Tuesday, March 26, 2019

திருச்சட்டம்

இன்றைய (27 மார்ச் 2019) நற்செய்தி (மத் 5:17-19)

திருச்சட்டம் நிறைவேற்றுதல்

இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 4:1,5-9) மோசே இஸ்ரயேல் மக்கள் திருச்சட்டத்தை அன்பு செய்வதன் அவசியத்தை அறிவுரையாகத் தருகின்றார். மோசேயைப் பொறுத்தவரையில் திருச்சட்டம் என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்வியல் அடையாளம். ஏனெனில், இறைவனே தேர்ந்துகொண்டு, இறைவனே தமக்குரியவர்களாகக் கொண்டாடி, இறைவனே உரிமைச்சொத்தாக்கிக் கொண்ட ஒரே இனம் இஸ்ரயேல் இனமே.

இங்கே, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை என்பது இஸ்ரயேல் மக்களின் பிறப்புரிமையாக மாறிவிடுகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால், இப்படிப்பட்ட புரிதலில் இறைவன் ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமாதாக இருக்கும்.

இயேசு இந்தப் புரிதலை மாற்றுகின்றார். அதாவது, திருச்சட்டத்தைக் கையில் வைத்திருப்பதில் அல்ல, மாறாக, அதை நிறைவேற்றுவதில்தான் உரிமைநிலை இருக்கிறது என்கிறார் இயேசு.

திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து அதைக் கற்பிப்பதில் அடங்கியுள்ளது.

ஆக, விண்ணரசில் சிறியவராவதும் பெரியவராதும் நம் கைளில்தான் இருக்கிறது!

1 comment:

  1. " திருச்சட்டத்தைக் கையில் வைத்திருப்பதில் அல்ல; மாறாக அதை நிறைவேற்றுவதில் தான் உரிமை நிலை இருக்கிறது." பல நேரங்களில் எப்பொழுதும் கைகளில் வேதாகமும், வாயில் வசனமுமாக உலவும் நமது பிரிந்து போன சகோதரரைக்கண்டு (இப்பொழுதெல்லாம் நம்மவரும் கூடத்தான்) பொறாமைப்பட்டுள்ளேன்."திருச்சட்டத்தைக் கடைபிடித்து அதைக் கற்பிப்பதில் அடங்கியுள்ளது" எனும் தந்தையின் வரிகள் கொஞ்சம் விழிப்புணர்வைத்தருகின்றன.
    இந்த விடுதலைப்பயணம் நூலையும் விசேஷமாக மோசேயையும் பற்றி வாசிக்கும் இந்நாட்களில் மோசேயின் மேலும்,அவரது தலைமைத்துவம் மேலும் ஒரு மரியாதையும்,பிடித்தலும் வருகிறது.நம் அருட்பணியாளர்கள் அனைவரும் இத்தகைய மோசேக்களாக மாற இறைவேண்டல் செய்வோம்.

    ReplyDelete