Monday, April 24, 2017

மாற்கு

நாளை நற்செய்தியாளர் தூய மாற்குவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவரைக் குறித்தே பேதுரு, 'என் அன்பு மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்' என தன் திருமடலில் எழுதுகிறார்.

தொடக்ககால திருச்சபையில் தந்தை-மகன் உறவு திருத்தூதர்கள் மத்தியில் நிலவியிருப்பதை இது காட்டுகிறது.

அதாவது, முன்பின் தெரியாதவரைக் கூட நற்செய்தியும், இறையரசுப் பணியும் இரத்த உறவைப்போல இணைத்துவிடுகிறது.

சீடர்களின் மனப்போராட்டத்தை மிக அழகாக பதிவு செய்தவர் மாற்கு.

தானே போராடியதால்தான் என்னவோ மற்றவர்களின் போராட்டத்தை மிக எளிதாக இனங்கண்டுகொள்கிறார் மாற்கு.

2 comments:

  1. பவுல் உள்பட்ட பல திருத்தூதர்கள் தாங்கள் எழுதிய திரு முகங்களில் பாசத்தின் வெளிப்பாட்டைப் பார்க்க முடிகிறது.திருத்தூதர் பவுல் திமோத்தேயுவுக்கு எழுதிய மடல்களில் ' என் அன்பு மகன் திமோத்ததேயுவுக்கு' என்ற வரிகள் படிப்பவருக்குப் புளங்காகித்த்தை ஏற்படுத்தும்.முன்பின் தெரியாதவரைக்கூட நற்செய்தியும்,இறையரசுப்பணியும் உறவைப்போல் இணைத்து விடுகிறது. உண்மைதான்.போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்த ஒருவனால்தான் அடுத்தவரின் மனப்போராட்டத்தைப் புரிந்து கொள்ள இயலும் என்பதையும் மறுக்க இயலாது.இதில் ஒரு திருத்தூதர் என்ற உறவையும் மிஞ்சி ஒரு 'தாய்மை' என்ற உணர்வும் தேவை.இது மாற்குவிற்கு அதிகமாகவே இருப்பது புரிகிறது.தந்தைக்குள்ளும் இத்தகையதொரு உணர்வு ஒளிந்திருப்பதை உணரமுடிகிறது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. That 'maternal feelings' lie hidden deep down in the heart of Mark is a wonderful finding. Only YESU the scholar is able to detect it for us. Also, it is admirable that a high dose of "maternity" peeps out of YESU, even as he is Jesus' FATHER!
    Yes, that is cute as well.

    ReplyDelete