Tuesday, March 12, 2019

யோனாவின் அடையாளம்

இன்றைய (13 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 11:29-32)

யோனாவின் அடையாளம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய பணியின் அடையாளமாக யோனாவை முன்வைக்கிறார்: 'யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.'

இன்றைய முதல் வாசகம் (காண். யோனா 3:1-10) யோனாவின் பணியை மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இறைவாக்கினர் யோனா ஒரு வித்தியாசமான நபர். அவருக்கு இறைவாக்குப் பணிசெய்யப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர் இறைவனிடமிருந்து தப்பி ஓடுகிறார். ஆனாலும், கடலில் தூக்கி எறியப்பட்டு மீனின் வயிற்றில் வாழ்கிறார். பின் நினிவே நகரில் ஏனோ தானோவென்று இறைவாக்குரைக்கிறார்.

மூன்று நாள்கள் நடந்து கடக்கக் கூடிய நினிவே நகரத்துக்குள் சென்று, 'இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்' என்று ஒரே மூச்சில் இறைவாக்குரைத்து முடிக்கிறார். அவருடைய பேச்சைக் கேட்டு அரசன் முதல் கால்நடைகள் வரை நோன்பிருக்கின்றன. கடவுளும் நினிவே நகரைத் தண்டியாமல் விடுகின்றார்.

ஏனோதானோ என்று செய்யப்பட்ட யோனாவின் பணியே இவ்வளவு மாற்றத்தைக் கொணர்ந்தது என்றால், தன் பணி எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற எண்ணத்தில்தான், 'இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!' என்கிறார்.

யோனா இறைத்திருவுளத்திலிருந்து தப்பி ஓடினார் - இயேசு இறைத்திருவுளம் நிறைவேற்றினார்!
யோனா அவசர அவசரமாக இறைவாக்குரைத்தார் - இயேசுவின் பணி மிக மெதுவாக நடந்தேறுகிறது!
யோனா போதிக்க மட்டுமே செய்தார் - இயேசுவோ தன் போதனையோடு வல்ல செயல்களும் ஆற்றினார்!

யோனாவைவிடப் பெரியவர் இயேசு!

ஆனால், மனமாற்றத்தில் நினிவே மக்களை விட நாம் பெரியவர்களா? என்றால், அதுதான் இல்லை.

'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனநிலை நம் மனமாற்றத்தைத் தள்ளிப்போடுகின்றது.

4 comments:

  1. மனமாற்றத்தில் நினிவே மக்களை விட நான் மேலானவளா?
    ஒவ்வொரு தனிமனிதனும், ஆத்மார்த்தமாக கேட்க வேண்டிய கேள்வி...
    நன்றி அருட்பணி.யேசு...
    நம் ஒவ்வொருவரின் பதிலும் நம் வாழ்வை வளமாக்கட்டும்... ஆமேன்.

    ReplyDelete
  2. யோனா இறைத்திருவுளத்திலிருந்து தப்பி ஓடினார்- இயேசு இறைத்திருவுளம் நிறைவேற்றினார்!
    யோனா அவசர அவசரமாக இறைவாக்குரைத்தார்- இயேசுவின் பணி மிக மெதுவாக நடந்தேறுகிறது!
    யோனா போதிக்க மட்டுமே செய்தார்- இயேசுவோ தன் போதனையோடு வல்ல செயல்களும் ஆற்றினார்!
    யோனாவை விடப் பெரியவர் இயேசு!..... உண்மையே!
    ஆனால் மனமாற்றத்தில் நினிவே மக்களைவிட நாம் ஏன் பெரியவர்களாக இருக்க முடியாது?.... கண்டிப்பாக முடியும்..... " நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை " இன்றே பார்த்து விடுவோம்" என்ற மனநிலைக்கு மாற்றி விட்டால் எதுவும் சாத்தியமே! ஒரு சவாலை மேற்கொள்ள ஏற்றதொரு மனநிலையை சாதகமாக்கிய தந்தைக்கு ஒரு " வணக்கம்!"

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நன்றி அய்யா மிகவும் வித்தியாசமான மற்றும் சிந்திக்கவேண்டிய பயனுள்ள செய்தி

    ReplyDelete