Friday, April 7, 2017

ஒரு மனிதன் மட்டும்

'உன்னிடம் ஒரு புதையல் இருக்கிறது' - இப்படி உன் சொந்த ஊர்க்காரனிடம் சொல்.

அவன் முதலில் உன்னை நம்ப மாட்டான்.

மீண்டும் சொல்லிப்பார்.

இப்போது அவன் உன்னைக் கொல்ல வழி கண்டுபிடிப்பான்.

- இப்படி எழுதுகிறார் பவுலோ கோயலோ.

தன்னிடம் இறையாட்சி இருக்கிறது என்றும்,

தான் இறைமகன் என்றும் இயேசு சொல்கின்றார்.

முதலில் யாரும் நம்பவில்லை.

மீண்டும் மீண்டும் சொன்னார்.

இப்போது அவரை கொல்ல தேடுகிறார்கள்.

'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 
இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது.'

இதே காரணம்தான் இன்றைய ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் சொல்லப்படுகிறது:

'ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாநிலம் தியாகம் செய்வது தவறன்று.'
பெரியதன் நலனுக்காக சிறியதை அழிப்பது - இது ஒரு முதலாளித்துவ சிந்தனை.

சிறியது எல்லாம் வாழத் தகுதியற்றதா?

அல்லது

இதுதான் வாழ்க்கை எதார்த்தமா?

1 comment:

  1. இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்கள் பவுலோ கோயலோவின் வார்த்தைகளில் எதிரொலிப்பதை உணர முடிந்த நம்மால் ,பவுலோ கோயலின் வார்த்தை எதார்த்தங்கள் தந்தையின் வரிகளில் கோபமாக,விரக்தியாக எதிரொலிப்பதையும் உணரமுடிகிறது." இனம் முழுவதும் அழிந்து போவதைவிட,ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது."... அன்று பிலாத்து உச்சரித்த வார்த்தைகளை மெய்யாக்குகிறது இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் நம் ஆதிக்க வர்க்கம்." சிறியது எல்லாம் வாழத்தகுதியற்றதா? அல்லது இதுதான் வாழ்க்கை எதார்த்தமா? " தந்தையின் குமுறலில் உள்ள நியாயம் இங்கே யாருக்குப் புரியப்போகிறது? நாம் எழுப்பும் சத்தம் எல்லாமே விழலுக்கிறைத்த நீர்; செவிடன் காதில் ஊதிய சங்கு.சம்பந்தப்பட்ட மக்களின் குரல் இறைவன் செவிகளிலாவது விழுந்தால் சரி! உணர்ச்சிப் பிழம்பானதொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete