    ReplyDelete