திருத்தூதர் பணிகள் நூலில் வரும் பல கதைமாந்தர்களில் என் மனம் தொட்ட சிலரில் ஒருவர் கமாலியேல். கமாலியேல் என்றால் 'கடவுள் வலிமையானவர்' என்பது பொருள்.
திருத்தூதர்கள் தலைமைச்சங்க காவலர்களால் பிடித்துவரப்படுகின்றனர். அவர்கள் மேல் தீர்ப்பு சொல்ல வேண்டும். நம் கமாலியேலும் நடுவர்களில் ஒருவர். ஆனால் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
'இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்!'
மூன்று வருடங்களுக்கு முன்னால் நானும் என் நண்பர் அருள்திரு ஜூலியும் இணைந்து ஒரு புத்தகம் எழுதலாம் என நினைத்தோம். ஆனால் இன்றும் அது நினைவிலேயே இருக்கிறது.
'இந்த புத்தகம் வருமா? வராதா?' என நான் கேள்வி எழுப்பியபோது, ஜூலி சொன்ன வார்த்தைகள் கமாலியேலின் வார்த்தைகளே.
கமாலியேல் மிகவும் புத்திசாலி. வாழ்வின் தத்துவத்தை மிக எதார்த்தமாக அறிந்து வைத்திருந்த ஞானி.
தன் சமகாலத்தில் சுற்றித்திரிந்த யூதா என்பவன் கிளர்ச்சி செய்யும்படி மக்களை தூண்டுகிறான். ஆனால் அவனுடையது மனித தொடக்கம் என்பதால் அப்படியே முடங்கிவிடுகிறது.
நாளைய நற்செய்தியிலும் இதே உண்மையைத்தான் பார்க்கின்றோம்.
மக்கள் பசியால் வாடுகின்றனர். பாலை நிலம். ரொட்டி இல்லை.
இரண்டு தீர்வுகள் வருகின்றன பிரச்சினைக்கு: முதல் தீர்வு சீடர்களிடமிருந்து - இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்குவது. இரண்டாம் தீர்வு இயேசுவிடமிருந்து - தன் தந்தையின் பராமரிப்பில் நம்பிக்கை கொள்வது. சீடர்களின் தீர்வு அப்படியே முடங்கிப் போகிறது. இயேசுவின் தீர்வு பசி போக்குகிறது. பசி போக்கியது மட்டுமல்லாமல் பன்னிரண்டு கூடைகளில் சேகரிக்கும் அளவிற்கு நிரம்பி வழிகிறது.
நம் வாழ்வில் நாம் எதைத் தொடங்கினாலும்,
அதன் 'அ'கரமாய் இறைவன் இருக்கட்டும்.
'அ'கரத்தை 'ன'கரம் காணச்செய்பவர் அவரே!

Your detailing on few insignificant characters are too good, Father. This post and the one about the person who directed Joseph to his brothers.
ReplyDelete"கடவுளைச் சார்ந்திராத எந்தத் திட்டமும் செயலும் அழிந்து போகும்.கடவுளைச் சார்ந்தது எனில் எந்தக் கொம்பனும் அதைத் தகர்க்க முடியாது" இதுவே இன்றையப் பதிவின் சாராம்சம்.அவரைச்சார்ந்திருக்கும் போது நம் பசி மட்டும் தணிவதில்லை;நம் கூடைகளும் நிரம்புகின்றன என்பது ஒருவர் வாழ்ந்து பார்த்து உணரவேண்டிய உண்மை."நம் வாழ்வில் எதைத்தொடங்கினாலும் அதன் 'அ'கரமாய் இறைவன் இருக்கட்டும்.'அ'கரத்தை 'ன'கரம் காணச்செய்பவர் அவரே" இதே சிந்தனையைத் தந்தையே..தாங்களும்,தந்தை ஜூலியும் செயலாக்கலாமே! என்ன தயக்கம்? நினைவை நிஜமாக்க வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்....அன்புடன்...
ReplyDelete'அகரமும் னகரமும் நானே' என்று திருவெளிப்பாட்டில் மட்டும் அல்ல, நம் வாழ்க்கையிலும் அவரே எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று அனுபவத்தோடு கூறுவது பாராட்டுக்குரியது.
ReplyDeleteI tend to disagree with Mr. Gamaliel. The situation in Tamilnadu is a typical sample. No rain, no jobs, farmers are dying, politicians are worried about "two leaves, single leaf or one leaf". There is bandh and dharna everywhere. The walls of our cities are full of poster that belong to useless women and men. I am afraid I cannot follow Mr. Gamaliel's principle - perhaps!
ReplyDeleteArumai... iraivanin vaarthai inimaye... athan marai vilakam migavum nanru.. vaalthukkal..
ReplyDelete