Monday, March 31, 2014

ஏதேன் தோட்டம்

இன்றைய உலகை ஒரு ஏதேன் தோட்டம் என்று சொல்லலாம். நம்மைச் சுற்றி எண்ணற்ற மரங்கள் இருக்கின்றன. நாம் அனுப்பிய செயற்கைக் கோள்கள் நம்மைச் சுற்றி விண்மீன்களாக இருக்கின்றன. நம் அந்தரங்களுக்குள் வந்து பார்க்க நாம் நம் தொழில்நுட்பத்திற்கு அதிகமாகவே இடம் கொடுத்து விட்டோம். நாம் எங்கே இருக்கிறோம்? யாரோடு பேசிக் கொண்டிருக்கிறோம்? எவ்வளவு செய்திகளைப் பரிமாறுகிறோம்? எவ்வளவு செலவழிக்கிறோம்? எவ்வளவு கடன் வாங்குகிறோம்? எந்தக் கலர் வீட்டில் குடியிருக்கிறோம்? எந்நேரம் துணி துவைத்து நம் மொட்டை மாடியில் காய வைத்தோம்? எல்லாமே எல்லாருக்கும் தெரியும். நாம் வெறும் டேட்டா. நம்மை அழிக்கலாம். டவுன்லோட் செய்யலாம். அப்லோட் செய்யலாம். ஷேர் செய்யலாம். ஏதேன் தோட்டத்தின் ஆதாம், ஏவாளைப் போல நாமும் நிர்வாணமாகத் தான் நிற்கின்றோம். நாமும் வெட்கப்படுவதில்லைதான்! இன்று நம்மைச் சுற்றி நம்மைச் சோதிக்கும் பாம்பு கையாளும் ஒரே சொல்லாடல் இதுதான்: 'இதைவிட அது பெட்டராத் தெரியல?!' இந்தக் கேள்வியால் அது ஒவ்வொரு பொழுதும் நம்மைச் சோதித்துக்கொண்டே இருக்கின்றது.

இந்தப் பெண்ணைவிட அவள் பெட்டராத் தெரியல? இந்த மொபைலை விட அது பெட்டராத் தெரியல? ஆன்ட்ராய்டை விட ஆப்பிள் பெட்டராத் தெரியல? யாகுவை விட கூகுள் பெட்டராத் தெரியல? பிரிட்டானிக்காவை விட விக்கிபீடியா பெட்டராத் தெரியல? வைபரை விட வாட்ஸ்ஆப் பெட்டராத் தெரியல? பிஎஸ்என்எல்லை விட ஏர்டெல் பெட்டராத் தெரியல? நாம் எதை எடுத்தாலும் மற்றொன்று அதை விட பெட்டராகவே தெரிகிறது. வாழ்வின் கனியும், அறிவின் கனியும் இன்று நம் கண்கள் முன் வந்து போகின்றன. இது வாழ்வு தராதா? இது அறிவு தராதா? என்று நம் மனம் அலைபாய்கின்றது. ஆதாம், ஏவாளை விட இன்று நமக்குச் சோதனைகள் அதிகம்தான். பாவம் மனிதர்கள்!

இந்தக் காலகட்டத்தில் இயேசுவும் ஒரு ஆஃபர் கொடுக்கின்றார்: நானே வழியும், எதார்த்தமும், வாழ்வும். இந்த ஆஃபரின் பொருள் என்ன? வழி, எதார்த்தம், வாழ்வு என்பது இயேசுவின் மூன்று அடையாளங்கள் மட்டுமல்ல. அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை.

வழி நற்செய்தி நூல்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இடுக்கலான வழி, குறுகலான வழி, 'யார் பெரியவர்?' என்று வாதிடும் வழி, வழிப்போக்கனாக இயேசு எம்மாவு நோக்கிப் பயணிக்கும் வழி, சிலுவையின் வழி என எண்ணற்ற வழிகளை நாம் பார்க்கின்றோம். நாம் மேற்கொள்ளும் வெளிஉலகப் பயணத்திற்கான வழியை கூகுள் மேப்ஸ் இன்று எளிதாகக் காட்டிவிடுகிறது. நாம் தவறினாலும் சுட்டிக் காட்டுகிறது. வேகமாகச் சென்று இலக்கை அடைய நிறைய சாய்சும் இருக்கின்றது. ஆனால் உள்மனப் பயணத்திற்கு நமக்கு உதவு எந்த அப்ளிகேசனும் இன்னும் வரவில்லையே? வழி தெளிவாக வேண்டுமென்றால் இலக்கு தெளிவாக வேண்டும். இலக்கு தெளிவில்லாமல் இருக்கும் போது நாம் எந்த வழியில் போனாலும் அது ஒரு பெரிய மாற்றத்தை நம்மிடம் கொண்டு வருவதில்லை.

நம் இலக்கு வாழ்வாகவும், அதற்கான வழி உண்மை எனவும் இருக்க வேண்டும். இவ்வாறாக வழி, வாழ்வு, உண்மை ஒன்றோடொன்று கரம் கோர்க்கிறது. கிரேக்க மொழியில் உண்மை என்று சொல்லப்பட்டிருப்பதை விட எதார்த்தம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. எதார்த்தம் என்பது மிகவும் நெகிழ்வான பொருள் கொண்டது. எதார்த்தம் என்றால் என்ன? பிறழ்வு படாத எல்லாமே எதார்த்தம். பிறழ்வு பட்டால் அது பொய் என மாறிவிடுகின்றது.

மிகச் சின்ன உதாரணம். பசு பால் தரும் என்பது எதார்த்தம். அதையே ஆவினும், ஆரோக்கியாவும் தருகிறது என்றால் அது பிறழ்வு. என்னதான் அவர்கள் முயற்சி செய்து 100 சதவிகித பாலைத் தர முயன்றாலும் அது பிறழ்வுதான். நம்மை அறியாமலேயே நாம் உண்மைகளையெல்லாம் பாக்கெட்டில் அடைக்கத் தொடங்கிவிட்டோம். ஆடை என்பது எதார்த்தம். ரேமண்ட் என்றும் குரோகொடைல் என்றும் அதை பாக்கெட் செய்வது பிறழ்வு. பிறழ்விலிருந்து எதார்த்தத்தை நாம் பிரித்தெடுக்கும் மனப்பக்குவம் பெற வேண்டும்.

நம் வாழ்வில் உணர்வுகளில், எண்ணங்களிலும் நாம் பிறழ்வுகள் கொண்டிருக்கிறோம். 'அனைவரும் சமம்' என்பது எதார்த்தம். 'நான் பெரியவன் - நீ சிறியவன்' என்பது பிறழ்வு. 'எல்லாரையும் அன்பு செய்ய வேண்டும்!' என்பது எதார்த்தம். அன்பு ஒரு மோகப் பொருளாக மாறுவது பிறழ்வு. பிறழ்வுகள் களைவதே உண்மை. இயேசுவின் வாழ்க்கையில் பிறழ்வுகள் என்பதே இல்லை. தன்னைச் சுற்றியிருந்த சமுதாயத்தில், சமயத்தில் நிலவிய பிறழ்வுகளின் ஆடை உரிக்கின்றார் அவர்.

பிறழ்வு என்பது சைனா ஃபோன் மாதிரி. ரொம்ப சத்தம் போடும்.

ஆனால் உண்மை என்பது ஆப்பிள் ஃபோன் மாதிரி. அமைதியாக இருக்கும்!

வழியின் இலக்கு வாழ்க்கையாக இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் காரணிகளை வாழ்வின் காரணிகள், இறப்பின் காரணிகள் என இரண்டாகப் பிரிக்கின்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். நமக்கு நிறைவான மகிழ்வைத் தருவது வாழ்வின் காரணி எனவும், உடனடி இன்பம் தருவது சாவின் காரணி எனப் பொருள் கொள்ளலாம். கருத்தடை வாழ்வின் காரணியா? இல்லை. உடனடியாக நமக்கு இன்பம் தருகிறது. குடும்பம் என்ற பொறுப்பிலிருந்து நமக்கு விடுதலை தருகிறது. காலப்போக்கில் அது நம் மகிழ்வையே எடுத்து விடுகிறது. பொய் என்பது சாவின் காரணி. பொய் சொல்லும் போது உடனடியாக வரும் ஒரு பிரச்சினையிலிருந்து தப்பி விடலாம். ஆனால் காலப்போக்கில் அது பெரிய ஆக்டோபஸாக வளர்ந்து நம்மை இறுக்கி விடுகிறது.

நாம் கேட்க வேண்டியதெல்லாம் இதுதான்: 'இன்று இயேசு என்ன செய்வார்?' என் அலுவலகத்தில், என் கல்லூரியில், என் குடும்பத்தில் இன்று இயேசு இருந்தால் என்ன செய்வார்? அதை ஒரு நிமிடம் நினைத்து அதன் படி நாமும் செய்தால் அதுவே வழி! வாழ்வு! எதார்த்தம்!

Sunday, March 30, 2014

ஒற்றை நாணயம்

அது ஒரு கல்லூரி மாணவியர் விடுதி.

மாலாவின் ரூம் மேட் சுமதி.

மாலா அழகான ஒரு டெடி பொம்மை வைத்திருந்தாள். பார்க்க மிகவும் பழையது போல இருந்தாலும் அதை ஒருமுறையாவது முத்தமிடமால் அவள் தூங்கப் போக மாட்டாள். இதை தினமும் கவனித்துக் கொண்டிருந்தாள் சுமதி.

மாலா வெளியே சென்ற நேரம் அந்த பொம்மையை எடுத்து ஒளித்து வைத்து விட்டாள்.

தன் டெடியைக் காணாமல் அல்லாடினாள் மாலா.

சுமதியிடம் கேட்டாள்: 'நீ பார்த்தாயா?'

'இல்லை! எனக்கென்ன தெரியும்!' சமாளித்தாள் சுமதி.

நடுஇரவில் அழுகைச் சத்தம். எழுந்து பார்த்தாள் சுமதி. டெடி இருந்த இடத்தில் அமர்ந்து மாலா அழுது கொண்டிருந்தாள். கையில் அவளது அம்மாவின் ஃபோட்டோ.

'ஏன்டி அழுற?'

'என் டெடியைக் காணோம். அதான் எங்க அம்மாவிடம் கேட்கிறேன்!'

'உன் அம்மா சொல்லிடுவாங்களா!' 'உன் அம்மா என்ன சாமியா?'

'ஆமா...எங்க அம்மா சாமிதான். அவங்க நான் 4ஆம் வகுப்பு படிக்கும் போதே இறந்துட்டாங்க!'

'ஸாரிடி...'

மாலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள் சுமதி.

'ஒரு நாள் நானும் என் அம்மாவும் எங்க ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள சந்தைக்குப் போனோம். அங்கே ஒரு டெடி பொம்மை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எங்க அம்மாகிட்ட கேட்டேன். வீட்டில் பாத்திரம் தேய்த்துச் சம்பாதிக்கும் அவங்களால அதை உடனே வாங்கித்தர முடியல. கொஞ்சங் கொஞ்சமாக சேர்த்து வச்சி வாங்குனாங்க. சில மாதங்களாக ஆஸ்துமா நோயினால கஷ்டப்பட்ட அவங்க திடீர்னு ஒருநாள் இறந்திட்டாங்க.'

இறக்கும் போது ஒன்னு சொன்னாங்க:

'நம் வாழ்க்கைக்கு பெரிய அர்த்தங்கள் கொடுப்பவை எல்லாம் மிக எளிதில் கிடைத்து விடாது!'

இந்த டெடி எனக்கு வெறும் பொம்மை அல்ல.

இது என் அம்மாவின் உழைப்பு.

இது என் அம்மாவின் கண்ணீர்.

அடுத்த நாள் வகுப்பிற்குச் சென்று திரும்பிய மாலா தன் கட்டிலில் தன் டெடி இருப்பதைப் பார்த்தாள்.

ஓடி வந்து அதை அணைத்துக் கொண்டாள்.

பக்கத்து அறைகளுக்கு ஓடினாள். தன் தோழிகளை அழைத்தாள்.

அவளின் முகமெல்லாம் புன்சிரிப்பு.

'பெண் ஒருவரிடம் இருந்த பத்து நாணயங்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால்
அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி
அதைக் கண்டுபிடிக்கும் வரை கவனமாகத் தேடுவதில்லையா?'

அந்தப் பெண்ணிடம் ஒரேயொரு நாணயம் இருந்து...

அதையும் அவள் தொலைத்துவிட்டால்...?!

Saturday, March 29, 2014

ஐஃபோன் கேட்டால் கேலக்ஸி கொடுப்பாரா?

நேற்று அருட்பணி. பால்பிரிட்டோ அவர்களோடு ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் இறுதியில் 'எழுதுவதற்கு ஏதாவது ஐடியா கொடுங்க!' என்று சொன்னேன். 'உவமைகள் பற்றியும், திருப்பாடல்கள் பற்றியும், தேம்பாவணி பற்றியும் எழுதலாம்!' என நினைத்தபோது புதியதாக எழுது! என்றார். 'விவிலியத்தை அதன் மூல மொழியில் படிக்கும் பாக்கியம் உரோமையில் நீ படிக்கும் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். மூல மொழிக்கும், மொழிபெயர்ப்பிற்கும் உள்ள இடைவெளியைப் பற்றி எழுது!' எனச் சொன்னார்.

நான் நேற்று முழுவதும் இதைப் பற்றி யோசித்தேன். ஒவ்வொரு மொழி பெயர்ப்பும் ஒரு விளக்கவுரைதான். எடுத்துக்காட்டாக, 'நானே உண்மையும், வாழ்வும், வழியும்' என இயேசு சொல்வதாக இருக்கும் பகுதி கிரேக்க மொழியில் 'நானே எதார்த்தமும், வாழ்க்கையும், பாதையும்' என இருக்கிறது. இரண்டிற்கும் இடைவெளி இருக்கத்தானே செய்கிறது. இந்த இடைவெளி ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் விவிலியத்தின் எழுத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும் இடைவெளி இருக்கத்தான் செய்கின்றது. இந்த இடைவெளிகளையெல்லாம் பற்றி எழுதலாமே! என முடிவும் செய்தேன்.

இன்று முதல் நாம் தொடங்கும் இந்தப் பயணத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? தற்காலிகமாக, 'சொன்னதும் - சொல்லாததும்!' என வைப்போம்.

இதற்கு முன் 'கேள்விகள்' என்று நாம் தொடங்கினோம். விவிலியத்தில் ஒருவர் மற்றவரைப் பற்றிக் கேட்ட 101 கேள்விகளை நாம் சிந்தித்துள்ளோம்.

இன்று முதல் நாம் தொடங்குவது: 'சொன்னதும்! சொல்லாததும்!'

எதில் தொடங்குவது?

இடைவெளிகள் என்ற அடிப்படையில் பார்த்தால் விவிலியத்தில் அவைகளை மூன்றுவகைகளாகப் பிரிக்கலாம்:

1. கதைமாந்தர்கள்.
2. கதையாடல்கள்.
3. கதைமாற்றங்கள்.

1. கதைமாந்தர்கள். கதைமாந்தர்கள் இரண்டு குழுக்களாக இருக்கின்றனர். உண்மையான கதைமாந்தர்கள். கதையின் கதைமாந்தர்கள். உண்மையான கதைமாந்தர்கள் உண்மையானவர்களா என்பதை நாம் நிரூபிக்க முடியாது. ஆனாலும் அவர்களை உண்மை என எடுத்துக்கொள்வோம். இவர்களுக்கு உதாரணம்: ஆபிரகாம், சாரா, ஈசாக்கு, ரெபேக்கா, யாக்கோபு, லெயா, ரேச்சல், மோசே, தாவீது, சக்கேயு, இயேசு, மரியா, யோசேப்பு, தோமா போன்றவர்கள். கதையின் கதைமாந்தர்கள் என்பவர்கள் உருவகங்களாக வருபவர்கள். எடுத்துக்காட்டாக, நற்பேறு பெற்றவர், ஞானி, நல்ல சமாரியன், ஊதாரி மகன்.

இந்தக் கதைமாந்தர்கள் வாழ்விலும் 'சொன்னதும் இருக்கின்றது. சொல்லாததும் இருக்கின்றது!:

எரியும் முட்புதரில் யாவே இறைவனைக் காணும் மோசேயிடம் 'உன் காலணிகளைக் கழற்று!' என்கிறார் இறைவன். மோசே காலணிகளை மீண்டும் அணிந்து கொண்டாரா?

தன் தந்தை ஆபிரகாமோடு மொரியா மலைக்குப் பலி செலுத்துச் சென்ற ஈசாக்கு வீடு திரும்பவில்லை. ஆபிரகாமும், அவரது வேலையாட்கள் மட்டுமே திரும்புகின்றனர்.

ஊதாரி மகன் எடுத்துக்காட்டில் வரும் மூத்த மகன் வீட்டிற்குள் சென்றானா?

சக்கேயு இயேசுவை அனுப்பிவிட்டு வீடு திரும்பியவுடன் அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரிடம் என்ன சொன்னார்கள்?

நல்ல சமாரியன் மீண்டும் சாவடிக்கு வந்து பணத்தைச் செலுத்தினாரா?

கானாவூரில் திருமணம் நடந்ததா?

2. கதையாடல்கள். மற்றொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்...உருவகங்கள் மற்றும் உவமைகள். பழைய ஏற்பாட்டிலும் இறைவாக்கினர்கள் உருவகங்களைப் பயன்படுத்துகின்றனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவும், தூய பவுலும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த உருவகங்களில் சொன்னவையும் உள்ளன, சொல்லாதவையும் உள்ளன. உருவகங்களுக்கும், நமக்கும் நிறைய 'தலைமுறை' இடைவெளி இருக்கின்றது.

'பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாக பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?'... 'தீயோராகிய நீங்களே...'

இந்த உருவகத்தை இன்றைய மொழியில் எப்படிச் சொல்லலாம்?

'பிள்ளை ஐஃபோன் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது கேலக்ஸி கொடுப்பாரா? மெடிக்கல் கல்லூரியில் சேர்க்கச் சொன்னால் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ப்பாரா?'... 'தீயோராகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால்...விண்ணகத்தந்தை...

3. கதைமாற்றங்கள். ஒரு கதை மற்றொரு கதையாக மாறுகிறது. விவிலியத்தில் நடந்த புதுமைகள். 'கழுதையைத் தேடி வந்த சவுல் அரசனாகத் திரும்புகிறார்.' 'ஆடு மேய்க்க வந்த மோசே இஸ்ரயேலின் தலைவராகின்றார்'. 'தண்ணீர் எடுக்க வந்த பெண் மணம் முடிக்கிறாள்'. 'கண் தெரியாதவர் பார்வை பெறுகின்றார்'. 'இறந்தவர் உயிர்பெற்றெழுகின்றார்!'

ஆனால்...

கழுதைகளுக்கு என்ன ஆயிற்று? ஆடுகள் எங்கே போயின? தண்ணீர் எடுத்தாரா? பார்வை பெற்றவர் தன் சாப்பாட்டிற்கு என்ன செய்தார்? லாசர் தன் இறப்பு பற்றி என்ன சொன்னார்?

இந்த இடைவெளிகள் நம் மூன்றாம் வகை.

சரி...

சொல்லியாச்சு...

இதையெல்லாம் எழுதிடலாமா?

கஷ்டம் தான். ஆனால் இயலும். கொஞ்சம் கொஞ்சமாக...

இதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்:

முதலில் மொழி. எபிரேய மற்றும் கிரேக்கக் கலாச்சாரத்தையும் பின்புலத்தையும் தமிழில் கொணர்வது. ஆனால் தமிழின் இனிமையும், எளிமையும், செறிவும் இதைச் சாத்தியமாக்கும்.

இரண்டாவது கற்பனைத் திறன். இன்னைக்கு மைன்ட் நல்லா வேலை செய்கிறது. நாளைக்கு டல்லா இருந்தால் என்ன செய்வது? 'எதுவரை எழுத்து அழைக்கிறதோ அதுவரை நானும் செல்ல முயல்கிறேன்.'

மூன்றாவது அகல உழுவதை விட ஆழ உழ வேண்டும். 'உனக்கு புது பிரண்ட்ஸ் கிடைச்சாங்களான்னு!' என் பழைய பிரண்ட்ஸ் அடிக்கடி கேட்பாங்க. அவங்களுக்கு நான் சொல்வது இதுதான்: 'கிடைச்ச பிரண்ட்சிடம் தெரிந்து கொள்ள வேண்டியது, கற்றுக் கொள்ள வேண்டியது, அனுபவிக்க வேண்டியது இன்னும் இந்தியப் பெருங்கடல் போல ஆழமாக இருக்க 'மாற்றான் தோட்டம்' எதற்கு? நான் இதுவரை படித்தது, கேட்டதை விவிலியத்தின் கண் கொண்டு பார்க்க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்.

இதெல்லாம் முடியுமா ஃபாதர் என்கிறீர்களா?

கமாலியேலின் வார்த்தைகளைத் தான் உங்களுக்கும் சொல்வேன்:

'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது.' (திப 5:38-39)


Friday, March 28, 2014

தனக்கு எதிராகத் தானே பிளவுபடும்

இயேசு அவர்களிடம் கூறியது: 'தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்து விடும்'...'நான் கடவுளின் விரலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!'

(லூக்கா 11:17,20)

கடந்த ஒரு மாதமாக இத்தாலிய டிவிகளில் அதிகமாக கிரைம் செய்திகளே வலம் வருகின்றன. அப்பாவே மகனைக் கொல்வது, அம்மா தன் இரண்டு மகள்களைக் கொல்வது, மகன் தன் பெற்றோரை கத்தியால் குத்துவது, பேத்தி தாத்தாவுக்கு விஷ ஊசி போடுவது, வீட்டு உரிமையாளர் தன்னிடம் வேலை செய்யும் ஒரு பெண்ணை அப்பார்ட்மெண்டில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தது. கேட்கும்போதே மனது படபடக்கிறது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிபட்டவுடன் சொன்னது என்ன தெரியுமா?

'என்ன நடந்ததென்று எனக்கு தெரியாது! ஏதோ ஒரு அவசரத்தில் செய்து விட்டேன்!'

நமக்குள் எந்நேரமும் ஒரு போராட்டம் இருக்கின்றது என்பது எதார்த்தமான உண்மை.

நாம் சொல்வதைச் செய்வதில்லை.

நாம் படிப்பதை நம்புவதில்லை.

நாம் நினைப்பதை உணர்வுகளில் வெளிப்படுத்துவதில்லை.

அதிகமாகப் பாசம் வைக்கிறோம்.

அதிகமாகக் கோபமும் படுகிறோம்.

'மனிதன் பாதி! மிருகம் பாதி!' என்பார்கள்.

அதை விட

'தெய்வம் பாதி! மிருகம் பாதி! = மனிதன்!' என்று சொல்லிவிடலாம்.

நம் மனம் பிளவுபட்டு நிற்கின்றது. ஒரு மனத்தோடு இருக்க எவ்வளவோ முயற்சி செய்கிறோம். ஆனால் தோற்றுவிடுகிறோம்.

'இருமனம் கொண்டிருத்தல்' அழிவையே கொண்டுவரும் என்கிறார் இயேசு.

தனக்கெதிராகப் பிரியும் வீடும், அரசும் அழியுமென்றால், தனக்கெதிராகப் பிரிந்து நிற்கும் மனிதரும் அழியத்தானே செய்வர்!

இதிலிருந்து நாம் எப்படி மீள்வது? இதற்கு வழியே இல்லையா?

தூய பவுலடியாருக்கும் கூட இந்த 'இருமனப்' போராட்டம் இருந்திருக்கின்றது:

'நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை. எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை. எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்...நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை. அதைச் செய்யத்தான் முடியவில்லை' என உரோமைத் திருச்சபைக்கு எழுதும் கடிதத்தில் (7:14-20) மனம் திறக்கிறார் அவர்.

'இருமனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள்!' (4:8) - என உள்ளத்தூய்மையை வழியுறுத்துகின்றார் திருத்தூதர் யாக்கோபு.

மனம் பிளவுண்டவர்களுக்கு இயேசு தரும் வைத்தியம் இதுதான்: 'கடவுளின் விரல் உங்களோடு இருந்தால்...'

கடவுளின் விரல் பிடிக்கிறவர்களின் மனம் இயல்பாகவே ஒருமனப்பட்டு விடும். கடவுளின் விரலை விடுத்து மற்றவர்களின் விரலைப் பிடிக்கும் போதுதான் 'இது சரியா! தவறா!' என்ற பதற்றம் வருகிறது. 'ஐயயோ இப்படி நடந்து விட்டதே' என்ற குற்றவுணர்வு வருகின்றது.

ஆறு மனமே ஆறு...அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று எழுதுகின்ற கண்ணதாசன் முதற்கட்டளையாக வைப்பதும் இதுதானே:

'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி!'

நம் இருமன பிளவு நிலைகளை இறைவனின் விரல் கொண்டு குணமாக்குவோம்...

சொல்லில்...செயலில்...ஒருமை கொள்வோம்...

அதுதான் அமைதி...அதுதான்...இறையாட்சி!

Thursday, March 27, 2014

முறைமாமனுக்கும் காதலனுக்கும்

ரோமிற்கு ஒபாமா வந்திருப்பதுதான் இன்று பரபரப்பாக இருக்கின்றது.

ரோடெல்லாம் ப்ளாக்.

நாளை மாலை வரை எங்கும் செல்ல முடியாது.

இங்கே மக்கள் மத்தியில் ஏதோ ஒரு மகிழ்ச்சி.

எங்கு பார்த்தாலும் ஒபாமா, ஒபாமா என்ற பேச்சு.

உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் நேரம் அவர் வந்திருப்பது இன்னும் எதிர்பார்ப்பைத் தருகின்றது.

எங்களுடன் சேர் என்று உக்ரைனை இழுக்கிறது யூரோப்பியன் யூனியன்.

எங்களுடன் இல்லாவிட்டால் உனக்கு சமையல் கேஸ் கிடையாது என மிரட்டுகிறது ரஸ்யா.

பாவம் உக்ரைன்...

முறைமாமனுக்கும் காதலனுக்கும் இடையே சிக்கிய பெண் போல அவஸ்தைப் படுகிறது!

உலகிற்கே கட்டப்பஞ்சாயத்து நடத்தும் அமெரிக்கா வழக்கம்போல

இதிலேயும் தலையிட்டு விட்டது...

நமக்கு நடக்காத வரை நடப்பதெல்லாம் வேடிக்கை தானே!

Tuesday, March 25, 2014

பிரவுன் கலர் கண்கள்

இன்று மங்கள வார்த்தை திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நாசரேத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த மரியாளுக்கு ஆண்டவரின் தூதர் கபிரியேல் 'மங்களம்' சொன்ன திருநாள் இன்று.

கிறிஸ்து பிறப்பு டிசம்பர் 25 கொண்டாடப்படுகிறது. அதற்கு சரியாக 9 மாதங்களுக்கு முன்பாக இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறப்பு ஒரு குறைமாதப் பிறப்பாக இருந்தால் இந்தத் திருநாள் என்று கொண்டாடப்பட்டிருக்கும்? கடவுளின் பிறப்பு நிறைவாகத் தான் இருக்க முடியும். ஆகையால் இந்த நாளை இன்றே கொண்டாடுவோம்.

'கடவுள் மன்னுலகின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கின்றார்' –
இதுதான் இன்றைய நாளின் பொருள்.

சுஜாதாவின் 'கடவுள் இருக்கிறாரா?' என்ற நூலின் முதல் அத்தியாயத்தை நேற்றுப் படித்தேன். கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கு அறிவியல் படும் கஷ்டங்களைப் பதிவு செய்திருக்கிறார். அறிவியல் அறிஞர்களின் பல கஷ்டங்களில் ஒன்று: கடவுள் இந்த உலகைப் படைத்திருக்க முடியுமா? படைப்பு என்பது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. காலத்திற்கும் இடத்திற்கும் உட்படாத ஒரு கடவுள் படைப்பைப் படைக்க வேண்டுமென்றால் அவர் காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் நுழைந்தாக வேண்டும். அப்படி அவர் நுழைந்துவிட்டால் அவரைக் 'கடவுள்' என்று அழைக்க முடியாது.
ஏனெனில் 'கடந்து உள்ளவர்' தானே 'கடவுள்'.

இது ஒரு பிரச்சினை. மற்றொன்று? நம் உடலை ஆராய்ந்தால் அதில் திடப்பொருளும் இருக்கிறது. சக்தியும் இருக்கிறது. தாதுப்பொருள் என்ற அடிப்படையில் சொன்னால் பொட்டாசியம், கால்சியம் என்று பிரித்து விடலாம். இயற்பியல் அடிப்படையில் பிரித்தால் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் எனப் பிரித்து விடலாம். தொடுகின்ற பொருள், தொட முடியாத உயிர் - இணைந்தது தான் நாம். கடவுளையும் தாதுப்பொருள், சக்தி எனப் பிரிக்க முடியுமா?

கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்று சொல்வதிலேயே இவ்வளவு பிரச்சனைகள். இதில் கடவுள் மனுக்குலத்தின் வரலாற்றுக்குள் நுழைவதில் இன்னும் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்? பிரச்சினைகளை விட்டு விடுவோம். நிகழ்விற்குச் செல்வோம்.

மரியாள் ஒரு சாதாரண பெண். நாசரேத்தூருக்கு நாங்கள் சென்ற போது மரியாளின் இல்லத்திற்கும் போயிருந்தோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வீட்டை அப்படியே பாதுகாத்து வருகிறார்கள். அந்த இடத்தில் நின்று ஜன்னல் வழியாக மேலே பார்த்தபோது, 'திடீரென்று கபிரியேல் தூதர் வந்தால் எப்படி இருக்கும்?' என்று மனம் நினைத்தது.

கடவுளின் கண்கள் மரியாளின் மேல் விழுகின்றன. அவரின் வழியாக மனுக்குலத்தின் மேல் விழுகின்றன. தினமும் நம் கண்கள் பலர் மேல் விழுகின்றன. பலரின் கண்கள் நம் மேல் விழுகின்றன. 'கண்ணு பட்டுருச்சு' என்று சொல்வோம். 'கல்லடிக்குத் தப்பிடலாம். கண்ணடிக்குத் தப்ப முடியாது' என்றும் சொல்வார்கள்.

'அந்தப் பொண்ணை அவன் கண்ணடிக்கிறான்!' என்று சொல்லும் போது அவன் அவளைக் காதலிக்கிறான் அல்லது அன்பு செய்கிறான் என்றே பொருள் கொள்கின்றோம். பார்ப்பது என்பதற்கு வெறும் பார்ப்பது மட்டுமல்ல. தேடுவது. அன்பு செய்வது. பராமரிப்பது. கவனமாய் இருப்பது. எண்ணற்ற பொருள் தரும் வார்த்தை இது.

கடவுளின் கண்கள் இன்று நம்மேல் பட்டு நமக்குச் சொல்லும் ஒரே (எபிரேய) வார்த்தை – எம்மானுவேல்! கடவுள் நம்மோடு!

நம் கண்கள் மற்றவர்கள் மேல் படும்போது நாம் அவர்களோடு இருக்கிறோம். அவர்களின் கண்கள் நம்மேல் படும்போது அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள்.
இன்று மெட்ரோவில் கல்லூரி போகும் போதும் வரும்போதும் கண்களை மட்டுமே பார்க்க வேண்டும் என முடிவெடுத்துச் சென்றேன். அப்படின்னா மத்த நாள்களில் என்ன பார்ப்பீங்க ஃபாதர்? என்று கேட்காதீங்க!

கண்ணாடிக்குப் பின் ஒளிந்த கண்கள்!
கடிகாரம் பார்க்கும் கண்கள்!
மேலே ஓடும் டிவியின் பிம்பம் தெரியும் கண்கள்!
ஐஃபோன்கள் ஒளியூட்டும் கண்கள்!
மூடிக்கொண்டு பாடலில் லயித்திருக்கும் கண்கள்!
ஜெர்மானியம் பேசும் ஒரு பெண்ணின் நீலக் கண்கள்!
காட்டராக்ட் ஆபரேசன் செய்து திரையிட்ட கண்கள்!
மூடி மூடித் திறந்த கைக்குழந்தையின் கண்கள்!
மஞ்சள் நிறம்!
கறுப்பு நிறம்!
பளுப்பு நிறம்!
கலங்கிய கண்கள்!
தூக்கக் கலக்கக் கண்கள்!
நேற்று அடித்த பியர் தெரியும் கண்கள்!
ஒளியைக் கண்டு கூசும் கண்கள்!
கூர்ந்து பார்க்கும் கண்கள்!

இப்படி எண்ணற்ற கண்களில்...
என்மேல் வைத்த கண் எடுக்காமல் பார்த்த
இரண்டு பிரவுன் கலர் கண்கள்...தான்....
இப்போதும் என் கண்முன்னேயே நிற்கின்றது!

ஏதாவது ஐடியா இருந்தா!

சின்ன வயசிலேயே சாதிச்சவங்க பற்றி இன்றைக்கு நான் யோசிச்சுகிட்டு இருந்தேன்.

எபிரேய இலக்கியத்தில் புலமை பெற்ற ஒருவரின் வாழ்க்கை வரலாறை வாசித்தேன். அவர் ஒரு இங்கிலாந்துக்காரர். தன் 28ஆம் வயதிலேயே எபிரேய இலக்கணம் என்னும் நூலை எழுதியிருக்கின்றார். நாம் ஏன் ஏதாவது சாதிக்கக் கூடாது? என்ற நினைத்தேன்.

நேற்று ஒரு நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன். நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஏனெனில் நேற்று இரவு தூக்கமே இல்லை. நான் ஃபோனை வைத்தபோது அவனது மகன் பள்ளிக்கூடம் புறப்பட்டுக்கொண்டிருந்தான். ஃபோனை வைக்கும் போது சொன்னான்: இவ்வளவு நேரம் பேசுகிறாயே! இரவு நேரத்திலும் இவ்வளவு எனர்ஜி லெவல் இருக்கிறதே, நீ ஏன் உருப்படியாக ஏதாவது செய்யக்கூடாது? இன்று மனதெல்லாம் அவன் சொன்னதே நிறைந்திருந்தது.

ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்களேன்....

செய்வோம்...

Monday, March 24, 2014

ஜோசியக்காரன் சொன்ன பொண்ணு!

அன்பான இனிய பேச்சால் உலகையே வென்று விடலாம் என்பார்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமா? எல்லாச் சூழ்நிலைகளிலும் இது சரி வருமா? ஆனால் கடுஞ்சொற்களைத் தவிர்க்கலாம் என்பது எல்லா நேரத்திற்கும் பொருந்தும். நல்ல பெயர் எடுக்க நிறைய நேரம் எடுக்கும். அந்தப் பெயரில் கிறுக்கல் விழ ஒரு நொடி போதும். 'நீ சொல்லும் ஒரு பொய் வெளியே வரும்போது நீ பேசிய எல்லா உண்மையும் சந்தேகத்திற்கிடமாகும்' என்பார்கள். நம் அன்பிற்கினியவர்களோடு கடுஞ்சொற்கள் பேசிவிட்டால் மனது முழுவதும் குற்ற உணர்வால் நிறைந்து விடுகிறது.

இனிய சொற்களே பேசினாலும் சில சூழல்களில் கடுஞ்சொற்கள் என் நாவில் மிகவும் சூடாய் வந்து விழுந்துவிடுகின்றன. இரத்த உறவுகள் நம்மிடம் அன்பு காட்டுவது இயல்பு. ஆனால் முகங்காணா உறவுகளின் அன்பின் அதிர்வுகளைத் தாங்குவது இறைவனின் வரம். முற்பிறப்பின் தொடர் போல சில உறவுகள் வந்து ஒட்டிக் கொள்கின்றன. உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காமல் இருக்கும்போது இந்த உறவுகளையே நான் அதிகம் காயப்படுத்தி விடுகிறேன்.

இன்று இயேசுவும் சமாரியப்பெண்ணும் சந்தித்த நிகழ்வு என்னில் பல சிந்தனை ஓட்டங்களை எழுப்பியது. இயேசு அந்தப் பெண்ணை முன்பு பார்த்தது கிடையாது. இந்த நிகழ்விற்குப் பின் அவர் அவரைச் சந்தித்ததாக எந்த குறிப்பும் இல்லை. அந்தப் பெண்ணோடு இருந்த கொஞ்ச நேரமும் இயேசு இனிய சொற்களையே பகிர்ந்து கொள்கிறார். அந்தப் பெண்ணின் பழைய வாழ்க்கையைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. நீ சமாரியப் பெண் - நான் யூத ஆண் என்று வேற்றுமை பாராட்டவில்லை. தன்னை முன்வைத்து - நான் பெரிய போதகனாக்கும். நான் சொன்னால் பேயே ஓடுமாக்கும். நான் தண்ணீரைத் திராட்சை ரசமாக்குவேனாக்கும் என்றெல்லாம் தம்பட்டம் இல்லை. 'கொஞ்சம் தண்ணீர் கொடுமா!' எனத் தொடங்குகிறார். அவர் வழியாக அவரின் ஊரையே சொந்தமாக்கிக் கொள்கின்றார்.

பெண்கள் எவ்வளவு ஆச்சரியமானவர்கள். அதிலும் முற்பிறப்பின் தொடர் உறவுகளாக நம்மோடு வருகின்ற பெண்கள் மிகவும் ஆச்சரியமானவர்கள். அவர்கள் நம் படிப்பைப் பார்ப்பதில்லை. நம் சாதியைப் பார்ப்பதில்லை. நம் பின்புலத்தைப் பார்ப்பதில்லை. 'உன்னால் இது செய்ய முடியுமா? அது செய்ய முடியுமா?' என்று கேட்பதில்லை. கொஞ்ச நேரம் நாம் பேசினாலும், அவர்களின் உறவுகள் அனைத்தையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்கள்.

இயேசு - பெண்ணின் உரையாடலில் நிறைய நக்கல்களும் இருக்கின்றன. 'உங்ககிட்ட வாளி இல்லை. கிணறு ஆழமானது. நீங்க எப்படி பாஸ் தண்ணீ எடுப்பீங்க?' என்கிறார் பெண். 'நீங்க என்ன எங்க யாக்கோபை விட பெரியவரா?' என்று கேட்கிறார். இயேசு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்த proof-ம் கொடுக்கவில்லை. இயல்பாக இருக்கிறார். பல நேரங்களில் என் உறவுச் சிக்கல்களுக்கும், என் கடுஞ்சொற்களுக்கும் காரணம் நான் என்னையே prove பண்ண நினைப்பதுதான். நம் உறவுகள் மிகவும் எளியவர்கள். இயல்பானவர்கள். இயல்பாக இருந்தாலே போதும்.

புறவிசை தாக்கும் வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும், நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும் என்பது நியூட்டனின் நிலைம விதி. சமாரியப்பெண்ணின் வாழ்வில் புறவிசையாக வருகின்றார் இயேசு. இயேசுவின் வாழ்வில் புறவிசையாக வருகின்றார் பெண். இரண்டு பேரும் தொடர்ந்து ஓடுகின்றனர் தங்கள் இலக்கு நோக்கி.

'எந்தக் காக்காவும் எதையும் தூக்கிக் கொண்டு போவதுமில்லை. எந்தக் குயிலும் கொண்டு வந்து கொடுப்பதுமில்லை' என்பார்கள். இயல்பாகச் சிரிக்கவும், என்றும் இன்சொல் பேசவும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்!

[இயேசு - சமாரியப்பெண்...
விநாயகர் - பூக்காரப்பெண்...
ஏதோ தொடர்பு இருக்குல?]



Sunday, March 23, 2014

own your dreams

An excerpt from the book which I read today:

It is never too late to be what you might have been. - George Eliot

If you are unsure of what your dream might be—either because you are afraid to dream or because you somehow lost your dream along the way—then start preparing yourself to receive your dream by doing five things to put yourself in the best possible position to receive a dream. 

Once you do these five things, focus on discovering your dream. As you do, keep this in mind: ‘A dream is what you desire if anything and everything is possible.’

1.
Mental Preparation: Read and study in areas of your greatest interest.

2.
Experiential Preparation: Engage in activities in areas related to your interests.

3.
Visual Preparation: Put up pictures of people and things that inspire you.

4.
Hero Preparation: Read about and try to meet people you admire and who inspire you.

5.
Physical preparation: Get your body in optimal shape to pursue your dream.

In summary, don't leave your dream to chance.

Do what you love and love what you do.

Good day.

Saturday, March 22, 2014

Random Reflections

‘Blessed are the poor!’
Whose words are these?
Of the rich?
Or of the poor?


I saw an african young man.
He stands in front of a bakery and asks for some coins.
He came to my church today.
He saw me and called me ‘fratello!’ (brother!)
He saw my parish priest and 
called him ‘capo!’ (head! boss!)
What does he convey to me?



A woman went to a cemetery.
She saw a man picking up the grass in between the stones.
The man looked up and asked,
‘Woman! what do you want?’
‘I am looking for my nephew’s cemetery’, 
she said with a heavy heart.
The man took her along the lines 
and stood her near a grave and said,
‘Woman! this is the grave of your son!’
The woman poured out her heart. 
She cried aloud.
She placed the flowers which she had carried at her son’s grave.
She returned to her car.
Looked back.
The man was still picking up the grass in between the stones.
She took him to be a gardener.
Who was he?
She asked for the nephew’s grave.
But was showed her son’s grave.

Friday, March 21, 2014

மண்குடம் சுமந்து...

இயேசு பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: 'நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், 'நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? என்று போதகர் கேட்கச் சொன்னார்' எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார்நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். (மாற்கு 14:13-16)

இயேசுவின் பாடுகள் தொடங்கும் நேரம் யூதர்களின் பாஸ்காக் கொண்டாட்ட நேரம். பாஸ்கா நிகழ்வு யூதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வு. இந்த நிகழ்வு அவர்களுக்கு விடுதலையின் நிகழ்வு. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மோசேயின் தலைமையில் யாவே இறைவன் இவர்களுக்கு விடுதலை தந்தார். அவர்கள் எகிப்தை விட்டுச் சென்ற அந்த இரவு ஓர் ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு விருந்து கொண்டாடினார்கள். இந்த நிகழ்வை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூர்ந்தனர். பாஸ்கா விழாவை எருசலேமின் மதில்களுக்குள் தான் கொண்டாட வேண்டும் என்பது இணைச்சட்ட நூல் முன்வைக்கும் ஒரு பரிந்துரை. ஆகையால் ஒவ்வொரு ஆண்டும் எல்லா ஊர்களிலிருக்கும் யூதர்களும் எருசலேம் நோக்கிச் செல்வார்கள். இந்த நாட்களில் எருசலேமில் இடம் கிடைப்பது கடினம். இந்த நிலையில் தாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இயேசுவைக் கேட்கின்றனர் சீடர். இயேசு மிகவும் விலாவாரியாக அவருக்கு வேண்டிய இடம் குறித்துச் சொல்லுகின்றார்.

இயேசு குறிப்பிடும் இந்த அறிகுறியை ஒருசில விவிலிய ஆய்வாளர்கள் இயேசுவின் புதுமை என்றே சொல்லுகின்றனர். 'தண்ணீர் குடம் சுமந்து ஒரு ஆள் வருவார்!' - இதுதான் இயேசுவின் அடையாளம். இன்றும் நாம் யாரையாவது வெளியூருக்கு அனுப்பினால் அடையாளம் சொல்லும்போது, 'கட்டம் போட்ட சட்டை போட்ட, கையில் மஞ்சள் பை வைத்த, பச்சைக் கலர் சுடிதார் அணிந்த' என்று சொல்கின்றோம். இயேசுவின் காலத்தில் ஆண்கள் தண்ணீர் சுமப்பது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் நிறைய அடிமைகள் தண்ணீர் எடுக்கும் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அப்படியிருக்க இயேசுவின் சீடர்கள் எப்படிச் சரியாகக் கண்டுபிடித்திருப்பார்கள்? 

'மண்குடம்' எனக் குறிப்பிடுகின்றார் இயேசு. அதுதான் அறிகுறி. வழக்கமாக ஆண்கள் தோல்பையிலும், பெண்கள் மண்குடத்திலும்தான் நீர் சுமப்பார்கள். ஒரு ஆண் மண்குடம் சுமப்பது சற்று வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆகையால் அதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இன்றும் நம் கண்முன் வித்தியாசமானவைகள், வித்தியாசமானவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களைக் கண்டு சிரிக்கவோ, கேலி செய்யவோ வேண்டாம்.

நாம் விருந்துண்ணும் இடத்தைக் காட்டும் அறிகுறிகளாகக் கூட அவர்கள் இருக்கலாமே!

Thursday, March 20, 2014

யாருக்கு நான் அஞ்சவேண்டும்?



'ஆண்டவரே, என் ஒளி.
அவரே என் மீட்பு.
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்.
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்.
அதையே நான் நாடித் தேடுவேன்.
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம்
நான் குடியிருக்க வேண்டும்.
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்.'
(திருப்பாடல் 27:4)

தூய வளனாரின் திருநாளை இன்று சிறப்பாகக் கொண்டாடினோம். தாவீதின் வழி மரபில் வரும் வளனார் இன்று தாவீதை என் மனக்கண் முன் கொண்டு வந்தார். நேற்றைய தினம் எருசலேம் கோவில் அழிவைப் பற்றிப் படித்தோம். கண்ணீரே வந்துவிட்டது.

'இதுதான் எங்கள் உலகம்' என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்க அவர்கள் கண் முன்னாலேயே அவர்களின் கோவில் அழிக்கப்பட்டது. கோவிலின் திரைச்சீலைகள் பாபிலோனிய அரசனின் அந்தப்புரங்களை அலங்கரிக்கவும், திருப்பாத்திரங்கள் அரசனின் உணவு மேசைக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

தாவீது அரசருக்கும் எருசலேம் கோவிலின் மேல் மிகுந்த ஆர்வம் இருந்ததை இன்றைய திருப்பாடல் நமக்குச் சொல்லுகிறது. தாவீது அரசனின் காலத்தில் எருசலேமில் ஆலயம் கட்டப்படவில்லையென்றாலும், யாவே இறைவனுக்கு ஒரு சிற்றாலயம் கண்டிப்பாக அங்கே இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தவருக்கும் கோவில் இருந்தது இங்கே நினைவுகூறப்பட வேண்டும்.

ஒரு அரசன் தன் அரண்மனை வாழ்வை விடுத்து ஆண்டவரின் ஆலயத்தின் வாயில்காப்பவனாக தான் இருக்க விரும்புவதாகப் பாடுவது தாவீது அரசன் ஆலயத்தின் மேல் கொண்டிருந்த பற்றினையே காட்டுகிறது.

பழைய ஏற்பாட்டில் இடம் சார்ந்த பிரசன்னமாக இருந்த ஆலயம், புதிய ஏற்பாட்டில் ஆள் சார்ந்த பிரசன்னமாக மாறிவிட்டது. ஆகையால் தான் தூய பவுலடியார் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதும்போது, 'நீங்கள் தூய ஆவி குடிகொண்டிருக்கும் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்கின்றார். 

இறைவனின் பிரசன்னம் ஒளியும், மீட்பும். நம் ஒவ்வொருவரின் பிரசன்னமும் மற்றவருக்கு ஒளியும், மீட்புமாக இருத்தல் அவசியம் தானே!

Wednesday, March 19, 2014

வளன் என்னும் மௌனி

நாளை நம் திருஅவை தூய வளனாரின் திருநாளைக் கொண்டாடுகிறது. வளனாருக்கு இரண்டு நாட்கள் திருநாட்கள் உண்டு: ஒன்று மார்ச்சு 19 மற்றொன்று மே 1. மார்ச்சு 19 அன்று அவரை அன்னை மரியாளின் துணைவர் எனவும், மே 1 அன்று தொழிலாளர்களின் பாதுகாவலர் எனவும் சிறப்பிக்கின்றது.

வளன் ஒரு நீதிமான். வளன் ஒரு ஞானி. வளன் ஒரு மௌனி.

அவரை நீதிமானாகவும், அவரை ஞானியாகவும் ஆக்கியது அவரது மௌனம்தான்.
மௌனம்.

ஒரு பெரிய வரம்.

பேச்சைப் போலவே மௌனத்திற்கும் மதிப்பு உண்டு.

சத்தமும் மௌனமும் இணைவதே இசை. இருளும் ஒளியும் இணைவதே ஓவியம். இருமையும் இல்லாமையும் இணைவதே சிற்பம்.

இயேசுவின் வளர்ப்புத் தந்தை இவர். இவர் பேசியதாக விவிலியத்தில் எதுவுமே பதிவு செய்யப்படவில்லை. மௌனமாகவாக நிழலாடுகின்றார். 

நம் வாழ்விலும் மௌனமாக நம்மேல் உடன் வருபவர்கள் பலர். அவர்கள் தங்கள் முகங்களை நமக்குக் காட்டுவதில்லை. அவர்கள் நம்மோடு பேசுவதில்லை. ஆனால் அவர்கள் நம் நல்வாழ்விற்காகத் தங்களையே ஏதோ ஒரு வகையில் கையளிக்கிறார்கள்.

வளன் என்னும் இந்த மௌனி நமக்கு மௌனத்தைக் கற்றுக்கொடுக்கட்டும். அந்த மௌனத்தில் நம் இதயத்தின் உள் ஒலியைக் கேட்போம்.

வளன் வழி இறைவன் நம்மை ஆசிர்வதிப்பாராக!

Tuesday, March 18, 2014

வித்தியாசமான அடக்கச் சடங்கு

இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறைச்சாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்...அவர் மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார். அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். (மாற்கு 15:42-47)

இன்று இயேசுவின் அடக்கம் பற்றிய மாற்கு நற்செய்தியாளரின் வர்ணனையைப் பற்றிய ஒரு ஆய்வுத்தாள் எழுதினேன். அதை எழுதிய போது என்னுள் எழுந்த சிந்தனைகளை இன்று பகிர்கிறேன்.
இரவுகளிலேயே நீண்ட இரவு எது தெரியுமா? நமக்கு மிக நெருக்கமானவர்களின் உயிர் பிரிந்து அவர்களின் இறந்த உடலோடு நாம் கழிக்கும் இரவுதான். சீக்கிரம் விடியாதா என்று நாம் ஏங்குவதும் இந்த இரவு தான். சீக்கிரம் விடிய மாட்டேன் என அடம்பிடித்து விடிவதும் இந்த இரவு தான். நெஞ்சம் நிறை சோகம், கண்கள் நிறை கண்ணீர் என நாம் பிரிவின் துயரைத் துடைத்துக் கொண்டிருப்போம். நம் உற்றவர்களும், நண்பர்களும் 'உடனிருக்கிறோம்' என்று நம் அருகில் இருக்கும் ஒரு இரவு இது. நம் வீட்டில் நாம் அழுது கொண்டிருக்க எதிர்வீட்டில் 'காமெடி புரோகிராம்' ஓடிக்கொண்டிருக்கும். இதுதான் வாழ்வின் எதார்த்தம். 'நமக்கு நடக்கும் வரை நடப்பதெல்லாம் வேடிக்கை' என்பார் கண்ணதாசன்.

இயேசுவின் வாழ்வில் அவரின் முதல் இரவும் அவருக்குத் தனிமை தான். இறுதி இரவும் தனிமைதான். மூன்று ஆண்டுகள் உடனிருந்தவர்கள் ஓடிப்போயினர். அவரை அடக்கம் செய்ய வந்தவர் ஒரு புதியவர்: அரிமத்தியா நகர் யோசேப்பு.

இவர் வருகிறார். பிலாத்திடம் செல்கிறார். உடலைக் கேட்கிறார். புதிய துணியை வாங்குகிறார். உடலை சிலுவையிலிருந்து இறக்குகிறார். துணியால் சுற்றுகிறார். கல்லறையில் வைக்கிறார். கல்லை உருட்டி வைக்கிறார். இவரின் செயல்களை அடுத்தடுத்த வினைச்சொற்களால் ஒரே மூச்சாகச் சொல்லி முடிக்கின்றார் மாற்கு.

இயேசுவின் அடக்கம் நமக்கு நான்கு பாடங்களை முன்வைக்கின்றது:

1. கடவுள் இறந்துவிட்டார். இயேசு இறந்த வெள்ளி இரவும், சனிக்கிழமையும் இந்த உலகை யார் காப்பாற்றினார்? என்று கேள்வி கேட்பார் ஹேகல் என்ற ஜெர்மானிய மெய்யியலாளர். இயேசு மனுவுருவானபோதே கடவுள் இறந்து விட்டார் எனவும், இனி கடவுள் இந்த உலகிற்குத் தேவையில்லை எனவும் சொல்லத் தொடங்கினர் இவரின் ஆதரவாளர்கள். இன்றைய அறிவியல் உலகம் கடவுள் என்ற ஒன்றைப் பூமிப்பந்திலிருந்து துடைத்துவிடத் துணிகின்றது. 'கடவுள் இருக்கிறாரா? இறந்து விட்டாரா?' என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கேட்க Nவுண்டிய கேள்வி. இந்த உலகின் பார்வைக்கு என் அப்பா இறந்துவிட்டார்தான். ஆனால் என் பார்வைக்கு அவர் இன்றும் என்னோடு வாழ்கிறார். அது போலத்தான் கடவுளும்.

2. மனிதன் எதுவரை மனிதனாக இருக்கிறான்? இறப்பின் போது நம் மனிதத்தன்மை அழிந்து விடுகிறதா? உடல்தானம் செய்யுங்கள் என்றும் வாழுங்கள் என்று முழக்கம் செய்கிறார்கள். நாம் இறந்தும் இருக்க முடியும். மனிதனை மனிதன் என்பதற்காக மதிக்கும் பக்குவம் வரவேண்டும். அரிமத்தியா நகர் யோசேப்புக்கு இயேசுவின் மனிதத்தன்மை மேன்மையாகப் பட்டது. 'இவரால் எனக்கு என்ன ஆகும்?' என்று அவர் கேட்கவில்லை. 'இவருக்கு இதை நான் செய்யா விட்டால் அவர் என்ன ஆவார்?' என்று தான் கேட்கின்றார். இதுதான் அறம். இதுதான் பொறுப்புணர்வு.

3. திருச்சபையை கிறிஸ்துவின் உடல் என்கிறோம். அது உயிருள்ள உடலாகவோ, அவரின் இறந்த உடலாகவோ இருப்பது நம் கைகளில்தான் இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் உயிரோட்டமான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் போதுதான் திருச்சபையும் வாழ்கின்றது.

4. சீடத்துவம் என்பது இயேசுவின் மேல் கண்களைப் பதிப்பது. கல்லறைக்கு எதிரில் நிற்கும் மகதலா மரியாவும் மற்ற மரியாவும் இயேசுவின் மேல் தங்கள் கண்களைப் பதிய வைக்கின்றனர். இதுதான் சீடத்துவம். இறப்பும் கூட எங்களைப் பிரித்துவிட முடியாது என்று துணிச்சலோடு நிற்கின்றனர் இந்த இளவல்கள்.

'ஒரு வித்தியாசமான அடக்கச் சடங்கு இது!'

Monday, March 17, 2014

இவருக்குச் செவிசாயுங்கள்!

பேதுரு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற ஒரு குரல் ஒலித்தது. (மத்தேயு 17:6)

நேற்றைய தினம் மாலைத் திருப்பலியில் இந்தப் பகுதியைப் பற்றி மறையுரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது திடீரென எனக்குள் ஒரு சிந்தனை எழுந்தது. இன்றைய நற்செய்திப் பகுதியின் முக்கியமான வார்த்தை 'செவிசாயுங்கள்'. இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமுக்கு இறைவனின் வாக்கு அருளப்படுகின்றது. 'புறப்பட்டுச் செல்' என்று சொன்னவுடன் ஆபிரகாம் புறப்பட்டுச் செல்கின்றார். ஆகையால் 'செவிசாயுங்கள்' என்றால் 'சொன்ன பேச்சு கேளுங்க!' என்றும் பொருள். இறைவனுக்குச் செவிசாய்க்க இன்றைய நாள் அழைப்பு விடுக்கின்றது.

நம் புலன்களில் நமக்குத் தகவல்கள் உள் வரும் வழிகள் இரண்டு: கண், செவி. கீழைச் சமயங்களும், கீழை நாட்டு சிந்தனை மரபுகளும் 'செவி'க்கு முக்கியத்துவம் கொடுத்தன. தமிழ் மரபிலும் 'செவி'க்கே முக்கியத்துவம் உண்டு. தமிழ் இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெறுவதற்கு முன் செவி வழியாகவே காலங்காலமாக பரிமாறப்பட்டன. எபிரேய மரபிலும் செவி வழி ஆன்மீகமே முதன்மை பெற்றது. 'இஸ்ரயேலே! கேள்!' என்றுதான் அவர்களின் விசுவாச அறிக்கை தொடங்குகின்றது. இன்றும் யூதர்களின் செபக்கூடங்களுக்குச் சென்றாலோ, அவர்களின் நூலகங்களுக்குச் சென்றாலோ நாம் இதைப் பார்க்கலாம். அவர்கள் புத்தகத்தைப் பார்த்து மௌனமாகப் படிக்க மாட்டார்கள். சத்தமாகவே படிப்பார்கள். நாமும் சின்ன வயசுல பரீட்சைக்குப் படிக்கும்போதும் சத்தமாகத் தான் படித்திருப்போம். காலப்போக்கில் மௌனமே சிறந்தது என நம்மையே மாற்றிக் கொண்டோம். மேலை நாடுகள் 'செவி வழியை' விட 'கண் வழியையே' 'பார்த்தல்' வழியையே அதிகமாக முன்வைத்தன. மௌனம், காட்சி தியானம் என்பதெல்லாம் அவர்களின் சரக்கு. ஆண்கள், பெண்களை எடுத்துக்கொண்டால் பொதுவாக ஆண்கள் 'பார்த்தல் வழி', பெண்கள் 'கேட்டல் வழி'. ஆண்கள் டிவி, ஐஃபோன், ஐஃபேட், கணிணி என எதையாவது பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். பெண்களுக்கு ஒரு ரேடியோ இருந்தால் போதும். உலகையே மறந்து விடுவார்கள்.

சரி நம் சிந்தனைக்கு வருவோம். 'செவிகொடுங்கள்!'

இறைவனுக்குச் செவிகொடுக்குமுன் நான் எனக்குச் செவிகொடுக்கிறேனா என்று என்னையே கேட்டுப்பார்த்தேன். ஒவ்வொரு நொடியும் நாம் நம்மோடு பேசிக்கொண்டேயிருக்கிறோம். நமக்கு நாமே பேசும் பேச்சைக் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் சொல்வதை நம் மனம் அப்படியே பச்சைக் குழந்தைபோல ஏற்றுக்கொள்ளும். 'நீ ஒரு கோழை!' என்று நமக்கு நாமே சொன்னால் நம் பயம் தானாகவே பயப்படத் தொடங்கிவிடும். ஆகையால் கவனம்!

நாம் நமக்கு நாமே வாக்குறுதிகள் கொடுக்கிறோம்.

அருள்நிலையில் இருக்கும் நான் உலகறிய இரண்டு முறை வாக்குக் கொடுத்திருக்கிறேன்: 

ஒன்று, திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது.

இரண்டு, அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது.

இந்த இரண்டு நிகழ்வுகளும் இறைமக்கள் முன்னிலையில் தான் நடக்க வேண்டும் என்பது திருச்சபையின் பரிந்துரை. கடவுளுக்கும், அவரின் மக்களுக்கும்தான் அருள்நிலையில் இருப்பவர்கள் தங்கள் வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.

நேற்று இரவு இந்த இரண்டு திருநிலைப்பாட்டுச் சடங்குகளின் புத்தகத்தையும் எடுத்து வாசித்துப் பார்த்தேன். ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. முதல் நிகழ்வு நடந்தது புனேயில். என் நண்பர் ஜூலியான்ஸ் வந்திருந்தார். இரண்டாவது நிகழ்வு நடந்தது மதுரையில். என் உறவினர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். அந்தச் சடங்குகளை வாசித்தபோது எல்லாம் எனக்குத் திரும்பவும் நடந்தது போலவே இருந்தது. 

திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்படும்போது மணத்துறவு, கீழ்ப்படிதல், நற்செய்தி அறிவிப்பு, திருப்புகழ்மாலை என மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது.

இதில் 'மணத்துறவு மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கிறீரா?' என ஆயர் கேட்கின்றார். மணத்துறவு என்பது விருப்பம் தான். வாக்குறுதி அல்ல. ஆகையால் இது வாக்குறுதியை விடக் குறைவானது என்று அர்த்தமா? இல்லை. வாக்குறுதியில் கூட ஒரு திணிப்புத்தன்மை இருக்கும். ஆனால் விருப்பம் என்பது நமக்கு நாமே வாக்குறுதி தருவது. அடுத்தவருக்குத் தரும் வாக்குறுதியில் கூட நாம் தவறலாம். ஆனால் நமக்கு நாமே கொடுக்கும் வாக்குறுதியில் தவறவே கூடாது. அப்படி நாம் தவறினால் நம் மனம் நம்மைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கிவிடும். நம் மனமே நம்மை நம்ப மறுத்துவிடும். கீழ்ப்படிதல் என்று வாக்குறுதியை இங்கே ஆயருக்குத் திருத்தொண்டர் கொடுக்கின்றார். 

தொடர்ந்து நற்செய்தி நூலைக் கையில் தந்து ஆயர் அவர்கள் சொல்வார்:

கிறிஸ்துவின் நற்செய்தியைப் பெற்றுக்கொள். (Receive the gospel of Christ)
இதன் தூதனே நீ. (Whose herald you now are)
நீ வாசிப்பதை நம்பு. (Believe what you read)
நம்புவதைப் போதி. (Teach what you believe)
போதிப்பதை வாழ்ந்து காட்டு. (and Practice what you teach)

என்ன அழகான கட்டளை: நம்பு. போதி. வாழ்ந்து காட்டு. சின்னச் சின்ன வார்த்தைகள் தாம். ஆனால் அவை வைக்கும் பொறுப்பு மிகவும் அதிகம்.

மேலும் இந்த நிகழ்வில் தான் திருத்தொண்டர் திருச்சபையின் செபத்தைச் செபிக்க (திருப்புகழ்மாலை) பணிக்கப்படுகின்றார்.

மணத்துறவு, கீழ்ப்படிதல், நற்செய்திப் பணி, இறைவேண்டல் பணி என நான்கு வாக்குறுதிகளை (ஒரு விருப்பம் மற்றும் மூன்று வாக்குறுதிகள்) ஒரு திருத்தொண்டர் வழங்குகிறார்.

அருட்பணியாளராகத் திருப்பொழிவு செய்யும் சடங்கில் அதிக வார்த்தைகள் இல்லை. ஆனால் மூன்று அடையாளங்கள்: 1) கைகளை வைத்துச் செபித்தல், 2) திருஎண்ணெய் பூசுதல், 3) திருவுடை அணிதல் - திருப்பலிப் பாத்திரம் வழங்குதல்.

திருப்பலிக்குப் பயன்படும் பாத்திரத்தைக் கையில் வழங்கும்போது ஆயர் சொல்வார்:

'இறைமக்களின் காணிக்கைப் பொருளை ஏற்றுக்கொள்.
நீ செய்வதன் அர்த்தம் தெரிந்து செய். (know what you do)
நீ திருப்பலியில் கொண்டாடுவதைப் போல உன் வாழ்க்கையில் இரு. (imitate what you celebrate)
ஆண்டவரின் சிலுவையின் மறைபொருளோடு உன் வாழ்வை இணைத்துக்கொள்'. (and conform your life to the mystery of the Lord's cross)

இந்த வார்த்தைகளும் மிகுந்த பொறுப்பை உணர்த்துகின்றன.

இந்த இரண்டு திருநிலைப்பாட்டு வாக்குறுதிகளைப்போலவே நாம் பொதுநிலையில் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதி:

'இன்பத்திலும், துன்பத்திலும்
உடல்நலத்திலும், நோயிலும்
நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து
என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும், அன்பு செய்யவும் வாக்களிக்கிறேன்'

இந்த வாக்குறுதியிலும் மிகுந்த பொறுப்பு உண்டு. இதே வாக்குறுதியைத்தான் ஒவ்வொரு அருட்பணியாளரும் தன் மனத்தளவில் திருஅவை என்ற மணப்பெண்ணைத் தழுவிக்கொள்ளும் போது வாக்குறுதியாக எடுக்கின்றார்:

'இன்பத்திலும், துன்பத்திலும்
என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும்,
நான் நல்லா இருந்தாலும், நான் நோயுற்றாலும்,
நான் சேர்ந்து இன்புற்றாலும், தனியே இன்னலுற்றாலும்
என் வாழ்நாளெல்லாம் என் மக்களை நேசிக்கவும், மதிக்கவும், அன்பு செய்யவும் வாக்களிக்கிறேன்'

Saturday, March 15, 2014

யூதாசு என்னும் புதிர்

பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான். (மாற்கு 14:10-11)

இயேசுவின் பாடுகளை சிந்திக்கும் தவக்காலத்தில் இருக்கின்றோம் நாம். இயேசுவின் பாடுகளில் முக்கிய இடம் வகிப்பவர் யூதாசு இஸ்காரியோத்து. யூதாசு இயேசுவை ஏன் காட்டிக் கொடுத்தார்? யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தது சரியா?

கிபி 4ஆம் நூற்றாண்டில் யூதாசை புனிதர் என்று கருதினர் கிறித்தவர்களின் ஒரு பகுதியினர். யூதாசு இறைத்திருவுளத்தை நிறைவேற்றவே அவரைக் காட்டிக் கொடுத்தார் எனவும், இறைத்திருவுளத்தை நிறைவேற்றியதால் அவர் செய்தது சரிதான் எனவும் வாதாடினர் அவர்கள். அவர்கள் பக்கம் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பது நம் ஆய்வு அல்ல.

இன்றைய நற்செய்திப் பகுதியில் வரும் மூன்று வார்த்தைகளைப் பற்றிச் சிந்திப்போம்:

1. பன்னிருவருள் ஒருவர். யூதாசைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் நற்செய்தி 'பன்னிருவருள் ஒருவர்' என்று குறிப்பிடுகின்றது. யூதாசு செய்த துரோகத்தின் கொடூரத்தைக் காட்டுவதற்காகவே இப்படிப்பட்ட சொல்லாடல் பயன்படுத்தப்படுகின்றது. இயேசுவோடு உடனிருப்பது பெரிதல்ல. உடனிருந்தாலும் அவரை விட்டுத் தூரமாக இருக்கலாம். 'தம்மோடு இருக்கவும், அனுப்பப்படவும்' என்று இயேசு பன்னிருவரை அனுப்புகின்றார். ஆனால் அதில் ஒருவர் தூரமாகவே தானே இருந்திருக்கிறார். 

2. தலைமைக் குருக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நம் அனைவருக்குமே ஒரு சப்கான்சியஸ் மைன்ட் உண்டு. அந்த சப்கான்சியஸ் மனம் தான் நம்மை ஒருவர் மற்றவரோடு இணைக்கிறது. நன்மை நன்மையுடனும், தீமை தீமையுடனும் சேருவதற்கு உதவி செய்வது இந்த ஆழ்மனம் தான். நாம் வாழும் உலகம் கண்ணாடி உலகம். நாம் சிரித்தால் சிரிக்கும். அழுதால் அழும். கோபப்பட்டால் கோபப்படும். பரிவு காட்டினால் பரிவு காட்டும். யூதாசின் ஆழ்மனமும் தலைமைக்குருக்களின் ஆழ்மனமும் ஏதோ ஒருவகையில் தொடர்பை உருவாக்கிக் கொண்டுவிட்டது.

3. அவர்கள் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். மத்தேயு நற்செய்தியாளர் 30 வெள்ளிக்காசுகள் யூதாசுக்கு தரப்பட்டன என எழுதுகிறார். இயேசுவுக்காக 300 தெனாரியத்தைத் துறக்கத் துணிந்து பெண் ஒரு பக்கம். இயேசுவை வைத்து 30 வெள்ளிக்காசுகள் சம்பாதித்த அவரின் சீடர் மறுபக்கம். இயேசுவை விட்டுத் தூரமாக இருந்தாலும் இயேசுவுக்கு அருகில் இருக்க முடியும் என உணர்த்திவிட்டார் அந்தப் பெண்.

இயேசுவைப் பற்றி எழுதப்பட்ட அளவிற்கு யூதாசைப் பற்றியும் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. யூதாசு இன்றும் புதிராகவே இருக்கின்றார். 'இவரைப் போல இருக்கக் கூடாது!' என்பதற்கு அடையாளமாகவே அவர் இன்றும் நம் முன் நிற்கின்றார்!

படித்ததில் பிடித்தது

ஜான் பி.இஸோ (John B .Isso) எழுதிய The  Five Secrets You Must Discover Before You Die.

வாழ்வின் குறிக்கோள் என்ன, நாம் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும், அமைதியான, மகிழ்வான வாழ்வு வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச் சுருக்கமாக, மிகத் தெளிவாக (lucid) கூறும் நூல் இது.

கோடீஸ்வரனாக வேண்டும், சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும், டெண்டுல்கர் போல் ஆக வேண்டும் என்றெல்லாம்  உசுப்பேற்றாமல்  யதார்த்தமான விஷயங்களை சொல்லி இருக்கிறார் இந்த புத்தக ஆசிரியர்.

ஒரு முழுமையான, அர்த்தமுள்ள வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களை தேடிப் பிடித்து கிட்டத்தட்ட 200 பேருக்கும் மேல் இன்டர்வியு செய்து அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் என்னென்ன செய்தார்கள்/செய்கிறார்கள் என்று அலசி, அதை 5 ரகசியங்களாக மாற்றி இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார் ஜான்.

பணம் இருக்கிறதோ இல்லையோ, வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியுடன் வாழும் நிறையப் பேரை நாம் பார்த்திருப்போம்; பணம், வசதி, சொகுசு வாழ்வு என்று எல்லாம் இருந்தும் மன அமைதி இல்லாமல், எதிலுமே ஈடுபாடு இல்லாமல் ஒரு வித விரக்தியுடன் இருக்கும் மனிதர்களையும் பார்க்கிறோம். ஜான் இந்த வேறுபாட்டை காரணம் காண முயன்றிருக்கிறார். 

இதற்காக ஜான் ஒரு குழுவுடன் நிறைய நாடுகளுக்கு பயணம் செய்து, தான் கற்றுக் கொண்ட விஷயங்களை இதில் விளக்கியுள்ளார். சுருக்கமாக அந்த 5 ரகசியங்கள் என்ன, என்ன என்று பார்ப்போம்:

ரகசியம் #  1 :உனக்கு நீ உண்மையாக இரு

கடவுள் நம்பிக்கை  இருக்கிறதோ இல்லையோ, உன் மேல் உனக்கு நம்பிக்கை வேண்டும். உனக்கு நீ உண்மையாக இல்லை என்றால், எவ்வளவு பணம் வந்தாலும் வாழ்வில் நிம்மதி வராது. 

ரகசியம் # 2 : எதையும் நினைத்து வருந்தாதே 

பின்னாளில் வாழ்க்கையில் ஐயோ, இப்படி செய்துவிட்டோமே என்று நினைத்து வருந்தும் அளவுக்கு எந்தத் தவறையும் நாம் செய்யக்கூடாது. ஒருவேளை, அப்படி ஏதேனும் செய்துவிட்டால் பின்னர் அதை நினைத்து, நினது தூக்கத்தையும், நிம்மதியையும் இழப்பது அர்த்தமற்ற செயல். இதனால் நம் வாழ்வு வீணாகிவிடும்

ரகசியம் # 3 : அன்பாக மாறு 

வேறெந்த  முயற்சியும் செய்ய வேண்டாம்; வாழ்க்கையில் எல்லோரிடமும் அன்பாக, பகைமை பாராட்டாமல் இருந்தாலே போதும் என்கிறார் ஜான். பிறரிடம் அன்பாக இருப்பது என்பது மிகச் சுலபமான செயலே, முயற்சித்துப் பாருங்கள்.

ரகசியம் # 4 : இன்று வாழ கற்றுக்கொள் (live the moment ):

ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகத்தில் "carpe diem" என்றொரு லத்தீன் வார்த்தை வரும்; அதன் அர்த்தம் "இன்று வாழு (enjoy the day)"  என்பதாகும். சமீபத்தில் வெளிவந்த 180 படத்தின் கதாநாயகன் கூட இப்படி சொல்வதாக ஒரு காட்சி இருக்கிறது. நேற்று என்பது இறந்த காலம், நாளை என்பது நிச்சயமில்லை. இன்று என்பதே நிச்சயம். இன்று நாம் மகிழ்ச்சியுடன் இருந்தாலே பெரிய விஷயம், நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி நினைக்காமல் இன்றைய நாள் மகிழ்சியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். நல்ல சாப்பாடு சாப்பிடாமல், நல்ல உடை உடுத்தாமல், வெளியே எங்குமே செல்லாமல் வாழ்நாள் பூராவும் சேர்த்து வைத்து என்ன பயன் என்று தெரியாமலேயே நிறைய பேர் பணம், பணம் என்று சேர்த்து வைப்பதில் குறியாக இருக்கிறார்கள். இவர்கள் யாருக்குமே வாழ்வு நிறைவாக இருக்காது, இவர்கள் குழந்தைகள் சந்தோஷமாக வளரமாட்டார்கள். பெற்றோரை மதிக்க மாட்டார்கள். இது போன்றோரின் கடைசி காலம் மிகுந்த துன்பமாகவே இருக்கும் என்கிறார் ஜான்.

ரகசியம் #5 : நீ அடைவதைவிட  அதிகமாக கொடு:

Bill Gates, Warren Buffet போன்ற உலக மகா கோடீஸ்வரர்கள் இதைத்தான் செய்கிறார்கள். குழந்தையே இல்லாமல் இருக்கும் நிறைய பேர் வாழ்க்கையை வாழத் தெரியாமல், தேவையே இல்லாமல் கஞ்சத்தனமாக இருப்பதை பார்த்திருப்போம். இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள்? இறந்த பிறகு இவர்களுடைய சொத்து யாருக்கு பயன்படப் போகிறது?

மகிழ்ச்சியாக வாழ்ந்தால், மகிழ்வுடன் நிம்மதியாக இறக்கலாம். 

இதில் என்ன புதுமை? நமக்கு தெரியாத புதிய விஷயம் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லையே என்று சிலர் நினைக்கலாம்; உண்மைதான். ஆனால், எதையுமே நாமாக புரிந்து கொள்ளாமல், வாழ்க்கை கடினமாக இருக்கிறது, சுவாரசியம் இல்லாமல் இருக்கிறது என்பவர்களுக்கு இது ஒரு நல்ல ஊக்கியாக இருக்கும்.

நன்றி: வலைப்பூ: எங்கேயும் எப்போதும்

Friday, March 14, 2014

சாப்பிடு! இது உனக்காக!

பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணியாளையும் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார். மேலும் சாமுவேல் சமையல்காரனை நோக்கி, 'நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப்படுத்தச் சொல்லியிருந்தேனே, அதைக் கொண்டு வந்து வை' என்றார். சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்கு முன் வைத்தான். அப்போது சாமுவேல், 'சாப்பிடு! இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது!' என்றார். (1 சாமுவேல் 9:22-24)

சவுல் அரசனான கதை தெரியுமா? காணாமற்போன தன் தந்தையின் கழுதையைத் தேடி வருகின்றார் சவுல். கழுதையைத் தேடி வந்தவர் அரசனாகத் திரும்புகிறார். இதுதான் கடவுளின் திருவுளம். எங்கே எப்போது திருப்பம் வரும் என்பது அவருக்கே தெரியும்.

ஒவ்வொரு முறையும் நாம் காலண்டரில் திட்டமிடும்போது கடவுள் சிரிப்பார் என்று சொல்வார்கள். ஏனெனில் அவருக்குத் தான் தெரியும் நாளை என்ன நடக்கும் என்று. நாம் நமக்குப் போடும் திட்டங்கள் சாதாரணமானவை. ஆனால் அவர் நமக்குப் போடும் திட்டங்கள் மிகவும் நேர்த்தியானவை.

இன்று வீடுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது திடீரென எனக்குள் தோன்றியது: 'எத்தனை வீடுகளில் நம் காலடி படுகின்றது.' 'நற்செய்தியை அறிவிப்பவர்களின் பாதச்சுவடுகள் எத்தனை அழகானவை' என்று எசாயா உரைத்ததும் நினைவிற்கு வந்தது. கடவுள் எப்போதும் நமக்கென நல்ல பங்கையைத் தெரிவு செய்கின்றார். ஒவ்வொரு இல்லத்திலும், உள்ளத்திலும் நான் காலடியை விடுகின்றேனா? தடயத்தை விடுகின்றேனா? இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. காலடித்தடம் பாதுகாக்கப்படும். தடயம் ஆய்வு செய்யப்படும். காலடித்தடங்கள் மற்றவர்களின் மேல் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். தடயங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சவுல் பெற்ற முதலிடத்தைப் பாருங்களேன். அவர் தேடி வந்ததோ தன் கழுதையை. ஆனால் பங்கேற்பது விருந்தில். அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களைவிட அவருக்கே முக்கிய இடம் தரப்படுகின்றது. முக்கிய இடம் மட்டுமல்ல உணவிலும் சிறப்பான பகுதியே அவருக்குப் பரிமாறப்படுகின்றது. சவுல் அந்நேரம் என்ன நினைத்திருப்பார்? 'எனக்கெதுக்கு இதெல்லாம்?' என்று கேட்டிருப்பார். 'கடவுளின் வழிகள் கடவுளின் வழிகளே!'

இன்று நான் கற்றுக் கொண்டது இதுதான். வாழ்க்கை கழுதையைத் தேடுவது போல இருந்தாலும், எங்கே போகிறோம், என்ன நடக்கிறது என்பது புரியவில்லையென்றாலும் தொடர்ந்து கழுதையைத் தேடுவோம். நமக்கும் எங்காவது ஒரு விருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். யாராவது ஒருவர் சிறப்பான இறைச்சியை நமக்காக எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம். அழைக்கப்பட்டவர்களை விட நமக்கு முதன்மையான இடம் வழங்கப்படலாம்!

Wednesday, March 12, 2014

நீங்கள் ஒரு உருவகம்

'நாம் வாழும் உருவகங்கள்' (The Metaphors We Live By) என்ற ஒரு புத்தகத்தை வாசித்தேன். நாம் பயன்படுத்தும் மொழியில் பல உருவகங்கள் உள்ளன என்று சொல்லும் ஒரு புத்தகம். மொழி ஒரு விநோதமான மனிதப் படைப்பு. கடவுள் மொழியைப் படைக்கவில்லை. மனிதர்கள் தங்களுக்கென்று கட்டமைத்துக்கொண்ட ஒரு உன்னதமான ஊடகம் மொழி.

மொழி மனிதர்களுக்குத் தரப்பட்டது அவர்கள் வெளிப்படுத்த அல்ல, மறைத்துக்கொள்ளவே! என்பார் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். மொழியால் வெளிப்படுத்தவும் முடியும், மறைக்கவும் முடியும். 'எனக்குத் தலைவலி!' என நீங்கள் என்னிடம் சொல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்த இரண்டு வார்த்தைகள் நீங்கள் இந்த நிமிடத்தில் அனுபவிக்கும் வலியை முழுமையாகச் சொல்லிவிடுமா? எனக்கு என்றோ ஏற்பட்ட தலைவலியை வைத்துத்தான் நான் 'தலைவலி' என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 'தலைவலி' என்ற வார்த்தை முழு தலைவலியையும் உணர்த்திவிடுவது இல்லை. அப்படியென்றால் மொழி மறைக்கத்தானே செய்கின்றது.

உருவகம் என்ற ஒன்றை மட்டும் இன்று நாம் சிந்திப்போம்.

'மேல்' என்பது உயர்ந்து என்றும், 'கீழ்' என்பது தாழ்ந்து என்றும் நாம் உருவகம் செய்கின்றோம். அவன் வாழ்வில் படிப்படியாய் மேலே சென்றான் எனவும் அவன் எண்ணங்கள் மிகவும் கீழாக இருக்கின்றன எனவும் சொல்கின்றோம். இதில் முதலில் வரும் 'மேலே' என்பது உயர்ந்தது எனவும், பின் வரும் 'கீழே' என்பது தாழ்ந்தது எனவும் அர்த்தம் தருகின்றது. இது இடம் சார்ந்த உருவகம்.

உருவகத்திற்கு இரண்டு உலகங்கள் உண்டு. ஒன்று அது நேரடியாக உணர்த்தும் பொருள். மற்றொன்று நேரடியைத் தாண்டிச் செல்லும் பொருள்.

'ஆண்டவர் என் ஆயன்!' என திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். இதில் 'ஆயன்' என்பது உருவகம். இது உணர்த்தும் முதல் பொருள் 'ஆடுகளை மேய்க்கும் ஒரு நபர்'. இது காட்டும் இரண்டாவது பொருள்: 'ஆடுகளை மேய்ப்பவர் ஆடுகளைக் கண்காணிக்கின்றார். அதே போல இறைவன் நம்மைக் கண்காணிக்கின்றார்'. கண்காணிக்கும் அல்லது வழிநடத்தும் பணி ஆயனுக்கும், ஆண்டவருக்கும் பொதுவாக இருப்பதால் அந்த நிலையில் 'ஆண்டவர் என் ஆயன்' எனச் சொல்லுகின்றோம்.

உருவகங்களை அப்படியே திருப்பிப் போட்டால் பொருள் வராது. மேற்சொன்ன வார்த்தைகளையே திருப்பி 'ஆயன் என் ஆண்டவர்!' என்று சொல்ல முடியுமா? தமிழில் இலக்கிய நடையில் சொல்லலாம். ஆனால் உரைநடையில் இதைப் பொருள் கொண்டால் ஆடு மேய்க்கும் ஒருவர் தான் என் ஆண்டவர், மாடு மேய்ப்பவரோ, ஒட்டகம் மேய்ப்பவரோ அல்ல என மாறிவிடும். 

இந்த உருவகங்கள் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

ஒவ்வொரு மனிதரும் ஒரு உருவகம். நாம் பார்க்கும் ஒன்றைத் தாண்டி பார்க்காத ஒன்றை அவர் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார். அதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். சில நேரங்களில் இதுதான் அர்த்தம் என நாம் சுருக்கிக் கொள்கின்றோம். சில நேரங்களில் 'இப்படி இருக்குமோ?' என்று பெரிதாக்கி விடுகிறோம். 

மொழி திரைப்படம் பார்த்திருப்பீர்கள். வார்த்தைதான் மொழி என்பது கிடையாது. மௌனம் கூட மொழிதான். நம் வாழ்வில் உள் நுழையும் வார்த்தைகளுக்கும் அர்த்தம் உண்டு. உள் நுழையாத மொளனங்களுக்கும் அர்த்தம் உண்டு.

நம்மால் மொழியின் சின்ன கட்டமைப்பையே புரிந்து கொள்ள முடியவில்லையே பின் எப்படி இதை உருவாக்கிய மனிதர்களையோ, அதற்குத் தூண்டிய கடவுளையோ புரிந்து கொள்ள முடியும்?

நம் வாழ்வில் உருவகங்களாக வரும் உன்னதர்களை வெறும் உருவங்களாகச் சுருக்கி விடாமல் இருந்தாலே போதும்!

Tuesday, March 11, 2014

கடவுளின் சிரிப்பு

பின் அமட்சியா ஆமோசைப் பார்த்து, 'காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு. யூதாவின் நாட்டிற்கு ஓடிவிடு. அங்கே போய் இறைவாக்குரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே. ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்' என்று சொன்னான். ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: 'நான் இறைவாக்கினன் அல்ல. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டிருந்த என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, 'என் மக்களாகிய இஸ்ராயேலிடம் சென்று இறைவாக்குரைத்திடு' என்று அனுப்பினார். (ஆமோஸ் 7:12-15)

நேற்றைய தினம் வீடு சந்திப்பைப் பற்றிப் பார்த்தோம். என் அறைக்கு வந்தவுடன் எனக்குள் ஒரு கேள்வி: 'இன்னும் இங்கிருக்க வேண்டுமா? இன்னும் அருட்பணி நிலையில் இருக்க வேண்டுமா? என் பணிதான் யாருக்கும் தேவையில்லையே? 'இங்கிருந்து போய்விடு!' என்று மறைமுகமாக அவர்கள் சொல்கிறார்களே? ஏன் நான் மட்டும் கஷ்டப்பட வேண்டும்?'

இந்தக் குழப்பத்தோடே இன்று வகுப்பிற்கும் சென்றேன். மோசேயின் அழைப்பை பற்றி இன்று படித்தோம். மோசே ஏன் கடவுளைப் பார்த்துக் கேள்விகள் கேட்டார்? என்ற கேள்வியுடன் வகுப்பு தொடங்கியது. 

நமக்கு மேல் இருக்கும் ஒருவர் நம்மை எங்காவது போக அனுப்பினால் உடனடியாக நாம் 'சரி' என்போம். அல்லது நம் பயோடேட்டாவை எடுத்து, 'போவதற்கு நான் தான் சரியான ஆள். நான் இவ்வளவு படித்துள்ளேன். என்னிடம் நிறைய டேலன்டுகள் இருக்கின்றன. நானே செல்வேன்!' என்று கூட சொல்லியிருப்போம். ஆனால் மோசே கடவுள் அழைத்தும் மறுக்கின்றார். ஏன்?

இறைவாக்கினர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினாலோ, தங்களின் உயர்ந்த நோக்கங்களுக்காகவோ இறைவாக்குப் பணியைத் தெரிந்து கொள்வதில்லை. மாறாக, அது அவர்கள் மேல் கடவுள் சுமத்துகின்ற பணி. கடவுளின் முன்னிலையில் பயோடேட்டாவிற்கும், விசிட்டிங் கார்டிற்கும் வேலைகள் இல்லை.

தங்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை முன்வைக்கும் இறைவாக்கினர் ஒரு தோல்வியாகவே மாறிவிடுகிறார்.

எனக்கு இந்த மக்களைப் பிடிக்கும் எனவும், பிடிக்காது எனவும் ஒரு இறைவாக்கினர் சொல்ல முடியாது. 'இவர்கள் இப்படி இருந்தால் தான் நான் இங்கு இருப்பேன்!' எனவும், 'அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் இருக்க மாட்டேன்!' என்று சொல்லவும் உரிமை இல்லை.

திருமணத்தில் இணையும் கணவன் மனைவிக்கு இடையேயான அன்பு கனிந்து ஒரு வருடத்தில் குழந்தை என்ற உயிராக, காணாத அன்பின் காண்கின்ற அடையாளமாக மாறுகின்றது. அவ்வளவு சீக்கிரத்தில் அருட்பணி நிலையில் அன்பு கனிந்து விடுவதில்லை. ஆகையால் தான் 'உடனடியாக!' எதுவும் பலன் இருப்பதாகத் தெரிவதில்லை.

'நான் படித்து என்ன பயன்?' 'நான் மறையுரை வைத்து என்ன பயன்?' 'நான் வீடு சந்தித்து என்ன பயன்?' என்று மூளை வேகமாகக் கேள்விகள் கேட்கின்றது. இந்த மூளை இப்படிக் கேட்கும்போதெல்லாம் கடவுள் 'ஏனப்பா இவ்வளவு அவசரம்! நானே உலகைப் படைக்க ஆறு நாள் ஆயிற்றே! நீ ஏன் இவ்வளவு குதிக்கிறாய்?' என்று மெல்லிய புன்னகை செய்வார்.

ஆமோசின் வார்த்தைகளையே இன்று என் வார்த்தைகளாக எடுத்துக் கொள்கிறேன்:

'நான் ஒரு ஆடு மேய்ப்பவன்.
நான் அத்திமரத் தோட்டக்காரன்.
அருட்பணி என் தொழில் அல்ல.
வேறு தொழிலில் தான் நான் இருந்தேன்.
என்னை அழைத்தவரே இங்கு அனுப்பினார்.
நீ விரும்புகிறாயோ... இல்லையோ இறைவாக்குரைப்பேன்!'

கடந்த ஞாயிறு 'மாலினி 22 பாளையங்கோட்டை' திரைப்படம் பார்த்தேன். அந்தத் திரைப்படத்தில் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மாலினி சிறையில் அடைக்கப்படுவார். அவருக்கு கடிதம் எழுதுகின்ற அவரின் நலவிரும்பி இப்படி எழுதுவார்:

'சிறையின் தனிமையில் அழுதுகொண்டோ, வருத்தப்பட்டுக்கொண்டோ நாட்களை வீணாக்கி விடாதே. அந்தத் தனிமையில் உன்னோடு பேசு. உன்னையே முழுவதுமாக அறிந்து கொள். சிறையிலிருந்து வெளிவந்த பலர் இரும்பு மனிதர்களாக மாறியிருக்கின்றனர். நீயும் அப்படியே வா!'

வெளிநாட்டின் தனிமையில் அழுதுகொண்டும், வருத்தப்பட்டுக்கொண்டும் நாட்களை வீணாக்கி விடாதே கண்ணா!

கடவுளை யாரும் தேடுவதில்லையே ஏன்?

இன்று முதல் எங்கள் பங்கில் பாஸ்கா கால வீடு மந்திரிப்பைத் துவங்கினோம். எனக்காக ஒதுக்கப்பட்ட வீடுகள் 60. கடந்த வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததை நான் பார்த்தேன். வழக்கமாக அருட்பணியாளர்களை அழைத்துச் செல்லும் தன்னார்வ உள்ளம் கொண்டவர்கள் ஒருவரையும் காணோம். எல்லாரும் தனித்தனியாகச் செல்ல வேண்டும் என முடிவு எடுத்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றோம். நான் சென்ற அபார்ட்மண்டில் 60 இல்லங்களில் 13 இல்லங்களில் கதவைத் திறக்கவே இல்லை. 24 வீடுகளில் 'வேண்டாம்' எனச் சொல்லி விட்டார்கள். 2 வீடுகளில் அடையாள அட்டை காட்டச் சொன்னார்கள். 21 வீடுகளில் மட்டும் செபம் செய்து விட்டு வந்தேன்.

'கடவுள் வேண்டாப் பொருள் ஆகிவிட்டாரா?'

'கடவுளை யாரும் தேடுவதில்லையே ஏன்?'

'ஏன் இந்த மாற்றம்?'

பயணம் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்பார்:

'கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் மக்கள் எப்படி இருப்பார்கள்?'

மற்றவர் சொல்லுவார்:

'ஒவ்வொருவரும் அவரது சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியிருப்பர்!'

கடவுள் நம் வளர்ச்சிக்குத் தடையா? வளர்ந்து விட்டதால் கடவுள் தேவை இல்லையா?

செக்யுலர் (secular) ஆகிவிட்டோம் என்று சொல்வது கடவுளை ஒரேயடியாக வெளியேற்றுவது என்று அர்த்தமா?

இவ்வளவு கேள்விகள் என் உள்ளத்தில் இருந்தாலும் என் அறைக்குள் நுழைந்தவுடன் என் டேபிளில் இருந்த குழந்தை இயேசுவின் சுரூபம் முன் முழந்தாளிட வேண்டும் எனத் தோன்றியது.

Monday, March 10, 2014

Sin in the Eyes of God

(I liked a quote which I read in an article in a Lenten Magazine)

I am worried that you steal but I am more worried that you do not trust in my providential care.


I am worried that you are interested in momentary pleasure but I am more worried that you do not long for my everlasting pleasure.


I am worried that you are interested in physical pleasure but I am more worried that you do not care for the mental and spiritual pleasure that I offer.

I am worried that you place your total trust in man but I am more worried that you underestimate and loose my power.

I am worried that you prefer conditional human love but I am more worried that you do not own my unconditional love.

I am worried that you get angry but I am more worried about your health and that you do not realize my presence in others.

I am worried that you believe in other gods but I am more worried that you do not benefit the joy of faith in me, the only God.

I am worried that you lie but I am more worried that you do not speak me, THE TRUTH and be at peace.

I am worried that you love darkness but I am more worried that you have not accepted me THE LIGHT and enjoy life.

I am worried that you kill but I am more worried that you do not realize that it is my life which is for you.

I am worried that you do not like me but I am more worried that you hate that I love you.

I am worried that you are a glutton but I am more worried that you do not find more pleasure and nourishing in my body and blood.

I am worried that you become slave to devil but I am more worried that you refuse the freedom that I offer.

I am worried that you neglect me but I am more worried that you destroy yourself.

I am worried that you go to hell but I am more worried that you do not enjoy the heavenly bliss.

I am worried that you do not ask me pardon but I am more worried that you do not even accept my pardon.

I am worried that you do not meet me but I am more worried that you do not give me appointment.

I am worried that you do not ask me but I am more worried that you do not even accept what I give you.

I am worried that you close your heart to me but I am more worried that you do not permit me to fill your heart with my grace.

I am worried that you fill your heart with your impure thoughts but I am more worried that you just neglect pure thoughts to fill you and shape you.

I am worried that you walk on the wrong path but I am more worried that  you do not walk on  THE PATH.

I am worried that you like others’ things but I am more worried that you do not love others and share your things with others.

I like when you cry over your sin but I like more when you enjoy my forgiving love.

I like when you acknowledge your weakness but I like you more when you acknowledge my might.

I like you when you realize that you are not good but I like when you realize that I am more good.

I like when you give up your sins but I like more when you grow in holiness.

I like when you see good even in the bad people but I like more when you see me in them.

I like when you think about me but I like more when I think about you.